ஆந்திராவின் பிரபல அரசியல் வாதியான பவன் கல்யாண் தமிழகத்தில் ஒரு கொலை வழக்கில் மூக்கை நீட்டி சிக்கப்பார்த்தார். நடிகர் விஜய்க்கு முன்மாதிரியான அரசியல்வாதி, தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களை பா.ஜ.க.வுக்கு ஆதரவாக திரட்டும் சக்தி என்றெல்லாம் அறியப் பட்ட பவன்கல்யாண் சமீபத்தில் பா.ஜ.க. நடத்திய முருகன் மாநாட்டுக்குக்கூட வந்துபோனார். தற்போது அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில்  ஒரு குற்றவாளியைக் காப்பாற்ற முயற்சிசெய்தார் என்கிற தகவலறிந்து விசாரணையில் இறங்கினோம். 

கடந்த 8-ஆம் தேதி, ஆந்திராவி லிருந்து சென்னை நோக்கி வரும் பக்கிங்காம் கால்வாயில் சென்னை ஏழுகிணறு காவல் நிலைய எல்லையில் ஒரு பிணம் மிதந்து வந்தது. அந்த பிணத்தைப் பார்த்த போலீசார் அதிர்ந்துபோனார்கள். உடல் முழுவதும் அடித்த காயங்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என சொல்லப்பட்டது. விசாரிக்கத் தொடங்கிய போலீசார், பக்கிங்காம் கால்வாய் பக்கத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்தனர். பிணம் கிடந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் காரில் வந்த ஐந்து பேர் ஒரு உடலைத் தூக்கி பக்கிங்காம் கால்வாயில் போட்ட பதிவுகள் கிடைத்தது. 

அந்த கார் நம்பரை வைத்து தேடியபோது, அந்த கார் தமிழக ஆந்திர எல்லையான பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான கிரண் என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. கிரணிடம் விசாரித்த போது, அவர் தனது காரை ஆந்திராவின் ரேணிகுண்டாவைச் சேர்ந்த சந்திர பாபுவிடம் விற்பனை செய்வதற்காகக் கொடுத்துள்ளார். சந்திரபாபுவை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அந்தக் கார் தங்களுடையது இல்லை என மறுத்தனர். சந்திரபாபுவின் வீட்டிலிருந்த வேலையாட்களின் உருவமும் பிணத்தை கால்வாயில் போட்டவர்களின் உருவமும் ஒத்துப்போனதால்  உஷாரான போலீசார் இறந்தவரின் படத்தை வைத்து அந்தப் பகுதியில் விசாரணையை தொடங்கினர். 

Advertisment

போலீசாரின் விசாரணையில்... இறந்தவர் பெயர் சீனிவாசலு, வயசு 22, பவன் கல்யாண் கட்சியின் காளஹஸ்தி மண்டலச் செயலாளர், காளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போன சந்திரபாபுவின் மனைவி வினுதா கோட்டாவின் தனி உதவியாளர் என பொதுமக்கள் சொன்னார்கள். காளஹஸ்தி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் குபீர் குமார். இவருக்கு தனது எதிரியான வினுதா கோட்டாமீது ஒரு கண். வினுதாவின் அசைவுகளை தினசரி கண்டறிய அவர் சீனிவாசலுவை ஒற்றனாக நியமித்தார். சீனிவாசலு வினுதாவின் அசைவுகளை குபீருக்கு சொல்லிவந்தார். அத்துடன் வினுதாவின் நிர்வாணப் படங்களையும் எடுத்து குபீருக்கு அனுப்பினார்.  ஒரு கட்டத்தில் சீனிவாசலு மீது சந்தேகமடைந்த வினுதா அவரைக் கட்டிவைத்து அடித்து கை கால்களை உடைத்தார். சீனிவாசலுவின் செல்போனை வினுதாவின் கணவர் சந்திரபாபு ஆராய்ந்தபோது வினுதாவின் குளிக்கும் காட்சிகள் மற்றும் உடை மாற்றும் காட்சிகள் அதிலிருந்தது. 

மறுபடியும் சீனிவாசலுவை பிடித்து அடித்து கழுத்தை நெரித்துக் கொன்றனர். பிணத்தை ஆந்திராவில் டிஸ்போஸ் செய்தால் மாட்டிக்கொள்வோம் என யோசித்தவர்கள் வினுதாவின் தகப்பனார் சென்னை அப்பல்லோவுக்கு சிகிச்சை பெற வரும் நேரத்தில் இரண்டு கார்களில் வந்து, இரண்டாவதாக வந்த காரான கிரணின் கார் டிக்கியில் பிணத்தை வைத்துக்கொண்டு வந்து நள்ளிரவில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் போட்டனர். 

கல்லைக் கட்டிப் போடப்பட்ட பிணம் சில நாட்களுக்குப் பிறகு ஏழு கிணறு பகுதியில் வெளியேவந்தது. சென்னை போலீசாரின் புலனாய்வில் வினுதா, சந்திரபாபு, சீனிவாசலுவை அடித்துக்கொன்ற சந்திரபாபுவின் வேலைக்காரர்கள் என ஐந்து பேர் சிக்கினார்கள். வினுதா காளஹஸ்தி பகுதியில் மிகப் பிரபலமான  பெண் தலைவி. சந்திரபாபு, பவன்               கல்யாண் கட்சியின் மாநில ஐ.டி.விங் செயலாளர். இவர்களைக் காப்பாற்ற பவன்கல்யாண் தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் பேசினார். தாங்கள் கைப்பற்றிய சீனிவாசலுவின் செல்போனி லிருந்த வினுதாவின் ஆபாசப் படங்கள் மற்றும் கொலைக்கான காரணத்தை பவன் கல்யாணுக்கு எடுத்துக் கூறியதுடன் ஐந்து பேரை கைதுசெய்ததாக தமிழகப் போலீசார் அறிவித்தார்கள். பரபரப்பான அதிரடி அரசியலுக்குப் புகழ்பெற்ற பவன் கல்யாண், இந்த பரபரப்பான கொலையைப் பார்த்து அதிர்ந்துபோனார். இனி ஒன்றும் செய்யமுடியாது என்பதால் தன் தலை தப்பித்தால் போதும் என தனது முயற்சியைக் கைவிட்டார். 

Advertisment

தற்போது இதுதான் ஆந்திர அரசியலில் பவன்கல்யாணுக்கு எதிராகத் திரும்பி, அவரது தூக்கத்தைக் கெடுத் துள்ளது.

pawankalyan1