கடந்த பதினைந்து ஆண்டுகளாக "நக்கீரன்' இதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது நக்கீரன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடின்றி எல்லோரையும் நியாயத்தராசில் நிறுத்தி வைத்து, அவர்களின் அகவெளியை துகிலுரித்துத் தொங்க விட்டு விடுகிறது "நக்கீரன்'. இந்த அநியாயங்களை எல்லாம் தட்டிக் கேட்க யாராவது வரமாட்டார்களா என என் மனதில் தோன்றிய பல முக்கிய சமூக பிரச்சினைகள், ஊழல்கள் குறித்து "நக்கீரன்' செய்திகளாக்கி
கடந்த பதினைந்து ஆண்டுகளாக "நக்கீரன்' இதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது நக்கீரன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடின்றி எல்லோரையும் நியாயத்தராசில் நிறுத்தி வைத்து, அவர்களின் அகவெளியை துகிலுரித்துத் தொங்க விட்டு விடுகிறது "நக்கீரன்'. இந்த அநியாயங்களை எல்லாம் தட்டிக் கேட்க யாராவது வரமாட்டார்களா என என் மனதில் தோன்றிய பல முக்கிய சமூக பிரச்சினைகள், ஊழல்கள் குறித்து "நக்கீரன்' செய்திகளாக்கியிருக்கிறது. அப்போது முதல் "நக்கீரன்' இதழ், வாசகர்களின் எண்ணங் களை பிரதிபலிப்பதாகவே உணரத் தொடங்கினேன். அதனால்தான் எத்தனையோ புலனாய்வு இதழ்கள் இருந்தாலும், நக்கீரன் மட்டும் இன்றும் என் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறேன்.
2019, ஆகஸ்ட் 21-23 இதழ்:
சசிகலா சிறையில் இருந்தாலும் தன் அதிகாரத்தைச் செலுத்துகிறார் என்பதையும், அவருடைய பிறந்த நாளுக்காக இந்துசமய அறநிலையத்துறை செய்த சிறப்பு பூஜைகளையும் "நக்கீரன்' மட்டுமே வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. சசி சார்பில் அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்ததை எல்லாம் எப்படித் தான் மோப்பம் பிடித்தீரோ?
தங்கமணி, வேலுமணி ஆகியோரே எடப் பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை மணியாக இருக் கிறார்கள் என்றும், பா.ஜ.க.வின் தந்திரத்தையும் தோலுரித்துச் சொல்வதோடு, யாரை நம்பி இருக்கிறாரோ... அவர்களே பின்னாளில் யூதாஸ் களாகவும், புரூட்டஸ்களாகவும் மாறுவார்கள் என நக்கீரன் மறைமுகமாக எடப்பாடிக்கு "க்ளூ' கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன்.
"அண்ணாவோடு கெஜ்ரி வாலை ஒப்பிட முடியாது என்ற மாவலியின் பதில் "நச்'. வி.பி. சந்திரசேகரின் தற்கொலையின் பின்னணியில் டி.என்.பி.எல். கிரிக்கெட்டிலும் ஊடுருவி யிருக்கும் அரசியல், பணபலம் குறித்து பேசியிருப்பதும் துணிச்சல்.
______________
வாசகர் கடிதங்கள்!
இயலாமையின் பிரதிபலிப்பு!
அரசியல்வாதிகள் மக்களின் தட்ப-வெப்ப சூழ்நிலையைப் புரிந்துகொண்டு களப்பணி யாற்றாமல் பிரசாந்த் கிஷோர், சுனில், ஜான் உள்ளிட்டவர்களின் தேர்தல் மார்க்கெட்டிங் கம்பெனிகளிடம் பணம் கொடுத்துப் பெறுகிற வெற்றி என்பது, கட்சிகளினுடைய இயலாமையின் பிரதிபலிப்பு.
-சு.பிரபாகரன், வேலூர்.
விருது!
கலைஞானம் "சினிமா சீக்ரெட்', "கேரக்டர்' தொடர்கள் மூலம், தனக்கு அறிமுகமான நண்டு சிண்டுவைக் கூட ஞாபகம் வைத்து போற்றிப் பாடுகிறார். நல்ல விஷயம். நகரம் முதல் கிராமம் வரை அவரது புகழைக் கொண்டு செல்ல நக்கீரன் மேற்கொண்ட முயற்சி அளப்பரியது. அவருக்கு "கலைமாமணி' என்பது சிறந்த அங்கீகாரம்.
-அ.மதுமிதா, புதுக்கோட்டை.