parvai

க்கீரன் பத்திரிகை எனது தந்தையின் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானது. அரசியல், சமூகம், சார்ந்து படிக்க ஆவலைத் தூண்டியது. ஆட்டோ சங்கர் எழுதிய தொடர்களை படித்துள்ளேன். வீரப்பன் என்ற மனிதர் இப்படித்தான் இருப்பார் என்று தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளப்படுத்திய பெருமை நக்கீரனையே சாரும்; அதோடு மட்டுமல்லாமல் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களை வீரப்பனிடமிருந்து விடுவிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தது.

அதுமட்டுமா? பத்திரிகை சுதந்திரத்திற்காக சட்டப்படி போராடி புதிய விதிகளை உருவாக்கியதும் நக்கீரனே!

Advertisment

ஒரு அரசியல் புலனாய்வு இதழை எந்தத் திசையில், எத்தகைய நடையில் கொண்டுசென்றால், மக்களின் காவலாக மாறும், மக்களின் தோழமை பெறும் என்பதற்கு நக்கீரனே சாட்சி.

2019, ஜனவரி 30-பிப்.01 இதழ்:

"பெருமாள் சிலை லாபம் பார்க்கும் அரசு அதிகாரிகள்', பெருமாளிடமே வசூல் செய்து வயிறு வளர்க்கும் அதிகாரிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அந்த செய்தியை முடித்திருப்பது மிகச்சிறப்பாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் "ஞ்ர் க்ஷஹஸ்ரீந் ம்ர்க்ண்' என்பது வைரல் ஆகினாலும்கூட தமிழக ஊடகங்கள் மோடி விஷயத்தில் சற்று மௌனம் காண்பித்தன; ஆனால் நமது நக்கீரன் "ஞ்ர் க்ஷஹஸ்ரீந் ம்ர்க்ண்' என அட்டைப்படத்தில் டைட்டிலாக வைத்து உண்மை, துணிவு, உறுதி, என்பதை இறுகப் பற்றிக்கொண்டு ஒவ்வொரு இதழையும் பிரசவிக்கின்றன என்பதற்கு வேறு என்ன வேண்டும் சான்று? பெரும்பகுதி மக்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டத்தை எதிர்த்தபொழுது, அவர்களின் பக்கம் இருந்த நியாயத்தை நக்கீரன் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

Advertisment

_______________

வாசகர் கடிதங்கள்!

நன்றியிலும் உருக்கம்!

பன்முக கதை மன்னன் கலைஞானம் "கேரக்டர்' தொடரில் தனது திரைப்பட நிகழ்வுகளை வெளிப்படைத் தன்மையோடு எழுதுகிறார். கதாசிரியர் கலைமணியின் வாழ்க்கை உருக்கம் கண்ணீர்ப் பெருக்கம். தனக்கு உதவியவர்களையும் செவ்வனே குறிப்பிட்டு, "நன்றி மறப்பது நன்றன்று' என்பதற்கு நியாயம் கற்பித்துவிட்டார் கலைஞானம்.

-வெ.நீலமணி, சேந்தமங்கலம்.

சிவப்புச் சிலை!

வீழ்ச்சி எழுவதற்கே! திரிபுராவில் வீழ்த்தப்பட்ட தோழர் லெனின் சிலை, திருநெல்வேலியில் தீரத்தோடு எழுந்திருக்கிறது. மக்களின் நியாயமான முழக்கங்களுக்கு தடை போடலாம்; ஆனால் அவர்களின் சிவப்புச் சிந்தனைகளுக்கு சிறைக்கம்பிகள் போட முடியாது என்பதற்கு வீரியமான ஓர் உதாரணமே இக்கம்பீரச் சிலை.

-எஸ்.சுதா, அறந்தாங்கி.