சமரசங்கள் அற்று, அரசியல் குற்றங் களைப் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தி, சமூக நீதியை நிலைநாட்டுவதை நோக்க மாகக் கொண்டு வெளிவந்துகொண்டிருக் கிறது நக்கீரன் பத்திரிகை. அதைப்பற்றி அசைபோட ஏராளமான நினைவலைகள் எல்லோருக்கும் இருக்கும்.
மிகச் சமீபத்தில் வீரப்பன் குறித்து நக்கீரன்கோபால் சார் எழுதி வெளிவந்த "வீரப்பன்' எனும் நூலில் வீரப்பனோடு, தான் பழகிய நினைவுகளைப் பகிர்ந்து கொண் டார். காட்டின் நுட்பங்களை, காட்டு யானைகளை வீரப்பன் அணுகிய விதத்தைப் பற்
சமரசங்கள் அற்று, அரசியல் குற்றங் களைப் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தி, சமூக நீதியை நிலைநாட்டுவதை நோக்க மாகக் கொண்டு வெளிவந்துகொண்டிருக் கிறது நக்கீரன் பத்திரிகை. அதைப்பற்றி அசைபோட ஏராளமான நினைவலைகள் எல்லோருக்கும் இருக்கும்.
மிகச் சமீபத்தில் வீரப்பன் குறித்து நக்கீரன்கோபால் சார் எழுதி வெளிவந்த "வீரப்பன்' எனும் நூலில் வீரப்பனோடு, தான் பழகிய நினைவுகளைப் பகிர்ந்து கொண் டார். காட்டின் நுட்பங்களை, காட்டு யானைகளை வீரப்பன் அணுகிய விதத்தைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் ஒரு நாவல் படிக்கின்ற சுவாரஸ்யம் அதில் இருந்தது.
ஆளும் அரசின் எதேச்சதி காரத்திற்கு எதிராக, தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் பத்திரிகை அறத் தைக் கடைப்பிடிப்பதால் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியும், புன் னகை மாறாத முகத்துடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக் கிறார் ஆசிரியர்.
அந்த வகையில், சமீபத்தில் பொள் ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச் சினையில் பத்திரிகை அறத்துடன் அந்தப் பிரச்சினையை மக்களிடம் கொண்டுசென்றது நக்கீரன்தான். அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், நக்கீரனில் வெளிவந்த வீடியோக் கள் மற்றும் கட்டுரைகள் மூலமாகத்தான் சமூக வலைத்தளங்களில் இந்தப் பிரச்சினை காத்திரமாகப் பேசப்படுகிறது.
2019, மார்ச் 16-19 இதழ்:
"தமிழகத்தைத் தட்டி எழுப்பிய நக்கீரன்' எனும் கட்டுரையில், திரைத்துறைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து நக்கீரன் வீடியோ வெளியிட்டது பற்றி பாராட்டி, கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியிடாமல் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்குமா என்பது அனைவருடைய கருத்தாகவும் இருக்கிறது.
பத்திரிகைத் துறையில் ரௌத்திரம் பழகுவது நக்கீரன் என்பதில் ஐயமில்லை.
______________
வாசகர் கடிதங்கள்!
பலிகடா!
"விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என்று ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் அசத்திய ராகுலும் சொல் கிறார். பாவப்பட்ட விவசாயி கள் டெல்லிவரை சென்றும் பிரதமரை பார்ப்பதற்குக் கூட நேரம் ஒதுக்காமல் தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்டார்கள். எப்போதும்போல தேர்தல்நேர கோரிக்கைகளில் பகடைக்காயாக முன்னெடுக்கப்பட்டு கள வெற்றிக்குப் பிறகு உடனடி பலிகடாக்களாக ஆக்கப்படுவதும் அதே விவசாயிகள்தான்.
-ஆர்.குணசேகரன், திண்டுக்கல்.
நிறங்களுக்கேற்ற செய்திகள்!
சிவப்பு-மாஜி ஆக்கப்பட்ட மா.செ.! மஞ்சள் -கப்பலில் வருதா தென்னங்கன்று? பச்சை -பலியான விவசாயி! இப்படி நிறங்களுக்கு ஏற்றாற்போல "சிக்னல்' செய்திகளின் தன்மையும் அமைந்திருப்பது ஏகப்பொருத்தம்.
-கெ.அரங்கநாயகம், கள்ளக்குறிச்சி.