எங்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைக் குரலுடன் கிறிஸ்துவ வன்னியர்களின் கூட்டமைப்பு, கடந்த 1 ஆம் தேதி திண்டுக்கல் சகாயமாதா மக்கள் மன்றத்தில் பரபரப்பாகக் கூடியது.
இதில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயரும், தமிழக ஆயர் பேரவையின் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பணிக்குழுவின் தலைவருமான தாமஸ் பால்சாமி கலந்துகொண்டு, கிறிஸ்துவ வன்னியர் களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆயர் ...
"இந்து வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட எம்.பி.சி. சலுகை எங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்து வன்னியர்களின் சலுகைகளை நாங்கள் ஆட்சேபனை செய்யவில்லை. அதே வேளையில் கிறிஸ்துவ வன்னியர்களும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். நம் தமிழகத்தில் 5-ல் இருந்து 6 லட்சம் கிறிஸ்துவ வன்னியர்கள் வாழ்கிறார்கள். எங்கள் கோரிக்கையை வலியுறுத் தும்விதமாக மே 24 அன்று லட்சம் பேரைத் திரட்டி ஒரு பெரிய மாநாட்டை வெள்ளோடு பிரி வில் நடத்த இருக்கிறோம். வட மாவட்டங்களிலும் வன்னிய கிறிஸ்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார் கள். அவர்களும் ஒரு ம
எங்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைக் குரலுடன் கிறிஸ்துவ வன்னியர்களின் கூட்டமைப்பு, கடந்த 1 ஆம் தேதி திண்டுக்கல் சகாயமாதா மக்கள் மன்றத்தில் பரபரப்பாகக் கூடியது.
இதில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயரும், தமிழக ஆயர் பேரவையின் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பணிக்குழுவின் தலைவருமான தாமஸ் பால்சாமி கலந்துகொண்டு, கிறிஸ்துவ வன்னியர் களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆயர் ...
"இந்து வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட எம்.பி.சி. சலுகை எங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்து வன்னியர்களின் சலுகைகளை நாங்கள் ஆட்சேபனை செய்யவில்லை. அதே வேளையில் கிறிஸ்துவ வன்னியர்களும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். நம் தமிழகத்தில் 5-ல் இருந்து 6 லட்சம் கிறிஸ்துவ வன்னியர்கள் வாழ்கிறார்கள். எங்கள் கோரிக்கையை வலியுறுத் தும்விதமாக மே 24 அன்று லட்சம் பேரைத் திரட்டி ஒரு பெரிய மாநாட்டை வெள்ளோடு பிரி வில் நடத்த இருக்கிறோம். வட மாவட்டங்களிலும் வன்னிய கிறிஸ்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார் கள். அவர்களும் ஒரு மாநாட்டை நடத்த திட்ட மிட்டு வருகிறார்கள். அதுவும் மே மாதத்திலேயே நடக்க இருக்கிறது.. நாங்கள் மாநாட்டை நடத்திய சூட்டோடு தமிழக முதல்வரையும் சந்தித்து அவரி டம் எங்கள் கோரிக்கையை வைக்க இருக்கிறோம்.
இந்த போராட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. எங்கள் கோரிக்கை நியாயமானது. ஏனென்றால் எங்களுடைய மக்கள் பொருளா தாரத்திலும், கல்வியிலும், கலாச்சாரத்திலும் பிற் படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்துவருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வடமதுரை கூட்டத்தில் பேசிய இப்போதைய முதல்வர் ஸ்டாலின், வன்னிய கிறிஸ்தவர்களை எம்.பி.சி. பட்டியலுக்குக் கொண்டுவருவோம் என்று சொன்னார். ஆனால் அதை இன்னும் அவர் செய்யவில்லை. ஆகவே எங்கள் ஆதரவும் வாக்கும் வேண்டுமென்றால் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று முதல்வரிடமே தெரிவிக்க இருக்கிறோம். இல்லையென் றால் எங்கள் ஆதரவு இருக்காது. எங்களை எம்.பி.சி. பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது. தலைவர் கலைஞர் தான் முதலில் இந்து வன்னி யர்களுக்கு எம்.பி.சி. பட்டியலில் இடம் கொடுத்தார். அதுபோல் இப்போதைய முதல்வரும், கிறிஸ்துவ வன்னியர்களுக்கு எம்.பி.சி. பட்டிய லில் இடம் தரவேண்டும்''’என்றார் அழுத்தமாக.
