பார்வை!-என்.எம்.பி. காஜாமைதீன்

ff

pp

ன்னைப்போல் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு நக்கீரன் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அந்த அளவுக்கு நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் உண்மைச் செய்திகளை தனது புலனாய்வுத் திறனால் அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடிபணியாமல் துணிச்சலோடு நாட்டுமக்களுக்கு வழங்குகிறார். அப்படிப்பட்ட செய்திகளை படிப்பதின் மூலமாக இந்து -முஸ்லிம் -கிறிஸ்தவ ஒற்றுமையை பலப்படுத்துவதற்கும் "நக்கீரன்' ஒரு பாலமாக இருக்கிறது. அதைத்தான் சமூக ஆர்வலரான நாங்களும் அனைத்து சமூக மக்களிடமும் சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன் மூலம்தான் மத்திய-மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்

pp

ன்னைப்போல் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு நக்கீரன் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அந்த அளவுக்கு நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் உண்மைச் செய்திகளை தனது புலனாய்வுத் திறனால் அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடிபணியாமல் துணிச்சலோடு நாட்டுமக்களுக்கு வழங்குகிறார். அப்படிப்பட்ட செய்திகளை படிப்பதின் மூலமாக இந்து -முஸ்லிம் -கிறிஸ்தவ ஒற்றுமையை பலப்படுத்துவதற்கும் "நக்கீரன்' ஒரு பாலமாக இருக்கிறது. அதைத்தான் சமூக ஆர்வலரான நாங்களும் அனைத்து சமூக மக்களிடமும் சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன் மூலம்தான் மத்திய-மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

பொள்ளாச்சி பாலியல் கொடுமையை நக்கீரன்தான் ஆதாரத்தோடு, துணிச்சலோடு வெளியிட்டதே தவிர வேறு எந்த ஒரு பத்திரிகையும் செய்தி வெளியிடவில்லை. அப்படிப்பட்ட உண்மைச் செய்தியை வெளியிட்ட ஆசிரியரையும் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்தனர். அதையும் பொருட்படுத்தாமல் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விசாரணைக்குச் சென்று அதையும் மக்களிடம் வெளிப்படுத்தினார். பொள்ளாச்சி செய்தி மூலம் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இதற்கு முன்பு வீரப்பன், பிரேமானந்தா, நித்யானந்தா, ஆட்டோசங்கர் உள்ளிட்ட முகங்களை உலகிற்கு நக்கீரன் தோலுரித்து காட்டியிருந்தாலும் கூட, நக்கீரனின் புலனாய்வுப் பணியில் சிறந்த பணியாக எனது மனதில் நிலைத்திருப்பது பொள்ளாச்சி பாலியல் கொடுமையை வெளிப்படுத்தியதுதான்.

2019 ஆகஸ்ட் 17-20 இதழ்:

"சோறு முதல் கார் வரை! எல்லாம் போச்சு வருகிறது இராணுவ ஆட்சி' என்ற தலைப்பில் மோடியின் அட்டைப்படத்தை ஆசிரியர் சூப்பரோ சூப்பராக வடிவமைத்திருக்கிறார். அதோடு நாட்டின் பொருளாதார நெருக்கடி, விவசாயிகளின் கிராம பொருளாதார வேலைவாய்ப்பு சீர்குலைவு, ஜி.எஸ்.டி. பாதிப்பு, ரியல் எஸ்டேட் கட்டுமானப் பொருட்கள் ஸ்தம்பித்து போய் தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என மூன்று பக்க செய்தியின் அனைத்து விசயங்களும் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

"நளினி மகள் திருமணம்! உளவுத்துறையை ஏவும் அரசு' என்ற செய்தியைப் படித்துப் பார்த்து மனம் நொந்துபோய்விட்டேன். 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரின் தண்டனைக் காலம் முடிந்தும் மத்திய-மாநில அரசுகள் விடுதலை செய்யவும் முன்வரவில்லை. அந்தக் குடும்பத்தில் சுபகாரியம் நடப்பதற்கும் முட்டுக்கட்டையா?

______________

வாசகர் கடிதங்கள்!

தகவலுக்கு மூடுவிழா!

ஜெ. முதல்வராக இருந்தவரை கலைஞரின் திட்டங்களை முடக்குவார். இப்போது எடப்பாடி அரசும் அவரது வழியில், கலைஞர் கொண்டு வந்த அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கு மூடுவிழா நடத்துகிறது. இத்துறை தனியார் கைகளுக்குப் போவதால் அதிகாரிகளுக்கு ஒன்றும் நட்டமில்லை. ஆனால் மக்கள் மத்தியில் இது பொல்லாப்புச் செய்தியாக உருவெடுக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

-சிவ.மாரிமுத்து, தஞ்சாவூர்.

நகைச்சுவைக் கலகம்!

நாட்டின் பொருளாதார நிலையை பாய் விரித்து சரிசெய்ய முயல்கிற நடிகர் வடிவேலு, மூக்கறுபட்டு எழுந்திரிக்கும்போது மோடி மாதிரியே இருந்தாரு. இங்ஙனம் உவமேயப்படுத்தச் சொல்கிற "வலை வீச்சு' நாரதர்களின் நகைச்சுவைக் கலகம் ரசிக்கும்படியான யதார்த்தம்.

-ஆர்.வள்ளி, குளித்தலை.

nkn270819
இதையும் படியுங்கள்
Subscribe