pp

ன் பள்ளிக் காலம் தொட்டு என்னை விட்டு விலகாமல் இருப் பது "நக்கீரன்'தான். ரயில்வே துறையில் பணிபுரிந்த என் தந்தை முரசொலியையும் நக்கீரனையும் பாக்யாவையும் வாங்கி வந்து அதனை மேஜையின் மீது வைக்கும்போது அதனை பாய்ந்து எடுக்கும் என் வேகம் கண்டு என் தந்தைக்கு ஒரு பெருமிதம் தோன்றும். பள்ளி இறுதிக்காலம் தொட்டே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமாக இருந்த என்னை கடந்த 30 ஆண்டுகளாக "நக்கீரன்'தான் இயக்கிக்கொண்டிருக்கிறது.

Advertisment

எனக்குள் அரசியல் அறிவை புகுத்தியதில் கட்சி இதழ்களைக் கடந்து "நக்கீரன்'தான் முதலிடம். அய்யா சின்னகுத்தூசியின் கட்டுரை எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி ஊடகங் களிலும் என்னை விவாத களங்களில் ஒளிர வைத்துக்கொண்டிருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை என்னுள் இலகுவாக பதியவைத்ததில் பெரும் பங்கு நக்கீரனுக்கு உண்டு. சின்னகுத்தூசியின் அரசியல் கட்டுரைகள், நாராயணரெட்டி யின் பாலியல் விழிப்புணர்வு கட்டுரைகள், இந்து மதத்தை தோலுரித்த அக்னிகோத்ர ராமானுஜ தாத்தாச்சாரியரின் தொடர், நக்கீரன் ஆசிரியரின் யுத்தம் தொடர் உள்ளிட்ட வைகள் எனது அறிவை விசாலமாக்கியிருக்கிறது. மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஊடகங்கள் தடம்புரண்டாலும் நக்கீரனின் நேர்கொண்ட பார்வை மட்டுமே உயர்ந்து நிற்கிறது. நக்கீரனுடன் இணைந்து பயணிப்பது குடும்பத்தினருடன் இணைந்து பயணிக்கும் உணர்வை தருகின்றது.

Advertisment

2019, ஜூலை 20-23 இதழ்:

"சரவணபவன் ராஜகோபாலின் மறைவு செய்தி'யில் அவரது சாதனையையும் சரிவையும் பற்றிய கோர்வையான செய்திகள் பிரமிக்க வைப்பதாக இருந்தது. கர்நாடக சட்டமன்ற அரசியலில் நடக்கும் கூத்துகளில் வெளிவராத பல தகவல்களை அம்பலப்படுத்தியிருப்பதும் அதனை தமிழக அரசியலோடு ஒப்பிட்டு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சை உஷார்படுத்தியிருப்பதும் நக்கீரனுக்கே உரிய ஸ்டைல்!

தி.மு.க.வினர் மீதான ரெய்டுக்கு காரணமான முர்ளிக்குமாரை வெளிப்படுத்தியிருப்பதும், தி.மு.க. வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவியையே களமிறக்கியிருப்பதும் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்பதை நிலைநிறுத்துகிறது. இந்த இதழிலுள்ள ஒவ்வொரு செய்தியும் ஆல்ரவுண்டராக அடித்து ஆடும் இண்ட்ரஸ்டிங் பேட்ஸ்மேன் போல செம ஹாட்!

Advertisment

_____________

வாசகர் கடிதங்கள்!

விடிந்தபாடில்லை!

ஜிப்மர் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மண்ணின் மைந்தர்கள் புறக் கணிக்கப்படுவதை மத்திய-மாநில அரசுகளிடம் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வெளிப் படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்; விடிந்த பாடில்லை.

-எஸ்.சிவராமன், காஞ்சிபுரம்.

ஏக அதிகாரம்!

நக்கீரனின் "பார்வை' பகுதி, ஒவ்வொரு செய்தியையும் ஆய்வுக்கண் கொண்டு விமர்சிக்கிறது. எனினும் சில சில இதழ்களில் "வஞ்சப் புகழ்ச்சி' ஏகத்துக்கும் அதிகாரம் செய்வதுபோல் தோன்றுகிறது.

-ஆர்.மதன்குமார், ஆத்தூர்.