அவர்களை விடக்கூடாது , வனச்சரகர் (ஓய்வு) தமிழ்நாடு வனத்துறை, கன்னியாகுமரி மாவட்டம்.
அரசியல்வாதிகள், லஞ்ச அதி காரிகள், செல்வாக்கு படைத்த போலி சாமியார்கள் மற்றும் முதலாளித்துவ வாதிகளுக்கு வளைந்து கொடுக்காமல் 32 ஆண்டுகள் நிமிர்ந்து நிற்கும் நக்கீரனை ஒவ்வொரு தமிழனும் பாராட்டவேண்டும். நக்கீரன் அநீதி பக்கம் வளைந்து கொடுக்காத ஒரே காரணத்தினால் பட்டபாடும் அதனால் கொண்ட வேதனையும் நாடே அறியும்.
நக்கீரன் பொருளாதார ரீதியில் வளர்ந்து நிற்கிறதோ இல்லையோ, ஆனால் அரசியல்வாதிகள் மற்றும் அர சாங்கத்தின் போலி வழக்குகளையெல் லாம் முதுகில் சுமந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக, எழுத்துமூலம் குரல் கொடுக்கிற கலங்கரை விளக்காக நிமிர்ந்து நிற்பது பெருமையாக உள்ளது. அந்த அடிப்படையில் 28 ஆண்டுகளாக நக்கீரன் வாசகனாக நானும் பயணிப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.
நான் வனத்துறை அதிகாரியாக பணியாற்றும்போது வனத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரப்பனின் நட வடிக்கைகளை தெரிந்துகொள்ள நானும் என்னுடைய சுப்ரீயர்களும் நக்கீரன் இதழ் வாங்குவதற்கு கடைகடையாக அலைந்தது இன்னும் மறக்க முடியாத தருணமாக உள்ளது. அரசியல் மற்றும் க்ரைம்களுக்கிடையில் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் களின் கடைசிக்கால முடிவுகள் பற்றி திரு.கலைஞானத்தின் "கேரக்டர்' மூலம் வெளிவருவது சிறப்பாக உள்ளது.
2019 மே 01-3 இதழ்:
"எடப்பாடியின் 3 சீட்டு ஆட்டம்' உண்மையிலேயே அது திக்...திக்....தான். "பார்' நாகராஜனின் ஆடியோ வீடியோ வாக பார்த்து கேட்பதுபோல் உள்ளது. பழ.கருப்பையாவின் "அடுத்த கட்டம்' என்னைப் போன்ற ஓய்வர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. தமிழக தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு களை இன்னும் நக்கீரன் தோண்ட வேண்டும். ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும் திருகுஜாலக்காரர்களை விடக்கூடாது.
___________
வாசகர் கடிதங்கள்!
கண்டுகொள்ளவில்லை!
ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜக் மோகன் ராஜு, மத்தியஅரசுப் பணியில் இருக்கும்போதே அவரது பதவி உயர்வில் குறுக்குசால் ஓட்டியவர்கள் மீது தமிழக அரசு ஆக்ஷன் எடுக்க வில்லை என்கிறார். ஆனால் இப்போதோ அவர் தமிழக அரசின் கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டார், அப்படி யிருக்க... என்னத்த ஆக்ஷன் எடுத்து... ம்கூம்; அவர் இதுகுறித்த வழக்குக்காக கோர்ட் படிகளை ஏறி இறங்கி எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
-மு.நந்தினி சிவா, நூரோலை.
மரியாதை!
குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் தேர்தல் குறித்து அ.தி.மு.க. பக்கம் நின்று பேசுகிறார் "முதல் மரியாதை' தீபன். இது ஆளுந் தரப்பிடம் முதல் மரியாதையை எதிர்பார்த்து நக்கீரன் வழியே வேண்டுகோள் வைப்பதாகவே இருக் கிறது.
-கே.பரணி, காரைக்குடி.