நக்கீரன் பத்திரிகையின் 20 வருட வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஆளும் கட்சியை எதிர்க்கும் நல்ல எதிர்க்கட்சியாக நக்கீரன் செய்திகள் எப்போதும் இருக்கும். தமிழகத்தின் எந்த முக்கிய பிரச்சனைகளையும் முதன் முதலில் வெளிக்கொண்டு வருவதிலும், அதை விடாமல் கடைசிவரை தோண்டித் துருவி புலன்விசாரணை செய்து வெளியிடுவதிலும் நக்கீரன் எப்போதுமே நம்பர்ஒன்தான். வீரப்பன் முதல் பொள்ளாச்சி விவகாரம் வரை தொடர்ச்சியாக நக்கீரன் புலனாய்வு மட்டுமே நிஜத்தைச் சொல்கிறது.
2019, மே 22-24 இதழ்:
நக்கீரனை வாங்கியதும் விரும்பி படிப்பது அரசியலில் நிகழும் அத்தனை கடைசிக்கட்ட தகவல்களையும் முதலில் தரும் ராங்-கால் பகுதியைத்தான். அடுத்து அரசியல் முதல் அனைத்தையும் தாங்கிய தகவல் களஞ்சியமாக வெளிவரும் மாவலி பதில்கள்; அடுத்த மிகவும் பிடித்த பகுதி.
தேர்தல் வெற்றிக்காக "ஹைடெக் தியானம்' என அரசியல் நகர்வுகளை அட்டை டு அட்டை அம்பலப்படுத்துவதில் அதிரடியாய் கூறுகிறது. "கேதார்நாத்தில் லேட்டஸ்ட் ஹேங்கர்! ரெடிமேட் குகையில் கடுந்தவம்!' காந்திதேசம் 150 தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது. டெல்டாவை "டெல்டாவைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன், வயிற்றில் அடிக்கும் அரசுகள், நிதர்சன செய்தி. "காமக்கொடூரன்களை காக்கும் காக்கிகள்! மோசடி ஐ.ஜி. தலைகுனிந்த காவல்துறை' செய்தி காவல்துறையின் களங்கத்தை வெளிச்சம் காட்டுவதாக அமைந்தது.
பழ.கருப்பையாவின் "அடுத்த கட்டம்' தொடர் விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது.
_______________
வாசகர் கடிதங்கள்!
வதந்திக்கு நன்றி!
தாங்கள் நடிக்கும் படங்களின் ஸ்டில்களை வக்கணையாய் வெளியிடும் நடிகைகளின் மத்தியில், "நான் கர்ப்பவதி இல்லை' என்பதற்கான லேட்டஸ்ட் போட்டோக்களை அப்லோடு செய்ய வேண்டிய சங்கடச் சூழல் ராய்லட்சுமிக்கு. இதற்காக அவர், சில நிமிட மனவருத்தம் கொண்டாலும் கூட, அவ்வப்போது இப்படியான இல்லீகல் வதந்திகளால் தன்னை லைம்லைட்டுக்கு கொண்டுவருகிற குறும்பு ரசிகர்களுக்கு மானசீகமாய் நன்றி சொல்லிக்கொண்டுதான் இருப்பார்.
-எஸ்.சிவச்சந்திரன், வேலூர்.
"டிஜிட்டல்' கோல்மால்!
"பா.ஜ.க. 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' என்று எக்ஸிட்போல் முன்மொழிந்ததை "வலைவீச்சு' வழிமொழிந்தது. ஆனாலும், மோடியின் "டிஜிட்டல் சங்கிலி'யில் ஏதோ தேர்தல் கோல்மால் பிணைந்துள்ளதுபோல் உள்ளுக்குள் ஓர் எண்ணம் குறுகுறுன்னு ஊர்ந்துகொண்டுதான் இருந்தது.
-பி.கே.சுதன், குளித்தலை.