10-ஆம் வகுப்பு படிக்கும்போதே வீட்டுக்கு அருகிலிருந்த லைப்ரரியில் நக்கீரன் எனக்கு அறிமுகம். அன்றுமுதல் அதன் வாசகி நான். மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையையும், பிறர் வெளியிடத் தயங்கும் பிரச்சனையையும் அச்ச மின்றி வெளிக்கொண்டு வருவது நக்கீரன். நக்கீரன் கோபால் சாரை போன்ற துணிச்சல், அனைத்து ஊடக ஆசிரியர்களுக்கும் இருந் தால் ஜனநாயகத்தின் நான் காம் தூண் மதிக்கப்படும். ஆனால் அத்தகைய மதிப்பு மிக்க பத்திரிகைகளை இப்போது தேடவேண்டி யுள்ளது. செய்திகளின் பின் னணியை புலனாய்வு செய்து மக்களிடம் மறைக்கப்படும் விஷயங்களை வெளிச்சத் துக்கு கொண்டு வருவதில் நக்கீரன் பாணியே தனி. நக்கீரனின் செய்திகள் உண்மை யான குற்றவாளிகளைப் பிடிக்க பலமுறை காவல்துறைக்கே உதவியிருக் கிறது. தவறு செய்தவர்கள் தண்டிக் கப்படும் வரை விடாப்பிடியாக போராடும் போராளியாக நக்கீரன் தொடர்கிறது.
பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை கும்பலை தார்மீக கோபத் துடன் மக்கள் மத்தியில் அம்பலப் படுத்தி இன்று உலகையே பொள் ளாச்சி கொடூரன்களுக்கு எதிராக திருப்பியதில் நக்கீரன் பங்கு மகத் தானது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக நக்கீரன் கோபால் அவர்களை எல் லோரும் வாழ்த்திக் கொண்டிருக் கிறார்கள். குற்றவாளிகளோ அவரை குதறத் துடித்துக் கொண்டிருக்கிறார் கள். பொடாவையே சந்தித்த நக்கீரன், ஆளும் அராஜக ஆட்சியின் அவலங் களை தோலுரித்து அவர்களை அலற விட்டுக் கொண்டிருக்கிறது என்பதே எதார்த்த உண்மை.
2019, மார்ச் 13-15 இதழ்:…
பொள்ளாச்சி பாலியல் கொடுமை குறித்த அட்டைப்படமே பதறவைக்கிறது. அதுகுறித்த செய்தி கள் எந்த தயவுதாட்சண்யமும் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் சூரத் வைர மார்க் கெட்டை நிலைகுலையச் செய்த -ஜெயலலிதா குவித்த வைரம், விற்கப்பட்ட பின்னணி மலைப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் அரசியலில் தூத்துக்குடி தொகுதி நிலவரம் பாரபட்சமின்றி ஆராயப்பட்டிருக்கிறது. ஊடக சுதந்திரத்திற்காக எத்த னையோ களங்களை கண்ட நக்கீரன், இந்து என்.ராம் அவர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடத்திய கண் டன கூட்டம் பாராட்டுக் குரியது.
_______________
வாசகர் கடிதங்கள்!
பொல்லாங்கு அரசு!
ஜிண்டாலிடம் தேர்தல் செலவுக்கு பணம் கேட்ட எடப்பாடி அரசிடம் "போ போ'னு வழியனுப்பி வைத் தது அந்த இரும்புத்தாது நிறுவனம். "இப்ப சுற்றுச்சூழல் மாசு சொந்த வீட்டுக்குள்ள தூசு' என சொல்லி, ஆலைக் கான அடிப்படைத் தேவை களுக்கு வேட்டுவைத்து தனது பழிவாங்கும் புத்தியை நிரூபித்துவிட்டது பொல் லாங்கு அரசு.
-எல்.அருண்மொழி, மயிலாடுதுறை.
காமத்தின் விளக்கம்!
கலைஞானத்தின் "முத்தம்மா கதை' உணர்ச்சி களின் தொகுப்பு. காமத்துக்கு முத்தம்மா தரும் விளக்கம், ஓஷோவின் "காமத்திலிருந்து கடவுளுக்கு' என்கிற நூலில் பொதிந்து கிடக்கும் தத்துவங் களை நினைவலையில் கொண்டுவருகிறது.
-வி.அழகேசன், அரியலூர்.