"தில்லானா மோகனாம்பாள்', "பொன்னியின் செல்வன்' போன்ற தொடர்கள் வெளிவந்த காலங்களில் அவை வெளியான இதழ்கள் கடைகளை அடையும்முன்னர் முகவர்களிடமிருந்து பறித்து வாசித்த காலம் ஒன்று இருந்தது. எனது தலைமுறையில் "நக்கீரன்' இதழ்கள் வெளியாகும்போது, மேற்படி நிகழ்வு மீண்டும் நடக்கக் கண்டேன். ஆட்டோசங்கர் தனது வழக்கறிஞர் மூலமாக அளித்த "மரண வாக்குமூலம்' என்ற தொடர், நக்கீரன் ஆசிரியரின் "சேலஞ்ச்' தொடர் மற்றும் "வார்த்தை சித்தர்' வலம்புரிஜானின் "வணக்கம்' தொடர் போன்றவை "நக்கீரன்' இத
"தில்லானா மோகனாம்பாள்', "பொன்னியின் செல்வன்' போன்ற தொடர்கள் வெளிவந்த காலங்களில் அவை வெளியான இதழ்கள் கடைகளை அடையும்முன்னர் முகவர்களிடமிருந்து பறித்து வாசித்த காலம் ஒன்று இருந்தது. எனது தலைமுறையில் "நக்கீரன்' இதழ்கள் வெளியாகும்போது, மேற்படி நிகழ்வு மீண்டும் நடக்கக் கண்டேன். ஆட்டோசங்கர் தனது வழக்கறிஞர் மூலமாக அளித்த "மரண வாக்குமூலம்' என்ற தொடர், நக்கீரன் ஆசிரியரின் "சேலஞ்ச்' தொடர் மற்றும் "வார்த்தை சித்தர்' வலம்புரிஜானின் "வணக்கம்' தொடர் போன்றவை "நக்கீரன்' இதழுக்காக வாசகர்களை தவமிருக்க வைத்தன. "சேலஞ்ச்', "வணக்கம்' தொடர்களுக்காக வானளாவிய அதிகாரம் கொண்டதாக தன்னை கருதிக்கொண்ட அப்போதைய ஆளுங்கட்சியால் விதிக்கப்பட்ட நக்கீரனுக்கு மட்டுமான நெருக்கடி நிலையை, "நக்கீரன்' அச்சமின்றி எதிர்கொண்டு "மக்களாட்சியின் நான்காவது தூண்' என தன்னை நிறுவிக்கொண்டது.
நெருப்பாற்றில் நீந்திய இதழியல் பயணத்திற்குச் சொந்தமான இதழ் "நக்கீரன்.' எத்தனை செய்திச்சேனல்கள் வந்தாலும், அச்சு ஊடகமான செய்தித்தாள்கள் வாசித்தாலும், செய்திகளின் பின்னணியை அறிய நக்கீரனின் புலனாய்வுக் கட்டுரைகள்தான் உதவுகின்றன.
2019 மார்ச் 23-26 இதழ்:
"பொள்ளாச்சி பாலியல் கொடூரம்' நிகழ்வில் அதிகாரத்தின் கொடுங்கரங்களால் உண்மையின் குரல்வளையை நெரிக்க முயற்சி செய்வதை அட்டைப்படக் கட்டுரை விளக்குகின்றது. மாவலி பதில்களில் பல வாசகர்களுக்கு பல வரலாற்று உண்மைகளைக்காட்டும் திறப்பாக விளங்குகிறது.
ராங்-கால் பகுதியில் உளவுத்துறை ரிசல்ட் மூலம், மாநில அரசியலை பேசும் அதே தருணத்தில் தேர்தல் களத்தை சூடாக்கிய படங்கள் என்கிற கட்டுரை தேசிய அரசியலை பேசுகிறது. கலைஞானம் அவர்கள் சினிமா பற்றிய தொடர் தருகிறார். பழ.கருப்பையா எழுதுவது அரசியல்! நக்கீரன் காலந்தோறும் கலை மற்றும் அரசியல் தொடர்களுக்கு களம் அமைத்து தருவதில் சமநிலையை பேணி வருவதற்கு இந்த இதழும் ஒரு சான்று.
________________
வாசகர் கடிதங்கள்
ஓய்விலும் அதிகாரம்!
ஜெ. தனக்கு வேண்டப்பட்டவர்களின் பதவித் துறப்புக்குப் பிறகு அரசுக்குத் தோதான மாற்று அதிகாரத்தில் அவர்களை தக்கவைத்துக் கொள்வார். இப்போது டி.ஜி.பி. ராஜேந்திரன் ஓய்வுக்குப் பிறகான பதவி விஷயத்திலும் ஜெ.வைப் போலவே எடப்பாடியும் செயல்படுகிறார். இந்த கேப்பில் "எனக்கொண்ணு'னு தன் கணவருக்கும் பதவித் துண்டு போடுகிறார் ரிட்டயர்மென்ட்டுக்கு ரெடியாகும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
-எஸ்.ரமேஷ், நாகை.
வெளிச்சப்படுத்துவதில் முதலிடம்!
சமூக அரசியலோ இன்னபிற துறைகளோ இவற்றில் எதில் ஊழல் முறைகேடுகள் அரங்கேறினாலும் நக்கீரனே அவற்றை முதலில் வெளிச்சப்படுத்துகிறது. அந்த வகையில் மேலும் ஓர் அதிரடியாக சிலை மோசடி அதிகாரி வீரசண்முகமோனி கைதாகியிருக்கிறார்.
-கே.லட்சுமி, ஒரத்தநாடு.