Advertisment

பார்வை!-டாக்டர் ஆர்.பழனியப்பா

parvai

parvai

நான் ஒரு டாக்டர் என்பதால், சேவைக் கண்ணோட்டத்திலேயே நக்கீரனைப் பார்க்கிறேன். டாக்டர்கள் நாங்கள் என்ன செய்கிறோம்? நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணத்தைக் கண்டுபிடித்து, அதனைத் தணிக்கும் வழிமுறையை, நோயாளியின் உடலுக்குப் பொருந்தும்விதத்தில் சிகிச்சையாக மேற்கொள்கிறோம்.

Advertisment

நக்கீரன் என்ன செய்கிறது? எங்கே என்ன பிரச்சனை என்று முதலில் தேடிச்செல்கிறது. அங்கே பிரச்சினை எழுந்ததற்கான காரணத்தைப் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கிறது.

parvai

நான் ஒரு டாக்டர் என்பதால், சேவைக் கண்ணோட்டத்திலேயே நக்கீரனைப் பார்க்கிறேன். டாக்டர்கள் நாங்கள் என்ன செய்கிறோம்? நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணத்தைக் கண்டுபிடித்து, அதனைத் தணிக்கும் வழிமுறையை, நோயாளியின் உடலுக்குப் பொருந்தும்விதத்தில் சிகிச்சையாக மேற்கொள்கிறோம்.

Advertisment

நக்கீரன் என்ன செய்கிறது? எங்கே என்ன பிரச்சனை என்று முதலில் தேடிச்செல்கிறது. அங்கே பிரச்சினை எழுந்ததற்கான காரணத்தைப் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கிறது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து தகவலோ, விளக்கமோ பெறுகிறது. அங்கே பிரச்சனையை சந்தித்துவரும் மக்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில், உரியவர்களுக்கு உணர்த்திடும் வகையில் செய்தியாக்கி வாசகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது. நக்கீரன் வெளியிடும் ஒவ்வொரு செய்தியும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு, கிராமம், நகரம், மாநிலம், தேசம் என்பதைக் கடந்து உலகளாவிய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

Advertisment

2018, மே 26-29 இதழ்:

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவருக்கு மீசை வைத்து, "இங்கே ஒரு ஹிட்லர்'’ என்று மக்களிடம் அடையாளம் காட்டிய அதே துணிச்சலை இப்போதும் பார்க்கிறேன். அவர் உருவாக்கிய பலரும் இப்போது ஹிட்லர்களாகிவிட்டது காலத்தின் கொடுமைதான்!

நரவேட்டை ஆடிய போலீஸ் என்பதற்கு ஆதாரமாக, கலவரமே நடக்காத இடத்திலும், டூவீலரிலும், தெருக்களிலும், கையில் துப்பாக்கியோடு, மக்களைக் குறிவைத்து, கொலை வெறியோடு அலைந்ததைப் படம் பிடித்து, காட்சிப்படுத்திய விதம் அருமை. திண்ணைக் கச்சேரி, மிட்நைட் மசாலா என, ஜனரஞ்சகமான செய்திகளுக்கும் குறை வைக்கவில்லை. தூத்துக்குடி உயிரிழப்புகளால், தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும்போது, இந்த இதழில் "வலைவீச்சு காமெடி' வேண்டாம் என்று தவிர்த்துவிட்டீர்கள் போலும். தொடரட்டும், நக்கீரனின் சமூக சிகிச்சை.

----------------------

வாசகர் கடிதங்கள்!

ஊற்றுக்கண் அடைத்த எஸ்.பி.!

அமைச்சர் மணிகண்டனிடம் கடுகு அளவிலும் காரம் குறையாமல் தன் எதிர்ப்பை பதிவிட்டிருக்கிறார் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா. மணல் மாமூலுக்கான ஊற்றுக்கண்களையும் அடைத்தால் அமைச்சரின் கோபம் திமிறத்தானே செய்யும். நாம், தில்லான எஸ்.பி.யை பாராட்டினாலும் கூட ஒரு கொலை விழுந்திருச்சே!

-வா.சகாதேவன், தஞ்சாவூர்.

சுயசரிதையிலும் பொய்!

மலேசிய பிரதமர் நஜிம் குடும்பமே நாட்டை கொள்ளையிட்டு குதூகலித்திருக்கிறது. நகைமோகப் பிரியரான பிரதமரின் மனைவி ரோஷ்மா, சுயசரிதையிலும் பொய் சொல்லலாம் என்பதற்கு ஓர் உதாரணமாகியிருக்கிறார்.

-ஆர்.தேவா, அறந்தாங்கி.

nkn05.06.18
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe