ஒரு புலனாய்வுப் பத்திரிகை என்பதைத் தாண்டி வாசகர்களிடமும் சரி, மக்கள் மனதிலும் சரி... சமூக அக்கறையுடன் செயல்படும் ஒரே பத்திரிகை "நக்கீரன்'. அன்று வீரப்பன் தொடங்கி இன்று ஜெ. மர்ம மரணம் வரை அதை நிரூபித்து காட்டிக்கொண்டுதான் உள்ளது. அன்று ஜெ. ஆட்சியை துணிச்சலுடன் எதிர்த்ததும் "நக்கீரன்' மட்டும்தான்; இன்று ஜெ. மரணத்தில் உள்ள மர்மத்தை சொன்னதும் நக்கீரன்தான்.
ஜெயலலிதாவை எதிர்த்தபோது நக்கீரன் பட்ட கஷ்டங்களையும் கைது படலங்களையும் சொல்ல ஆயிரம் பக்கங் கள் தேவைப்படும். ஆசிரியர் அவர்களை நேரில் பார்த்த தில்லை; ஆனால் அவ ரின் துணிச்சலும், நேர்மையும், உழைப் பையும் நக்கீரனை வாசிக்கும் போதே தெரிகிறது, மேலும் நக்கீரனுக்கு வலுச் சேர்க்கும் விதமாக நக்கீரன் இணையதளம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது. இதுவரை ஆசிரியர் அவர்களின் எழுத்தில் கண்டதை நக்கீரன் இணைய தளத்தில் அவரே ஒரு விஷயத்தை கூறுவதை நேரிலே காணமுடிகிறது.
2019, பிப்.13-15 இதழ்:
இருபத்தைந்து வருடமாக சங்கர்லாலின் "ராங்-கால்' படித்துக்கொண்டிருக்கிறேன். முக்கிய அரசியல் செய்திகளை தவறாமல் அலசுவதற்கு ராங்-கால் களம் அமைத்துத் தருகிறது. கால் நூற்றாண்டைக் கடந்தும் சங்கர்லால் நடையில் சலிப்பில்லை, அருமை. "திண்ணைக் கச்சேரி' யில் திருச்சி சிறைத்துறை வார்டன் செந் தமிழ்ச் செல்வி யின் காதல் தோல்வியும் தற்கொலையும் கண் ணீரை வரவழைத்தது.
கொடைக்கானல் போன்ற மலைகளில், வரம்புகளை மீறி எழுப் பப்படும் கட்டடங்களை தயவின்றி தரைமட்ட மாக்க வேண்டும். மலை வளம் காப்பதற்கு வேறு வழியில்லை.
______________
வாசகர் கடிதங்கள்!
"தமிழ்த்தாய்' பாடும் "தேசிய கீதம்'!
அரசு விழாவில் "தமிழ்த் தாய்' கட்டாய வெளிநடப்பு செய்யப்பட்டிருக்கிறாள். இனி தன் வாழ்த்து துதி யைத் தானே பாடுவதுடன் தேசியகீதத்தையும் இசைக்க வேண்டிய தர்மசங்கடம் ஏற்படலாம். தான்தோன் றித்தனமாக செயல்படும் மத்திய-மாநில அரசுகள் இப்படியான கற்பனையிலும் அவமானப்படும் நிலையில் இருக்கிறது.
-வி.சிவசங்கரன், சேலம்.
வரலாற்றுச் சுவை!
கவிப்பேரரசு வைரமுத்து வின் "தமிழாற்றுப் படை' யில் சங்ககாலப் புலவர் "அவ்வையார்' குறித்த வரலாற் றுக் கருத்துகள் நெல்லிக்கனி யாய் சுவை கூட்டுகின்றன.
-க.சுவாதி, திருக்கோவிலூர்.