புலனாய்வுப் பத்திரிகைத் துறையில் தமிழில் வாரஇதழாக வெளிவந்த "நக்கீரன்' மக்களின் பேராதரவால் வாரம் இருமுறை இதழாக வெளிவருகின்றது. மக்க ளின் பேராதரவு பெற்ற "நக்கீரன்' இதழை நான் கடந்த 25 ஆண்டு களுக்கு மேலாக வாசிக்கின்ற வாய்ப்பை பெற்றுள்ளேன்.
"நக்கீரன்' ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு சோதனைக ளையும் சிரமங்களையும் தாண்டி சமூக அக்கறையுடன் செயல்பட்டு, வெளிக்கொணர்ந்த.. நிகழ்ந்த சம்ப வங்களின் உண்மைகளை சிறிய கிராமம் முதல் பெரிய நகரம்வரை உள்ள அனைத்து தரப்பு மக்களும் படித்து அதன்மூலம் சமூகத்தில் நடக் கும் அவலங்களை அதன் பின்புலங் களை தெரிந்து கொண்டுள்ளனர்.
நக்கீரனின் சாதனை வரலாற் றில் முன்னணி வைரக்கல்லாக ஜொலிப்பது முகம் தெரியாத ,குற்ற செயல்களில் ஈடுபட்டு எளிதில் காவல் துறை மற்றும் ராணுவம் நெருங்க முடியாத இருப்பிடத்தைக் கொண்ட சந்தன கடத்தல் வீரப் பனை உலகிற்கு தெரியப்படுத்தியது.
இதை ஒரு சவாலாக எடுத்து அவனை சந்தித்து அந்த நிகழ்வினை எழுத்து வடிவிலும் காட்சி வடிவி லும் தொடர்ந்து வெளியிட்டபோது உலக அளவில் வசிக் கின்ற இந்திய மக்க ளாலும் அனைத்து மாநில காவல்துறை யினராலும் நக்கீரன் ஆசிரி யர் அண்ணன் திரு. கோபால் அவர்கள் பாராட் டப்பட்டார்.
2019, ஜூலை 03-05 இதழ்:
"கூட்டணிக்குத் தயா ராகும் கமல்'. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப் பாட்டை தெளிவாக விளக்கியிருந்தது. "பள்ளியின் பகல் கொள்ளை' ஒரு குறிப்பிட்ட பள்ளியில் நடைபெறுகின்ற முறையற்ற கட்டண வசூலை முழுமையாக தோலுரித்துக் காட்டியதன் மூலம் மற்ற பள்ளிகளுக்கு எச்சரிக்கை மணியாக இக்கட்டுரை அமைந்துள்ளது. புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி டுவிட்டரில் பதிவிடும் கருத்துக்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமக்களிடம் பெரிதாக சென்றடையாது.
_____________
வாசகர் கடிதங்கள்!
பல்துறை வித்தகர்!
கலைஞானம் ஐயா சினிமா மட்டுமல்ல, மொகலாயப் பேரரசின் வரலாற்றுப் பின்னணிகளையும் தெரிந்து வைத் திருக்கிறார், பாராட்ட வேண்டும். திரைப்பட கலைஞர்கள் பல்துறையிலும் வித்தகர்களாக இருக்கவேண்டும் என்பதற்கு இவரே முன்மாதிரியும் கூட. "மீரா' கதை சிறுமூளையில் சேகரமான ஒன்றுதான். என்றாலும், "வரலாறு முக்கியம் அமைச்சரே' என்று மீள்வாசிப்புக்காக கேரக்டருக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது தொடரின் சுவையான எழுத்து நடை.
-ஆர்.புருஷோத்தமன், கிளியனூர்.
இடம் மாறும் காலம்!
"இன்னும் பலர் வருவார்கள்' என தங்க தமிழ்ச்செல்வனும், "சென்ற இடத்திலாவது விசுவாசத்தோடு இருக்கட்டும்' என புகழேந்தியும் ஒருவரை ஒருவர் அதிரடியாக விளாசுகிறார்கள். இவர்களின் இந்த ஸ்டேட்மெண்ட்டையே நாம் இடம் மாற்றிப் படிக்கும் காலமும் ஏற்படலாம்.
-கே.சக்திவேல், சேலம்.