Advertisment

பார்வை! -இ.கோபால் ஆபரன்

oo

pp

நான் நக்கீரன் இதழை பல வருடங்களாக வாசித்து வருகிறேன். மிகவும் எளிய நடையில் எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உண்மைச் செய்திகளை துணிச்சலுடன் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. "மற்ற ஊடகங்கள் எழுதத் தயங்கும் செய்திகளை தயக்க மில்லாமல் வெளியிடும் தைரியமான பத்திரிகை. அரசாங்கத்தின் அட்டூழி யங்களை எதிர்த்தால் ஒரு பத்திரிகை என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்பதற்கு நக்கீரன் எதிர்கொண்ட பிரச்ச

pp

நான் நக்கீரன் இதழை பல வருடங்களாக வாசித்து வருகிறேன். மிகவும் எளிய நடையில் எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உண்மைச் செய்திகளை துணிச்சலுடன் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. "மற்ற ஊடகங்கள் எழுதத் தயங்கும் செய்திகளை தயக்க மில்லாமல் வெளியிடும் தைரியமான பத்திரிகை. அரசாங்கத்தின் அட்டூழி யங்களை எதிர்த்தால் ஒரு பத்திரிகை என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்பதற்கு நக்கீரன் எதிர்கொண்ட பிரச்சனை களே சாட்சி. அதேநேரத்தில், உண்மை துணிவு உறுதியுடன் செயல் பட்டால் அரசாங்கத்தால் எதுவும் செய்யமுடியாது என்பதற்கும் நக்கீரனே சாட்சி. பத்திரிகை ஊடகங்களின் பாதுகாப்புக்காக பல்வேறு தீர்ப்புகளை பெற்றுத் தந்திருக்கும் நக்கீரன், பத்திரிகை ஊடகத்தினரின் பாதுகாப்புக் கவசம்.

Advertisment

2019 ஜூலை 17-19 இதழ் :

நகைக்கடனை ரத்துசெய்ய திட்டம் தீட்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த அட்டைப்படம் செம்ம கிரியேட்டிவ். "தமிழகத்தில் வெடிகுண்டு' படிக்க படிக்க பதை பதைக்கவைக்கிறது. மாட்டுக்கறி சாப் பிட்டது குறித்து சமூக வலைத் தளத்தில் பதிவு செய்ததற்கே அடித்து உதைத்தது முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கொடூரம். ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் மதவாத உண்மை முகத்தை உலகமறிய செய்யும் செய்தி.

போக்குவரத்து விதிகளை மீறும் பொது மக்களை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்றி கையை உடைக்கும் போலீஸ்... தாங்கள் சட்டத்தை மீறினால் பொதுமக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பது காவல்துறையினரை சட்டப்படி நடக்க வைக்கும்.

தி.மு.க.வின் வேகத்தைக் குறைக்கும் ரெய்டுகள் என்பது எதார்த்தம் உண்மை. இதேபோல, நமது தமிழ்ச் சமூகத்திற்கு தரமாக தர வேண்டும். மொத்தத்தில் "அவுட் ஸ்டாண்டிங் நக்கீரன்' குழுவினருக்கு பாராட்டுக்கள்!

Advertisment

வாசகர் கடிதங்கள்!

சரியா சொன்னீங்க!

நக்கீரனில் வெளியான ஆறுநாட்டு வேளாளர் சங்கம் பற்றிய செய்தி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது. அதில் நான், "அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள்' என்று சொன்னது "எங்களை ஏமாற்றுகிறார்கள்' என்றும் "கலாட்டா நடக்கும்' என்றது. "கலவரம் நடக்கும்' என்றும் வந்திருப்பதை கவனிக்கக் கோருகிறேன்.

-எஸ்.கே.சரவணன், சென்னை-99.

அனுபவப் பாடம்!

கைலாஷ் யாத்திரையில் சிவபக்தரான பூபாளன் சீன எல்லையில் பட்ட துன்ப அனுபவம், அங்கே பயணம் எதிர்நோக்குகிறவர்களுக்கு ஒரு அனுபவப் பாடம்.

-ஆர்.சிவச்சந்திரன், மன்னார்குடி.

nkn260719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe