நான் நக்கீரனின் தொடக்க கால வாசகன். நான் பிறந்த கடற்கரை கிராமமான மீமிசல் பகுதிக்கு நக்கீரன் வராத காலத்திலேயே அறந் தாங்கிக்கு பஸ்ஏறிச் சென்று "நக்கீரன்' வாங்கிக் கொண்டு பஸ்சில் ஊருக்குப் போகும்போதே படித்து முடித்துவிடுவேன். அப்படி ஒரு இன்பம் "நக்கீரன்' படிப்பதில்.
ஒவ்வொரு இத ழிலும் புலனாய்வு இருக் கும். அதில் நான் அதிகம் கண்டது சந்தனக்கட்டை வீரப்பனும், பிரேமானந்தா வும்தான். ஒவ்வொரு இத ழும் புதுப்புது படங்களுடன், வெளிவ
நான் நக்கீரனின் தொடக்க கால வாசகன். நான் பிறந்த கடற்கரை கிராமமான மீமிசல் பகுதிக்கு நக்கீரன் வராத காலத்திலேயே அறந் தாங்கிக்கு பஸ்ஏறிச் சென்று "நக்கீரன்' வாங்கிக் கொண்டு பஸ்சில் ஊருக்குப் போகும்போதே படித்து முடித்துவிடுவேன். அப்படி ஒரு இன்பம் "நக்கீரன்' படிப்பதில்.
ஒவ்வொரு இத ழிலும் புலனாய்வு இருக் கும். அதில் நான் அதிகம் கண்டது சந்தனக்கட்டை வீரப்பனும், பிரேமானந்தா வும்தான். ஒவ்வொரு இத ழும் புதுப்புது படங்களுடன், வெளிவராத செய்திகளை தாங்கி வந்தது எனக்கு ரொம்ப ஆர்வமானது. விவசாயிகள், மீனவர்கள் என்று எந்த தரப்பிலும் அவர் களுக்கு நடக்கும் இன்னல் களைக் களைய களம் நின்று மக்களுக்காக போராடி வெற்றி யை பறித்துக்கொடுக்கும் அந்த நற்பண்பு "நக்கீரன் வாசகன்' என்பதில் பெருமிதம் கொள் வேன். நக்கீரனைப் படித்து முடித்தவுடன் மற்றவர்களும் படிக்கவேண்டும் என்பதற்காக அவர்களிடமும் கொடுத்துப் படிக்கச் சொல்வேன்.
2019, ஆகஸ்ட் 10-13 இதழ்:
"எடப்பாடியின் முதல் விக்கெட்! கடைசிவரை ஃபைட்' என்ற தலைப்பிட்ட செய்தி தி.மு.க.வின் தேர்தல் போராட்டம், வாக்கு எண் ணும் மையத்தின் விறுவிறு காட்சிகளை விளக்கியிருந்தது. எடப்பாடி முதலமைச்சர் ஆன பிறகு அமைச்சர் மணிகண்ட னை தூக்கியது முதல் விக்கெட் என்ற தலைப்பும் அதற்கான காரணங்களும் அருமை. "கலைஞர் கொடுத்த ஆயுதங் கள்' மதவாதத்திற்கு எதிராக அமைந்த கூட்டணியாக காணப்பட்டது. எப்பவுமே மாவலி பதில்கள் சிறப்புதான். தமிழர்களின் வேலைகளை பறித்து வடமாநிலத்தவர் களுக்கு கொடுப்பதை "கல்பாக்கத்தில் காவிகள்' என்பதை படங்களுடன் காட்டி எச்சரிக்கை மணி அடித்துவிட்டீர்கள். இனி என்ன நடக்கப் போகிறதென்று பார்ப் போம். "அரசு இயந் திரங்கள் நடத்திய இரட் டைக் கொலை' என்ற தலைப்பில் ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்னவர்களுக்கு நேர்ந்த கொடூரத்தை அம்ப லப்படுத்தியிருந்தீர்கள். குறிவைக்கப்படும் தமிழக அமைச்சர்களில் எங்க மாவட்ட அமைச்சரும் இருக்கிறாரே!
______________
வாசகர் கடிதங்கள்!
ஸ்ட்ரெஸின் ப்ரெஷ்!
மன அழுத்தம் உள்ள வர்கள் டூரிங் டாக்கீஸில் ரிலீஸாகியிருக்கும் கிளுகிளு நடிகைகளின் 'நற்ழ்ங்ள்ள்' அறிவுறுத்தல்களை படம் பார்த்தபடி வாசித்தாலே போதும்; சில நிமிடங்களில் ப்ரெஷ்ஷாகிவிடுவீர்கள்.
-ஆர்.மாலதி, திண்டுக்கல்.
அறிவுப் பால்!
புத்தகங்கள் அறிவின் வளர்ச்சிக்கு தாய்ப்பால். இந்த அறிவூட்டலை ஆண்டுதோறும் ஸ்டாலின் குணசேகரன் முன்னெடுக்கும் "ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை' செவ்வனே செய்துவருகிறது, பாராட்டுவோம்.
-சிவ.இளங்கோ, டால்மியாபுரம்.