parvai

ந்நிலை வந்தாலும் தன்னிலை மாறாமல் நேர்மையான போர்க்குணத்தோடு, பீடுநடை போட்டு வரும் நக்கீரன் வாரமிரு முறை இதழின் வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

Advertisment

நக்கீரன் குழுமம் சந்தித்த இன்னல் களைப்போல, இதுவரை பத்திரிகை ஊடக உலகம் சந்தித்திடவில்லை என்று சொல்லுவது மிகையாகாது.

அதற்கு முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவில் துவங்கி, சங்கரமடம், பிடதிமடம் வழியாக, இன்று தமிழக ஆளுநர் வரை எத்தனையோ சம்பவங்களும், வழக்குகளும் அதில் வெற்றிகண்ட தீர்ப்புகளுமே ஆதாரம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா நக்கீரனையும் அதன் ஆசிரியரையும் விட்டேனா, ஒழித்தேனா என்கிற நிலைப் பாட்டில் இருந்து கடைசி வரை மாறவில்லை. அதேபோல் நக்கீரன் ஆசிரியரும் நக்கீரனும், எத்தனை இன்னல்கள் வந்தாலும், அவர்களின் ஊழல் ஆட்டத்தை வெளியில் கொண்டு வருவதில் இருந்து மாறியதில்லை.

Advertisment

2019 பிப்ரவரி 23-26 இதழ்:

எப்போதுமே நக்கீரனின் அட்டைப் படமே, அந்த இதழில் உள்ள செய்திகளின் தன்மையை காட்டிவிடும். கடந்த சில இதழ்களாக "கூட்டணி', "36 கோடி', "ஆட்சி பணால்' என தலைப்பு போட்டு கோடை இடிபோல் காட்டிவந்தது, அந்தவகையில் இந்த இதழிலும் "பேரம்...'ன்னு போட்டு இன்றைய அரசியல் தலைகளின் பேரத்தை கிழித்துவிட்டது. அன்புமணி யின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்தின் பேட்டியும் சரியான நேரத்தில் வந்திருப்பது அருமை. ராங்-கால் செய்தி எப்போதுமே அனலடிக்கும், அந்தவகையில் "இருக்கிற கோஷ்டிக்கு பத்து சீட்டு பத்துமா' என்கிற காங்கிரஸ் கோஷ்டி குறித்தும், "ஏழு தமிழர்களை விடுவிச்சா எத்தனை தொகுதி ஜெயிக்கலாம்' மோடியின் வஞ்சக வியூகமும் என எல்லாமே சிறப்புதான்.

"மாவலி பதில்கள்', கலைஞானத்தின் "கேரக்டர்' தொடர் எப்போதுமே சுவாரஸ்யம் மிகுந்த உண்மைகள். மொத்தத்தில் இந்த இதழ் அரசியல் கட்சிகளின் நாடித்துடிப்பை அனல் பறக்க வைத்துள்ளது.

______________

வாசகர் கடிதங்கள்!

நொறுங்கும் உள்ளம்!

விலங்குகள் நம் வன உறவினர்கள். "சின்ன தம்பி' யானை இயந்திர வாயின் அகோரப் பற்களிடம் அகப் படுவதை "மாவலி'யில் படக் காட்சியாக காணும்போதே உள்ளம் நொறுங்குகிறது.

Advertisment

-ஆ.சிவநேசன், மணப்பாறை.

சீட்டு ரேஸ்!

கன்னியாகுமரியில் சீட்டுக்கு ரூட்டு போட்டு, எம்.எல்.ஏ.க்களும் எம்.பி. பதவிக்காக, நான் முந்தி, நீ முந்தினு நல்லாவே ஓடுறாங்க.

-க.குருநாதன், சின்னசேலம்.