தற்கால அரசியல் சமூக நிலைப் பாடுகளில் சமநோக்கு பார்வையோடு செயல்பட்டு நக்கீரன் நடத்திய சட்டப் போராட்டங்களைக் கண்டு வழக்கறிஞர் என்ற முறையில் வியந்திருக்கிறேன். அரசியல், சமூகம் தாண்டி மனித குலத்துக்குத் தேவையான மருத்துவம் பற்றியும், அதற்கான விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு தொடர்களை தந்தது நக்கீரன். உதாரணம், டாக்டர் நாராயண ரெட்டி கட்டுரைகள்.
2019, செப். 11-13 இதழ் :
எம்.எல்.ஏ.க் களுக்கு உல்லாச விடுதி, கொடைக் கானலில் எடப்பாடி இடம் வாங்கிக் கொடுத் துள்ள செய்தி யாருக்கும் தெரியாத, வெளிவராத தகவல்.
பழ.கருப்பையா அவர்களின் அரசியல் தொடர் சரவெடியாக உள்ளது. கடந்தகால செய்திகளையும் தகவல்களையும் சம்பவங்களையும், தற்கால அரசியல் நிகழ்வுகளையும் கலந்து தமது கருத்தையும் சேர்த்து விறுவிறுப்பாக கொடுக்கிறார்.
பழி வாங்கும் படலம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானியின் திடீர் பணியிடை மாற்றம். உள்நோக்கத்தை ராங்-காலில் "ரைட்'டாக சொல்லிவிட்டீர்கள்.
"இப்படியும் நடக்குமா? மதமாற்ற சர்ச்சை!' செய்தி சரியான நேரத்தில் வெளியாகியுள்ளது.
_____________
வாசகர் கடிதங்கள்!
வீடுதோறும் கலைஞர்!
காலச்சூடத்தில் கரைந்துவிட்ட கலைஞரை சிலை வடிவத்தில் கட்சிப் பிரமுகர்களுக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் மா.செ. கே.என்.நேரு. இதையே தலைமைக்கழகம், சிறப்பாக கட்சிப் பணியாற்றும் அடிப்படைத் தொண்டர்களுக்கு ஊக்கச்சிலையாக வழங்கி... வீடுதோறும் கலைஞரை கொண்டு சேர்க்கலாம்.
-கே.தாயுமானவன், குளித்தலை.
வெற்றிக்கான தோல்வி!
நிலவின் தென்துருவத்தைத் தொட முயற்சித்த "விக்ரம்' லேண்டரை ஆர்பிட்டரின் கண்கள் நிச்சயம் கண்டறியும். நம்பிக்கை கொள்வோம். இப்பயணம் தோல்வியல்ல... தற்காலிக கோளாறு. எதிர்காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சென்சார் போன்ற சிக்கல் களை எதிர்கொள்வதற்கு "சந்திரயான்-2' அளித் திருக்கும் முன்அனுபவத்துக் கான ஒரு பயிற்சி.
-எஸ்.அணுகாந்தன், மணப்பாறை.