தமிழக மக்களின் உரிமைக்காக எழுத்து மூலம் போராடும் "நக்கீரன்' மீது போடப்படும் தொடர் வழக்குகளுக்காக அடிக்கடி நீதிமன்றம் ஏறும்போது அங்கு நல்லதொரு நீதி கிடைக்கிறது. அதுவேதான் நக்கீரனின் உண்மை, துணிவு, உறுதிக்கு எடுத்துக்காட்டு.
அரசியல் என்ன என்பதை அரசியல் வாதிகளுக்கும் ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று ஆட்சியாளர்களுக் கும் நக்கீரனின் ஒவ்வோர் இதழும் கற்றுக் கொடுக்கிறது. இதை மக்கள் புரிந்துகொள் கிறார்கள். ஆனால் சில அரசிய
தமிழக மக்களின் உரிமைக்காக எழுத்து மூலம் போராடும் "நக்கீரன்' மீது போடப்படும் தொடர் வழக்குகளுக்காக அடிக்கடி நீதிமன்றம் ஏறும்போது அங்கு நல்லதொரு நீதி கிடைக்கிறது. அதுவேதான் நக்கீரனின் உண்மை, துணிவு, உறுதிக்கு எடுத்துக்காட்டு.
அரசியல் என்ன என்பதை அரசியல் வாதிகளுக்கும் ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று ஆட்சியாளர்களுக் கும் நக்கீரனின் ஒவ்வோர் இதழும் கற்றுக் கொடுக்கிறது. இதை மக்கள் புரிந்துகொள் கிறார்கள். ஆனால் சில அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அது பிடிக்கவில்லை. இதனால் நக்கீரனை சீண்டி, அவர்கள் தோற்றுப் போவது தொடர்கதையாக உள்ளது.
சோஷியல் மீடியாக்கள் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் "நக்கீரன்' தனது புலனாய்வுக் கண்களை சோஷியல் மீடியாக்கள் செல்ல முடியாத இடத்திலும் சுழலவிட்டு பொள்ளாச்சி போன்ற பல உண்மைச் சம்பவங்களை வெளிக்கொண்டு வருவது நக்கீரனால் மட்டும்தான் முடியும். அப்படிப்பட்ட ஓர் இதழின் நீண்டகால வாசகனாக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன்.
2019, ஜூன் 19-21 இதழ்:
ஐயா சின்னகுத்தூசியார் நினைவு விருது வழங்கும் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சும் ஆதங்கமும் படித்தபோது ஒரு சிலிர்ப்பும் போட்டியாளர் களைப் பாராட்டியபோது ஒரு வெறித்தனமும் ஏற்பட்டது அதேபோல் கலைஞரையும் சின்ன குத்தூசியாரையும் நினைவுகூர்ந்து ஒரு தகவலைத் தந்திருக்கிறார் வைரமுத்து. "திங்கிற சோத்திலும் சாதியா?' இந்த நாடு என்னைக்குத்தான் திருந்தும்.... பெரியார்கள் பிறந்து கொண்டேதான் இருக்கவேண் டும். "பெண் குழந்தைகளைப் பெற்றவள் மானத்தோடு வாழக்கூடாது!' -தமிழகத்தை சீரழிக்கும் டாஸ்மாக் பற்றி நல்ல ஒரு கட்டுரை. கலைஞானத்தின் "கேரக்டர்' விறுவிறு.
_______________
வாசகர் கடிதங்கள்!
விளம்பர அரசியல்!
"நடப்பு அரசியலை உள்வாங்கிக் கொண்டுதான் தேர்தல் வெற்றிக்கான ஆலோசனையை வழங்குகிறது பிரசாந்த் கிஷோரின் விளம்பர நிறுவனம்' என்கிற பழ.கருப்பையாவின் வார்த்தைகள் யதார்த்தமானவை. "இனி ஒவ்வொரு கட்சியும் புதுப்புது விளம்பர ஏஜென்ஸிகளுக்கு வலைவீசும். அந்த வகையில், உங்களை கிசோரால் மீண்டும் தலைவராக்க முடியாது' என்று அவர் எடப்பாடிக்கு சொல்கிற அறிவுரையும் ஏற்கக்கூடியதே!
-கே.சிவா, கரூர்.
யாகமும் ஆட்டோவும்!
"வலை வீச்சு' "ஏரி'யாவில், "தண்ணீர் பிரச்சினைக்காக யாகம் செய்யத் தொடங்கிவிட்டோம்'னு முதல்வர் எடப்பாடி சொல்கிறார். இது எப்படி இருக்கு தெரியுமா... "கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்' என கேள்வி எழுப்பும் கருணாஸின் காமெடி போல இருக்கு.
-ஆர்.மணிமாறன், திருச்சி.