இப்போதே ரிசல்ட்! கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனத் தலைவர், நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்க பொருளாளர், நாகை மாவட்டம்.
எத்தனை வழக்குகள் வந்தாலும், அசராமல் தங்களின் நடுநிலையில் இருந்து மாற்றிக்கொள்ளாமல், வளைந்துகொடுக்காமல் வழக்குகளை துணிவோடும், ஆதாரத்தோடும், "நக்கீரன்' சந்திப்பது எங்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்தத் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும்? எதைய
இப்போதே ரிசல்ட்! கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனத் தலைவர், நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்க பொருளாளர், நாகை மாவட்டம்.
எத்தனை வழக்குகள் வந்தாலும், அசராமல் தங்களின் நடுநிலையில் இருந்து மாற்றிக்கொள்ளாமல், வளைந்துகொடுக்காமல் வழக்குகளை துணிவோடும், ஆதாரத்தோடும், "நக்கீரன்' சந்திப்பது எங்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்தத் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும்? எதையும் மக்கள் மன்றத்தில், எந்த நெளிவு சுளிவு இல்லாமல் நேர்கோட்டில் வெளிக்கொண்டுவரும் பாங்கே நக்கீரன் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வத்திற்கான முக்கிய காரணம்.
2019 ஏப்ரல் 10-12 இதழ்:
இந்த இதழிலும் அட்டைப்படம் டாப். கல்லோடு எடப்பாடியையும், மோடியையும் தூக்கி வீசுவதுபோல் காட்டியிருப்பது அதிகார மக்கள் விரோத ஆட்சிகளை மக்கள் தூக்கியெறியப் போவதை காட்டியுள்ளது. இப்போதே ரிசல்ட் தெரிந்துவிட்டது.
தமிழகத்தை மட்டுமல்ல உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை இன்றுவரை தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டிவருவது பாராட்டுக்குரியது.
"அனல் பறக்கும் களம்! அசராத திருமா' என்கிற கட்டுரை, ஒடுக்கப்பட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் தங்கள் குரல் ஒலிக்கும் என்பதை நிரூபித்துள்ளது.
அய்யா கலைஞானத்தின் "கேரக்டர்' தொடர் மிகமிக அருமை. கெட்டுப்போன ரத்தமா, ரத்த குரூப் மாற்றமா கர்ப்பிணிகள் உயிரை பறித்த மருத்துவ ஊழல் செய்தி நடுங்க வைக்கிறது.
______________
வாசகர் கடிதங்கள்!
வேட்பாளரின் பலம்!
எதிர்நிலைப் போட்டியாளர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், "நான் வெற்றி மகுடம் சூடுவேன்' என்கிற சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் அழுத்தமான தன்னம்பிக்கையில் தந்தையின் பக்கபலமும் வெகுஜோராக கலந்திருக்கிறது.
-எஸ்.ஆர்.சேகர், திருமயம்.
வானம் பார்த்த பூமி!
மிஸ்டர் மோடி, விவசாயி அய்யாகண்ணுவை சந்திக்க வேண்டிய நேரத்தில் சந்திக்கவில்லை. ஆனால் சந்திக்கக் கூடாத தேர்தல் நேரத்தில் இருவரின் சந்திப்பு படலம் அரங்கேறிவிட்டது. இதனால் விவசாயிகள் வைத்த மிக முக்கிய கோரிக்கைகளும் வானம் பார்த்த பூமியாகியிருக்கிறது.
-கா.மணிமாறன், மன்னார்குடி.