பார்வை!-திருமதி சியாமளா நவநீதகிருஷ்ணன்

par

p

பெண்களின் உண்மையான சவுக்கிதார் துணை பேராசிரியர் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொள்ளாச்சி.

நக்கீரன் ஆசிரியரைப் பார்க்கவேண்டும்... பேச வேண்டும்... என்கிற ஆவல் எனக்குள் எப்போதோ உதயமாகிற்று.

அது எதற்காக என்றால் சமூகத்தில் பெரிய மனிதர்கள் என சொல்லி உலவி வருபவர்கள் சமூகத்திற்கு எப்படி தீங்கு விளைவிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை நக்கீரன் ஆசிரியர் பல சோதனைகளுக்கு இடையிலும், உயிர் மிரட்டல்களுக்க

p

பெண்களின் உண்மையான சவுக்கிதார் துணை பேராசிரியர் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொள்ளாச்சி.

நக்கீரன் ஆசிரியரைப் பார்க்கவேண்டும்... பேச வேண்டும்... என்கிற ஆவல் எனக்குள் எப்போதோ உதயமாகிற்று.

அது எதற்காக என்றால் சமூகத்தில் பெரிய மனிதர்கள் என சொல்லி உலவி வருபவர்கள் சமூகத்திற்கு எப்படி தீங்கு விளைவிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை நக்கீரன் ஆசிரியர் பல சோதனைகளுக்கு இடையிலும், உயிர் மிரட்டல்களுக்கு இடையிலும் வெளிக்கொண்டு வருவார். அந்த தைரியம் எனக்கு பிடித்திருந்த வேளையில்... சொர்க்க நிலம் என அழைக்கப்படும் எங்கள் ஊருக்குள்ளேயே இத்தனை நரக அசிங்கங்கள் நடந்தேறிக்கொண்டு இருந்ததா? என பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை ஆசிரியர் வெளியிட்டபோது, பொள்ளாச்சி பெண்ணான நான் மூர்ச்சையாகிப் போனேன் .

இப்போது ஆசிரியரை பார்த்தே ஆக வேண்டும் என, என் கணவரிடம் பிடிவாதம் பிடிக்கவும் தொடங்கிவிட்டேன்.

"உன்ன நம்பித்தானே வந்தேன்...?' என ஓர் இளம்பெண்ணின் கதறலைப் பார்த்து... "வேட்டை யாடிய வெறி நாய்கள்'ன்னு ஆசிரியர் அண்ணன் ஓர் அப்பாவாய் வெளியிட்ட வீடியோ எனது உள்ளத்தில் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு என்னிடம் பயிலும் பொள்ளாச்சி கல்லூரிப் பெண்களிடம் "நக்கீரனை படியுங்கள்... உங்களுக்கு துணிவு வரும்... உங்களுக்கு உண்மையான பாதுகாவலன் (சவுக்கிதார்) நக்கீரன்தான்' என நான் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

2019, ஏப்ரல் 24-26 இதழ்:

அமைச்சர் உத்தரவில் வாக்கு இயந்திர அறைக்குள் திருட்டுத்தனமாய் நுழைந்த தாசில்தார் உருவத்தில் ஆளும் கட்சியினர் ஒவ்வொருவரின் முகமும் எனக்குள் வந்துபோகிறது.

ஜெயலலிதா மரணத்தில் நாட்டுக்கே ஷாக் கொடுத்த சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி வீசி சசிகலாவுக்கே ஷாக் கொடுத்த தினகரன் கட்டுரை அற்புதம்.

பொன்பரப்பி முதல் பொன்னமராவதி வரை பரவிய சா"தீ'யை உடனடியாய் அணைக்க வேண்டும்.

___________

அப்படிச் சொல்லல...

ஏப். 24-26 தேதியிட்ட இதழில் "கூவாகம் திருவிழாவில் நுழைந்த ஸ்டெர்லைட்! -திருநங்கைகள் அதிர்ச்சி!' என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் திருநங்கை பபிதாவின் ஸ்டெர்லைட் ஆதரவுக் கருத்தையும் பதிவு செய்திருந்தோம். ஆனால் பபிதாவோ, ""மனிதாபிமான அடிப்படையில் 15 லட்சம் செலவு செய்த அந்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தேன். மற்றபடி நக்கீரனில் வந்ததுபோல் நான் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்தோ, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆதரித்தோ எதுவும் சொல்லல'' என்கிறார்.

-ஆர்.

nkn030519
இதையும் படியுங்கள்
Subscribe