தொடரட்டும் தொண்டு! இணைச் செயலாளர், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன்
கணக்கில் அடங்காத அச்சுறுத்தல்கள், கணக்கு வழக்கில்லாத வழக்குகள், உச்சபட்சமாக நக்கீரன் ஆசிரியர் மீது பாய்ந்த பொடா வழக்கு, இவை அனைத்தையும் தூள் தூளாக்கி துணிவுடன் வெற்றிநடை போட்டு 32-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நக்கீரனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் நிலைப்பாடும் அரசுகளும் மாறி மாறி வந்தாலும் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து சற்று
தொடரட்டும் தொண்டு! இணைச் செயலாளர், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன்
கணக்கில் அடங்காத அச்சுறுத்தல்கள், கணக்கு வழக்கில்லாத வழக்குகள், உச்சபட்சமாக நக்கீரன் ஆசிரியர் மீது பாய்ந்த பொடா வழக்கு, இவை அனைத்தையும் தூள் தூளாக்கி துணிவுடன் வெற்றிநடை போட்டு 32-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நக்கீரனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் நிலைப்பாடும் அரசுகளும் மாறி மாறி வந்தாலும் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகாமல் உண்மையை மக்களுக்கு கொண்டுசெல்வது நக்கீரனின் தனிச்சிறப்பு.
ஆன்மிக உலகின் கபடதாரிகளையும் சரி, அரசியல் உலகின் வேடதாரிகளையும் சரி பாரபட்சம் பார்க்காமல் பலபேரை தோலுரித்துக் காட்டியது நக்கீரன்தான். நான் சினிமாத்துறை சம்பந்தப்பட்டவன் என்பதால், நக்கீரன் குடும்பத்திலிருந்து வெளிவரும் "சினிக்கூத்து' இதழைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். கவர்ச்சிப் படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சினிமா செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து "சினிக்கூத்து' வெளிவந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. நூறாண்டு கடந்தும் நக்கீரனின் தொண்டு தொடர உள்ளன்புடன் வாழ்த்துகிறேன்.
2019, ஏப்.20-23 இதழ்:
தயாரிப்பாளர் ஐயா கலைஞானம் எழுதும் "கேரக்டர்' தொடர் மூலம் பல சினிமா நட்சத்திரங்களின் நிஜ கேரக்டரை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த இதழில் வெளியான நடிகை வசந்தா பற்றிய செய்தியை இப்போதுதான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன். அதே போல் ஐயா பழ.கருப்பையா எழுதும் "அடுத்த கட்டம்' அரசியல் சாட்டையடி என்றால் மிகையல்ல.
மீடியாக்களை கவர்ந்த மன்சூரலிகானின் டிசைன் டிசைனான பிரச்சாரம் குறித்த "மாவலி'யின் பதில் சும்மா நச்சுன்னு இருந்துச்சு. தமிழக தேர்தல் களச் செய்திகளுடன் அண்டை மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களின் தேர்தல் நிலவரம் பற்றியும் எழுதிவருவது நன்றாகவே இருக்கிறது.
__________
வாசகர் கடிதங்கள்!
தூங்குமூஞ்சி போல!
மத்திய-மாநில அரசுகளை "டைமிங்' கமெண்டுகளால் வறுத்தெடுக்கிறார்கள் "வலைவீச்சு' வாயாடிகள். அரசுக்கு ஒவ்வாமை தருகிற வேலூரில் "தேர்தல் ரத்து' என விழித்துக்கொண்ட தேர்தல் ஆணையம்... தனக்கு வேண்டப்பட்ட தேனியில் தூங்குமூஞ்சி போல கண்கள் மூடி நடிப்பதில் அதன் ஒருசார்புத் தன்மை அப்பட்டமாக பல்லிளிக்கிறது.
-ஆ.குமரேசன், சேலம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்!
பொன்பரப்பி, பொன்னமராவதி போன்ற தேர்தல் நேர சாதி தீவினைகளுக்கு மத்தியில் டூரிங் டாக்கீஸின் "குடும்பக் கதைகள்' கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ் சொல்கிறது. ஒவ்வொரு பதிவிலும் மகிழ்ச்சி, வாக்குமூலம், ஈகோ, இயலாமை, அவசரம், அக்கறை என குடும்பத்துக்கேயுரிய பரிமாறல்கள் வெளிப்படுகின்றன.
-வெ.அனிதா, விருதுநகர்.
மறுப்பு
2019, ஏப்.20-23 இதழ், ராங்-கால் பகுதியில் தன்னைப் பற்றி வந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று மறுக்கிறார் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியான மு.பாலாஜி.
-ஆர்.