parvai

லைஞானத்தின் நினைவாற்றல்! புகைப்படக் கலைஞர் பர்மா காலனி மானாமதுரை

நக்கீரனின் தொடர்ச்சியான வாசகன் நான். அடிப்படையில் நான் ஒரு ஓவியன் என்பதால், நக்கீரனின் அட்டைப் படம் ஒவ்வொன்றும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் இப்போதைய டிஜிட்டல் யுகத்திற்கு முன், நக்கீரன் ஆசிரியரின் வரைகலையில் உருவான அட்டைப் படங்களே என்னை வெகு வாய் கவர்ந்தவை. தற்போதுவரை அந்த நேர்த்தி தொடர்வது என்னை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதுவே மற்ற இதழ்களிலிருந்து நக்கீரனை வித்தியாசப்படுத்தி பார்க்க வைக்கிறது.

2019 செப். 18-20 இதழ்:

Advertisment

ஐயா கலைஞானம் இந்த இதழில் எழுதியுள்ள எஸ்.ஏ.நடராஜனின் "எழுச்சியும் வீழ்ச்சியும்' சினிமா ஜாம்பவான் களுக்கு நல்லதொரு பாடம். கலைஞானம் எழுதும் எல்லா கேரக்டர்களும் மிகைப் படுத்தப்படாமலும் சுவைபடவும் இருப்பது தான் சிறப்பு. அதேபோல் கலைஞானத்தின் நினைவாற்றலும் என்னை வியக்க வைக்கிறது. சில சம்பவங்களைக் குறிப்பிடும்போது, அதுகுறித்து எனக்கு அவ்வளவாக நினைவில்லை என்பதை ஒத்துக்கொண்டதற்கு ஒரு சபாஷ்.

மாவலி பதில்களில் சுவாரஸ்யங்களும் இருக்கின்றன, நறுக்கு தெறித்தாற்போல் கருத்துக்களும் இருக்கின்றன. பழ.கருப் பையாவின் "அடுத்த கட்டம்' தொடரில் அனலும் அடிக்கிறது, சுயபுலம்பலும் இருக்கிறது. ஆன்மிகம் பக்கா வியாபார மாகி வெகு நாட்களாகிவிட்டது. அந்த வியாபாரத்தின் இப்போதைய கொளுத்த லாபம்தான் கல்யாண மண்டபமான சிதம்பரம் நடராஜர் ராஜசபை. அரசியல் விளம்பர வெறிக்குப் பலியான சுபஸ்ரீ யின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங் கள்.

செல்பேசியின் ஆக்கிரமிப்பால் வாசிப்பு பழக்கம் குறைந்தபிறகும் நக்கீரன் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பது மட்டுமல்லாமல், வாசகனையும் புதுப்பிக்க வைக்கிறது.

Advertisment

வாசகர் கடிதங்கள்!

இந்தி எதிர்ப்பு!

அமித்ஷாவின் இந்தி ஆதரவுக்கு வட, தென் மாநிலங் களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரி விச்சிருக்காங்க. ஏன், பா.ஜ.க.வின் ஒரு மாகாண முதலமைச்சரும் கூட அவருக்கு செவி சாய்க்க வில்லை. "ஆன்ட்டி இண்டியன்' கட்டுரை முச்சூடும் படிச்சாச்சு. தமிழக அரசின் சார்பில் இது குறித்து ஒரு கருத்தும் ம்ஹும்... கண்ணு ரெண்டும் பூத்துப் போனதுதான் மிச்சம்.

-என்.கே.சேக்கிழார், கும்பகோணம்.

செல்லூராகும் ராதா!

பொன்.ராதாவின் ஆறறிவு, ஆறு மொழி சங்கதிக்கு செம ரெஸ்பான்ஸ். இப்ப நம்ம "வலை வீச்சு'க்கு செல்லூருங்கிற கத்தி போய், பொன்னாருங்கிற வாளு வந்துருச்சு டும் டும் டும் டும்!

-ஆ.நடராஜன், மதுரை.