பார்வை -மு.செந்திலதிபன்

pp

parvai

1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவ்-ஜெயவர்த்தனே கையெழுத்திட்டனர். அதன்பிறகு அமைதிப்படை அனுப்பப்பட்டது. புலிகள் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைப்பதாக சுதுமலை கூட்டத்தில் அறிவித்தார். ஒப்பந்தப்படி சிங்கள குடியேற்றங்களை வெளியேற்றக்கோரி, திலீபன் சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தார். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் யுத்தம் மூண்டது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்தார். அந்த ஆண்டின் இறுதியிலிருந்து 1988-ல் தொடங்கி தமிழகத்தில் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்பட்ட நேரம். அந்த நேரத்தில்தான் 1988-ல் நக்கீ

parvai

1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவ்-ஜெயவர்த்தனே கையெழுத்திட்டனர். அதன்பிறகு அமைதிப்படை அனுப்பப்பட்டது. புலிகள் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைப்பதாக சுதுமலை கூட்டத்தில் அறிவித்தார். ஒப்பந்தப்படி சிங்கள குடியேற்றங்களை வெளியேற்றக்கோரி, திலீபன் சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தார். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் யுத்தம் மூண்டது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்தார். அந்த ஆண்டின் இறுதியிலிருந்து 1988-ல் தொடங்கி தமிழகத்தில் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்பட்ட நேரம். அந்த நேரத்தில்தான் 1988-ல் நக்கீரன் இதழ், பத்திரிகை உலகில் அடியெடுத்து வைக்கிறது. முதல் இதழைக் கண்டதுமே ஒரு ஈர்ப்பு. ஏனெனில் அதன் வடிவமைப்பு, மற்ற வார இதழ்களில் இருந்து நக்கீரனை வேறுபடுத்திக் காட்டியது.

ஈழத்தில் நடந்த யுத்தம், புலிகள்-அமைதிப்படை இடையேயான போரின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்லி தமிழர்களின் பக்கம் உள்ள நியாயத்தை ஓங்கி ஒலித்தது நக்கீரன். அப்போது இருந்துதான் நக்கீரனை நெஞ்சில் ஏந்தினேன். இன்றும் தொடர்கிறது. 1991-95 ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டிய க.சுப்புவின் "இங்கேயும் ஒரு ஹிட்லர்'’கட்டுரைதான் மாலை நேரத்தில் என்னைப் போன்றோர் மேடையில் முழங்கும் உரைக்கு கருப்பொருளாக இருக்கும். ஆதிக்கச் சக்திகளின் பிடரியைப் பிடித்து உலுக்கிய பத்திரிகை என்றால் இந்தியாவிலேயே அது நக்கீரன்தான்.

ஆளுநர் மாளிகையின் மர்மங்களை வெளியிட்டதால் வழக்கு பதியப்பட்டு காவல் நிலையத்தில் கோபால் அவர்கள் வைக்கப்பட்டபோது தனி ஒருவராக மறியல் செய்தார் எங்கள் தலைவர் வைகோ. அதற்குக் காரணம் பத்திரிகை உலகில் அநீதி, அக்கிரமங்களை சுட்டெரிக்கும் ‘"அக்கினி குஞ்சு'’ நக்கீரன் என்பதால்தான்.

2019, ஜூன் 29-ஜூலை 02 இதழ்:

நக்கீரனைப் பிரித்தவுடன் நான் முதலில் படிக்கும் அரசியல் சமூகத் தொடரில் 50-ஆவது வாரமாக பழ.கருப்பையா "முடியாட்சி போலவே குடியாட்சி’ இருக்கிறது' என்பதை மிகத் துல்லியமாக, அவருக்கே உரிய ‘உயர்வு நவிற்சி’ பாணியில் எழுதி உள்ளார்.

"மாவலி பதில்'களில் ‘காந்தியின் "ஹே ராம்', பா.ஜ.க.வின்’"ஜெய் ஸ்ரீராம்'’என்ன வித்தியாசம்?’ என்ற கேள்விக்கு, மாவலி அளித்த பதில் நெஞ்சில் கனலை ஏற்றுகிறது. "மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடக்கும் சதி' போன்ற செய்திகள் ஆட்சியின் அவலங்களை புட்டு வைக்கின்றன. "தனி மரமாக நிற்கும் தினகரன்' -சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது.

_________

வாசகர் கடிதங்கள்!

நூதன பிசினஸ்!

வேலூர் மாவட்ட நூதன பணமோசடிக் கும்பலின் "ஆடு பிசினஸ்' இப்போது களேபரமாகியிருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் லஷ்மி அக்ரோ ஃபார்மில் 15 ஆடுகளுக்கு ரூ.1,05,000 செலுத்திவிட்டு ஏமாந்ததற்குப் பதிலாக, அந்தக் காசுக்கு 7 ஆடுகளை வாங்கி வீட்டில் விட்டிருக்கலாம்... வாழ்க்கை சுபிட்சமாக இருந்திருக்கும்.

-வி.அருண்மொழி, தஞ்சாவூர்.

அப்டேட்!

பேராசிரியை நிர்மலாதேவி வந்ததோ கோர்ட்டுக்கு. அவர் குறித்த அப்டேட் செய்திக்கு நீங்கள் வைத்த தலைப்போ, "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...' இந்த டைமிங் கமெண்ட்டை வாசிக்கையில், "இன்பத்திலாடுது என் மனமே'!

-எஸ்.பார்வதி, மயிலாடுதுறை.

nkn090719
இதையும் படியுங்கள்
Subscribe