parvai

முகிலன் மர்மம்! பொருளாளர்-திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் "விடுதலை' இதழின் செய்தியாளர்.

மாசு படிந்த நமது அரசியல் கதைகளை தூசி தட்டி வாசித்தாலும் நக்கீரனில் வீறுகொண்டு எழுதிய உண்மைகள் எக்காலத்திலும் சாட்சிகளாகவும் சாட்டைகளாகவும் இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

எத்தனை எத்தனை இடர்ப்பாடுகள் எதிரிகளிடம் இருந்து வந்த போதும் அதை எதிர்கொண்ட பத்திரிகை உலகின் மாவீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உயிரோட்டமில்லாத உதவாக்கரைகள் கொக்கரித்த காலம் முதல் இன்று வரை "நக்கீரன்' சந்தித்த சோதனைகள் சொல்லில் அடங்காது. சாமியார்களின் லீலைகளும் சனாதன பேர்வழிகளின் முகமூடிகளும் தொடர்ந்து கிழித்தெறியப்படுகின்றன.

Advertisment

2019, மார்ச் 2-5 இதழ்:

"இழுபறி' உண்மையாகவே க்ளைமாக்ஸ், இழுபறியாகத்தான் இருக்கிறது. "முகிலன் உயிருடன் இருக்கிறார் எங்கே?' அவருக்காக மக்கள் போராடும்போது, அவரது மனைவி பேட்டியில் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

"இந்தியாவை மீட்போம்! தமிழகத்தை காப்போம்! உரக்கச் சொன்ன கம்யூனிஸ்ட் மாநாடு!' இன்றைக்கு ஆளும் மத்திய-மாநில அரசாங்கங்களின் நயவஞ்சகச் செயல்களைப் பற்றியும் ஒவ்வொரு தலைவரின் பேச்சையும் ரத்தினச் சுருக்கமாய் பாமரனுக்கு புரியும் வண்ணம் வெளிப்படுத்தியிருக்கிறது.

Advertisment

அரசியல்வாதிகளின் கூட்டணியை விட "போலீஸ்-ரவுடீஸ் மெகா கூட்டணி' என்கிற செய்தி விறுவிறுப்பாக இருந்தது. "எடப்பாடி அரசின் ரூ.2000! -ஏழைத்தொழிலாளர்கள் எதிர்வினை!' என்கிற செய்தி... மக்களின் பக்கமிருந்து பிரதிபலித்தது வரவேற்கத்தக்கது. ராங்-கால், திண்ணைக்கச்சேரி, வலைவீச்சு, டூரிங் டாக்கீஸ் ஆகிய பகுதிகள் எப்போதும் நக்கீரனின் டாப்டக்கர் பக்கங்கள்.

"வாரிசு அரசியல்! கூட்டணிக் கூத்து! மய்யம் கொண்ட கமல் புயல்!' என்கிற செய்தியில் கமலின் நிஜ அரசியலை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்த விதம்... என ஒவ்வொரு வரியிலும் உண்மைகளை நாட்டு மக்களுக்கு உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கும் நக்கீரன் பணி என்றுமே மிக மிகச் சிறப்புடையது.

வாசகர் கடிதங்கள்!

மரணத்திற்கு ஒப்புதல்!

நோயாளிகள் எல்லோருமே ஆரோக்கியத்தை எதிர்நோக்குகிறவர்கள்தான். இதில், கவர்னர் செயலாளரின் தாயாருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரின் வசிப்பிடத்திற்கே பொது நோயாளிகளுக்கான வெண்டிலேட்டரை எடுத்துச் சென்றது பதவி அதிகாரத் திமிரையே பிரதிபலிக்கிறது. இது ஏழைகளின் மரணத்திற்கு முழு ஒப்புதல் அளிக்கிற அரசாங்கத்தின் ஒரு மறைமுக முயற்சிதான்.

-வி.கருணாகரன், ஈரோடு.

முரண்படும் கூட்டணி!

தந்தை ராமதாசு, தனயன் அன்புமணி ஆகியோரின் கடந்தகால அரசியலின் வாய்ப்பந்தல்களை அடுத்தடுத்த நக்கீரன் இதழில் சுட்டிக்காட்டி... முரண்பட்ட நிகழ்வுகளைத் தோரணங்கட்டி தொங்க விட்டுவிட்டார் "அடுத்த கட்டம்' பழ.கருப்பையா.

-அ.குணசேகரன், சிவகாசி.