Advertisment

பார்வை!-எஸ்.சிவா

parvai

parvai

Advertisment

ருபத்தைந்து வருடங் களாக நக்கீரனை வாசிக்கிறேன், அதன் உண்மையையும் நேர்மை யையும் துணிவையும் ஆழமாக நேசிக்கிறேன். மீடியா உலகில் பலபேர் வரலாறு படிப்பார்கள். ஆனால் கோபாலண்ணன் ஒருத்தர்தான் வரலாறு படைக்கிறார். மக்களிடம் பாகுபாடு பார்க்காமல் அரசாட்சி நடத்தியவன் சிறந்த மன்னன். அதேபோல் அரசியல் கட்சிகளிடம் பாகுபாடு பார்க்காமல் விமர்சிப்பவன் எங்களது நக்கீரன்.

இப்போதுவரை பல திக்குகளிலிருந்தும் நக்கீரனை நெருக்கடி நெருப்பு

parvai

Advertisment

ருபத்தைந்து வருடங் களாக நக்கீரனை வாசிக்கிறேன், அதன் உண்மையையும் நேர்மை யையும் துணிவையும் ஆழமாக நேசிக்கிறேன். மீடியா உலகில் பலபேர் வரலாறு படிப்பார்கள். ஆனால் கோபாலண்ணன் ஒருத்தர்தான் வரலாறு படைக்கிறார். மக்களிடம் பாகுபாடு பார்க்காமல் அரசாட்சி நடத்தியவன் சிறந்த மன்னன். அதேபோல் அரசியல் கட்சிகளிடம் பாகுபாடு பார்க்காமல் விமர்சிப்பவன் எங்களது நக்கீரன்.

இப்போதுவரை பல திக்குகளிலிருந்தும் நக்கீரனை நெருக்கடி நெருப்பு சூழ்ந்து கொண்டிருந்தாலும், வழக்கு என்னும் தீ துரத்திக்கொண்டிருந்தாலும் தைரியம் என்னும் தண்ணீர் மூலம் அதையெல்லாம் அணைக்கும் லாவகம், நக்கீரனுக்கு மட்டுமே உண்டு. லே-அவுட் கலை என்பது கோபாலண்ணனுக்கு கைவந்த கலை. அந்தக் கலைதான் நக்கீரன் அட்டைப்படமாக பேசுகிறது. அப்பல்லோ மர்மங்கள், நிர்மலாதேவி விவகாரங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொலைகள் குறித்து, யூ-டியூப்பில் கோபாலண்ணன் பேசியது அத்தனையும் உண்மைகள், உண்மைகள், உண்மைகளைத் தவிர வேறொன்றும் இல்லை.

2019 பிப்.27-மார்ச்.01 இதழ்:

"கூட்டணி உள்குத்து! ஓட்டைப் பிரிக்கும் கட்சி கள்!' அட்டைப்படமே சொல்லிவிட்டது, இரண்டு தலைமை, அந்த தலை மையைச் சுற்றி பல தலைகள் சுழலும் சீட்டு அரசியலையும் ஓட்டு அரசியலையும். ஆமா இந்த ஓ.பி.எஸ்.சுக்கு ஏங்க இந்த நிலைமை. அமித்ஷா எதிரில் உட்கார்ந்திருக்கும் போது கூட, ஜெயலலிதா எதிரில் உட்கார்வது மாதிரியே உட்கார்ந்திருக்காரே. "பழைய அரசியலுக்குத் திரும்பி விட்டது பா.ம.க.'ன்னு பழ.கருப்பையா நச்சுன்னு போட்டுத் தாக்கிட்டாரு.

"ஆமா... குப்புற விழுந்தோர் பட்டியல்ல ஒண்ணு ரெண்டு பேரை தெரிஞ்சுக்க முடிஞ்சது, ஆனா அந்த "குட்மார்னிங் நடிகை' யாருன்னு தெரியலையே. யாருங்க... அந்த நடிகை?'

____________

வாசகர் கடிதங்கள்!

சமதர்ம சமுதாயம்!

சாதி-மத மறுப்புச் சான்றிதழ் பெற்று சமூக மாற்றத்துக்கான ஒரு முகூர்த்தக் கல்லை நட்டிருக்கிறார் வழக்கறிஞர் சினேகா. அவர் வழக்கறிஞர் என்பதால் இது சாத்தியமாயிற்று என்று கருதிவிட முடியாது. இந்த சமதர்ம சுதந்திரத்தை அவர் அடைவதற்கு நகர்த்திய போராட்ட தடைக்கற்கள் ஏராளம்! ஏராளம்!

-ஆர்.சுகுணா, கோவை.

சமூக நல்லிணக்கம்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநாடு பச்சைக்கொடி பதற்றத்துடன் தொடங்கி... மதவாத ஆட்சியாளர்களின் குரல், தேர்தலுக்காக ராணுவத் தாக்குதல், மதக் கலவரங்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல் என தேசத்தின் இழிவுகளை இடித்துரைத்து சமூகத்துக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்தி செவ்வனே முடிந்திருக்கிறது.

-எஸ்.தேவா, கூடலூர்.

nkn080319
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe