பத்திரிகைகளின் நடு நிலை என்பது கேள்விக்குறி யாகிவரும் நிலையில், எனக்குத் தெரிந்த வரையிலும் "நக்கீரன்' எடுத்திருப்பது ஒரே நிலை தான். "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'’ என திரை மறைவில் நடக்கின்ற குற்றங் களை அம்பலப்படுத்துவதும், குற்றச்செயல்களில் ஈடுபடு வோர் யாராக இருந்தாலும், வாசகர்கள் பார்வையில் தோலுரித்துத் தொங்க விடுவதும்தான்.
2019, ஜூன் 15-18 இதழ்:
பத்திரிகைகள் வாயிலாக கொடுமையான சமூக அவ லங்கள் வெளிப்பட்டு, பின்னா ளில் அவை திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன. இன்றோ, "வாயை மூடி பேசவும்'’என்ற சினிமாவின் தலைப்பே, தமி ழகத்தின் நடப்பு அரசியலுக்கு மிகவும் பொருந்திப்போய், "நக்கீரன்' இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றி ருக்கிறது.
இலங்கையைப் போல் தமிழ்நாட்டையும் ஐ.எஸ். தொடர்பாளர்கள் குறி வைத்திருப்பதாக என்.ஐ.ஏ. சொல்கிறதா? பதற வைக்கிறதே ராங்-கால். தமிழக முதல்வருக்கு எதிராக ஊழல் ரிக்கார்டுகள் நிறைய இருக்கிறது. கவர்னர் கண்காணித்தபடி இருக்கிறார்’என்று தமிழக அமைச்சர்கள் இருவரை அமித்ஷா திணறடித்த தகவல் ரொம்பவே ஹாட். அமரர்கள் ஆகிவிட்ட சினிமாத்துறை கலைஞர் களான கிரீஷ் கர்னாட்டை "கலகக்காரர்' என்றும், கிரேஸி மோகனை "கலகலப்புக்காரர்' என்றும் மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார் மாவலி.
"கவர்ச்சிக்கு புஷ்பவல்லியை விட்டால் அந்தக்காலத்தில் வேறு யாருமே இல்லை. கண்களில் அப்படியொரு போதை'’-கேரக்டர் தொடரில் கலைஞானம் அய்யா, வர்ணிக்கும் விதம் அத்தனை அழகு. யோகி அரசு கருத்து சுதந்திரத்தின் கழுத் தறுப்பு வேலையில் ஈடுபட்டு வருவதும், பேச்சுரிமை யையும் தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதிமன்றம் உறுதியாக இருப்பதும் நக்கீரன் கட்டு ரையில் "நச்'’என்று விவரிக்கப்பட்டுள்ளது. நிர்மலா தேவி விவகாரத்தை நக்கீரன் விடவே விடாது போல!
_________________
வாசகர் கடிதங்கள்!
பதவியும் தண்டனைதான்!
மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரி பதவி என்பது, அரசியல்வாதிகளால் சபிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அரசுக்கும் காவல்துறைக்கும் ஓர் இணக்கம் வேண்டும். மாறாக, இவர்களுக்குள்ளான முன்விரோதத்தை பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் முகாமில் பொறுப்பு கொடுத்தா வெளிப்படுத்த வேண்டும். ஒருவகையில் இது இறையாண்மைக்கு எதிரான செயலும் கூட.
-ப.ஆறுமுகம், சங்கரன்கோவில்.
காமத்திலிருந்து பாவத்துக்கு!
காமம் கண்களை மறைக்கும். ஆனால் அதன் மறைப்பில் பெற்றெடுத்த பிள்ளைகளும் மறக்கப் படுவார்கள் என்பது பெண் பாவத்தின் உச்சம். "உடைந்து சிதறும் கள்ள உறவுகள்', சட்டத்தை தாங்கள் சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டதாக தங்களுக்குள் கைதட்டிக் கொண்டாலும், இது காலத்துக்குமான இழுக்குதான்.
-வா.வேல்முருகன், திருத்தணி.