ஆயர் தாமஸ் பால்சாமி யின் இந்த அதிரடிச் செயல் பாடுகள், அரசியல் வட்டாரத் திலும், தலித் கிறிஸ்துவ மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
தலித் கிறிஸ்துவ விடுதலை இயக்கம் மற்றும் திருச்சபை தீண்டாமை ஒழிப்பு போராளி களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களான ரிச்சர்டு, ஆனந்தராஜ், இனிகோ, ஸ்டாலின், டொ னால்டு சாம்பவர், லியோ ஆகியோர் நம்மிடம்
"சமீபத்தில் தான் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயரான தாமஸ்பால் சாமி பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பணிக்குழுவின் தலைவரானார். அதற்குள்ளாகவே கிறிஸ்துவ வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடு கிறார். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் தலைவராக அவர் இருந்த போது, எங்கள் உரிமைக்காக எந்த ஒரு போராட் டத்தையும் நடத்தவில்லை. அதேபோல் தலித் கிறிஸ்துவ மக்களுக்காக 10 அம்சத் திட்டம், அதைத் தொடர்ந்து 8 அம்சத் திட்டம் மற்றும் தலித் பாலிசி மூலம் கொண்டு வரப்பட்ட சலுகைகள் எதுவுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் திட்டம் மூலம் என்னென்ன நலத்திட்டங்கள் இருக்கின்றன என்று தனி புத்தகம் போட்டும் கூட, அந்த புத்தகங்கள் எங்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதுபோல் கடந்த நூறு ஆண்டுகளில் தலித் கிறிஸ்துவ மக்களுக்காக வெளிநாட்டில் இருந்து வந்த பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி களையும் முறையாக வழங்கவில்லை. நலத்திட்டங்களுக்கும் செலவு செய்ய வில்லை. திண்டுக்கல்லில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்றால் எங்களுக்கு உரிய மரியாதையும் கொடுப்பதில்லை. நாற்காலியில் உட்காருவதற்கு கூட அனு மதிப்பதில்லை. நவீன தீண்டாமையைக் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் கடந்த 75 வருடமாக அகில இந்திய அளவில் எஸ்.டி., எஸ்.சி பிரிவினருக்கு கிடைத்து வரும் சலுகைகள் தலித் கிறிஸ்தவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று தொடர்ந்து போராடியும் இதுவரை அந்த சலுகைகளை பெற்றுத் தரவில்லை. அந்த அளவுக்கு எங்கள் மக்களின் நலனில் அக்கறை இல்லை. ஆயர் அவருடைய மக்க ளுக்கு மட்டும்தான் ஜாதி விசுவாசம் காட்டிவரு கிறார்'' என்றனர் ஆதங்கத் தோடு.
இது தொடர்பாக மக்கள் தேசம் கட்சியின் மாநில செயலாளர் கிறிஸ்டோபரிடம் நாம் கேட்டபோது... "கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்கவில்லை என்றால் ஆளுங்கட்சி யான தி.மு.க.விற்கு ஓட்டு போட மாட்டோம் என்று வெளிப்படையாகவே ஆயர் பேசியிருக்கிறார். ஆனால் கடந்த ஒரு வரு டத்திற்கு முன்பு இதே ஆயர் எஸ்.சி., எஸ்.டி. பிரி வின்; தலைவராக இருந் தார். அப்போது தான் பாராளுமன்ற தேர்தலும் வந்தது. அப்போது அவர் தலித் கிறிஸ்துவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கவேண்டும். இல்லை யென்றால் ஓட்டு போட மாட்டோம் என்று ஏன் இதேபோல் குரல் கொடுக்கவில்லை. அது மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது என்பதால் கண்டுகொள்ளவில்லை. ஆனால் எம்.பி.சி. தமிழக அரசு கொண்டு வரலாம் என்று தெரிந்துதான் தனது சமூக மக்களுக்காக ஜாதி ரீதியாக அவர் குரல் கொடுத்துக்கொண்டு, தமிழக அரசுக்கு சவால்விடுகிறார். கிறிஸ்தவத்துக்குள் ஜாதியில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கேதான் ஜாதி தலைவிரித்தாடுகிறது'' என்றார் கவலையாக.
இதுகுறித்து மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமியின் கருத்தை அறிய, அவருடைய செய லாளர் போஸ்கோ மூலம் தொடர்புகொள்ள முயன் றோம்.... "ஆயர் பிஸியாக இருக்கிறார்... மற்றபடி ஆயர் ஜாதிரீதியாகச் செயல்படவில்லை'' என்றார்.”