இருபது ஆண்டு காலமாக நக்கீரனின் வாசகனாக இருக் கிறேன். புலனாய்வில் தலைநிமிர்ந்து நிற்கும் நக்கீரனின் வாசகனாக இருப்பதில் எனக்கு பெருமை. ஆட்சி அதி காரத்தின் திமிருகளை யும், சமூக அவலங் களை தோலுரிப்பதி லும் எட்ட முடியாத சாதனைகளை செய்திருப்பது நக்கீரன் மட்டுமே! அடக்குமுறைகள் எவ்வளவு ஏவப்பட்டாலும் அதனை சட்டத்தின் வழியாக எதிர்கொண்டு மற்ற பத்திரிகை களுக்கு முன்னோடியாக இருக்கிறது நக்கீரன். இதற்கு அண்மைக்கால உதாரணம், நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரனுக்கு எதிராக அதிகாரவர்க் கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை களும் அதனை நக்கீரன் உடைத்தெறிந்த சம்பவங்களுமே சாட்சி. மக்களின் கதாநாயகனான நக்கீரனின் பணி தொடர வேண்டும்!
2019, மார்ச் 27-29 இதழ்:
ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து நக்கீரன் எழுதிய பல விச யங்கள் இன்றைக்கு நீதிமன் றத்தால் உறுதி செய்யப்படு வதை ஜெ.வின் கைரேகை மோசடி அம்பலப்படுத்தி யுள்ளது. அதேபோல, தின கரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கி லும் நக்கீரனின் சாட்சியம்தான் குற்றவாளிகளை தண்டிக்க உதவி யிருப்பதை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அதுகுறித்து பல தரப்பினரும் பதிவு செய்துள்ள கருத்துக்கள் சூப்பர்!
அரசியல் வி.ஐ.பி. வேட்பாளர்கள் போட்டி யிடும் தொகுதிகளின் கள நிலவரங்கள் விறு விறுப்பாக இருக்கிறது. கலைஞானத்தின் "கேரக்டர்' தொடரில் இந்த இதழில், கமலின் "நாயகன்' கதை உருவான சம்பவத்தை விவரிக்கிறார். கதை உருவான பின்னணி சுவாரஸ்யமாக இருக்கிறது. சிக்னல் பகுதியில் வந்துள்ள குடிமகன்களின் அதிரடி கோரிக்கை, சுயேட்சையாகும் அ.தி.மு.க. மாஜி, ஓட்டைப் பிரிக்கும் முத்தரையர் சங்கம் ஆகிய செய்திகள் மூன்றும் அதிரடி! வேளாண்துறையில் முத்துக்குமாரசாமி தற்கொலை சம்பவமே இன்னும் மறக்க முடியாத போது, அதிகாரிகளை தற்கொலைக்குத் தூண்டும் அமைச்சரின் வாரிசு என்கிற செய்தி திடுக்கிட வைக்கிறது. இந்த இதழின் ஒவ்வொரு செய்தியும் அதிரடியாக இருக்கிறது.
_________________
வாசகர் கடிதங்கள்!
டச்சிங்-டெஸ்டிங்!
அரசியல் கடலில் ஆழம் தெரியாமல் இல்லை, தெரிந்தே காலை ஊன்றிருக்கிறார், கமல். இரண்டுவித தேர்தலிலும் நிற்காதது குறித்து ம.நீ.ம. தலைவர் விடுத்த "பல்லக்கு' கமெண்ட்-ஹார்ட் டச்சிங், தேர்தல் நேர மைக் டெஸ்டிங்.
-ஆர்.எஸ்.பிரபாகரன், ஆத்தூர்.
காலக்கண்ணாடியில் வாசகர்கள்!
"பார்வை' எனும் பெயரில் வரும் நக்கீரன் விமர்சனப் பகுதி, வாசகர்களுக்கான ஒரு வாய்ப்பு. இதில், அவர்கள் குறிப்பிடும் அன்றைய நக்கீரனின் சாதனைகள், மதிப்பீடுகள் இன்றைய தலைமுறை களுக்கு காலக்கண்ணாடியாக இருக்கிறது.
-க.தேன்மொழி, கோவில்பட்டி.