Advertisment

பார்வை - கு.வீரசோழன்

parvai

parvai

Advertisment

ழை, எளிய நடுத்தர மக்களின் குரலாக, கேடயமாக, வாளாக விளங்கிக் கொண்டிருக்கிறது நமது "நக்கீரன்'.

உலகத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி "நக்கீரன்' இதழ் எனும் ஆயுதத்தின் மூலம் அரசியல் களமாடும் நக்கீரன் சந்தித்த எதிர்ப்புகள், வலிகள், வடுக்கள் ஏராளம், ஏராளம். துணை நிற்கும் லட்சோப லட்சம் வாசகர்களின் வலிமையோடு பீடு நடை போடுகிறது நக்கீரன். நக்கீரன் செய்திகள் புடம் போட்ட வரலாறுகள்

parvai

Advertisment

ழை, எளிய நடுத்தர மக்களின் குரலாக, கேடயமாக, வாளாக விளங்கிக் கொண்டிருக்கிறது நமது "நக்கீரன்'.

உலகத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி "நக்கீரன்' இதழ் எனும் ஆயுதத்தின் மூலம் அரசியல் களமாடும் நக்கீரன் சந்தித்த எதிர்ப்புகள், வலிகள், வடுக்கள் ஏராளம், ஏராளம். துணை நிற்கும் லட்சோப லட்சம் வாசகர்களின் வலிமையோடு பீடு நடை போடுகிறது நக்கீரன். நக்கீரன் செய்திகள் புடம் போட்ட வரலாறுகள். அந்த வரலாறுகளின் வாசகர்களில் நானும் ஒருவன்.

2018, ஜூன் 13-15 இதழ்:

ராங்-கால் பகுதியில், ரஜினி பக்கம் டெல்லியின் பார்வை தீவிரமாக திரும்பியிருக்கிறது என்கிற செய்தி பரபரப்பாக இருந்தது. ஆயினும் உலக நடிகர்களைக் கவர்ந்த சிவாஜியின் அரசியலை இன்றைய சிவாஜிகள் நினைவுகொள்ள வேண்டும்.

Advertisment

""போராடினால் போட்டுத் தள்ளு'' செய்தி சிந்திக்கத் தூண்டுவது. எங்கள் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட ஸ்டெர்லைட்டை, துப்பாக்கிச் சூட்டை எதிர்த்துப் போராடும் தலைவர்களை வழக்குப் போட்டுச் சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அரசு. இந்த உருட்டல், மிரட்டல்கள் கண்டு தமிழகத் தலைவர்களும் மக்களும் கொஞ்சமும் அஞ்சமாட்டார்கள்.

இரவில் தூங்கிப் பகலில் விழித்திருக்கும் வாசகர்களுக்கு "மிட்நைட் மசாலா' வியப்பூட்டும் தீனி.

பா.ஜ.க. சொல்வதை தேர்தல் ஆணையம் செய்கிறது. செய்தி பத்தரை மாற்றுத் தங்கம். முன்னாள் எம்.பி. பழனிச்சாமியின் குற்றச்சாட்டுகள் யோசிக்க வைப்பவை. பெண் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சுவையான அரிய செய்திகளை "திண்ணைக் கச்சேரி' இசையோடு வழங்குகிறது. இந்த இதழும் அருமையானதே.

வாசகர் கடிதங்கள்!

கொண்டை முடிஞ்ச பா.ஜ.க.!

பா.ஜ.க., தமிழகத்தை உமிக்காடா ஆக்கணும்னு கொண்ட கொள்கையில் கொண்டை முடிந்து உறுதியாக செயல்படுகிறது. இது தெரிந்தும், "நீங்க இருந்த இழுப்புக்கெல்லாம் உங்க பின்னாலேயே வாறோம்'னு துணை போகிறது அ.தி.மு.க.! "அரசியல் காரணங்களுக்காகவே மக்களின் கருத்து சுதந்திரம் என்கிற அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன' என்பதற்கு "புதிய தலைமுறை'யின் "வட்டமேசை' நிகழ்ச்சி நல்ல சாட்சி.

-எம்.சுரேஷ் கோபி, சென்னை-18

நேர்மைக்கு நோ என்ட்ரி!

ஆர்.டி.ஓ. ஆபீஸ்ல "நோ எட்டு ஒன்லி துட்டு' இதற்கான கையூட்டு என்பது ஹெல்மெட் போட்டுக்கொண்டு அல்ல, ஓப்பனாவே நடக்குது. இதை லைவ் வீடியோவா போட்டு அம்பலப்படுத்திருச்சு படாபட் "நக்கீரன்'.

-ஆர்.குணசேகரன், மேலூர்.

Parvai nkn22.06.18
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe