நக்கீரன் இதழுக்கு பொதுமக்கள் மத்தியில் "உள்ளதை உள்ளபடி சொல்லும் பத்திரிகை' என்ற நற்பெயர் என்றுமே உள்ளது. தமிழகத்தில் நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் ஆதாரத்தோடும் தோலுரித்துக் காட்டுகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசியல் செய்திகள் மட்டுமல்லாமல்... ஆன்மிக செய்திகள், ஆன்மிகத்தில் நடக்கக்கூடிய தவறுகள் இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு நல்ல இதழாக நக்கீரன் இருக்கின்றது. மேலும் நல்ல பணிகளைச் செய்யக் கூடியவர்களை -அவர்க
நக்கீரன் இதழுக்கு பொதுமக்கள் மத்தியில் "உள்ளதை உள்ளபடி சொல்லும் பத்திரிகை' என்ற நற்பெயர் என்றுமே உள்ளது. தமிழகத்தில் நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் ஆதாரத்தோடும் தோலுரித்துக் காட்டுகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசியல் செய்திகள் மட்டுமல்லாமல்... ஆன்மிக செய்திகள், ஆன்மிகத்தில் நடக்கக்கூடிய தவறுகள் இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு நல்ல இதழாக நக்கீரன் இருக்கின்றது. மேலும் நல்ல பணிகளைச் செய்யக் கூடியவர்களை -அவர்கள் செய்யக்கூடிய நல்ல பணியினை ஆதாரத்தோடு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அது கல்வியாளராக இருந்தாலும் சரி, அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பொதுஜனமா இருந்தாலும் சரி தனது பத்திரிகையில் பாராட்டுவதற்கு நக்கீரன் தயங்கியதே இல்லை.
எவ்வளவு வழக்குகள் தன்மீது வந்தாலும் பரவாயில்லை; நாட்டு மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்று துணிச்சலுடன் எழுதக்கூடிய ஒரு பத்திரிகை நக்கீரன். முதன்முதலில் விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுத்த பத்திரிகை நக்கீரன். அதேபோல நடிகர்கள், நடிகைகள் அவர்கள் செய்யக்கூடிய நற்பணிகள், தவறுகள் அனைத்தையும் உடனுக்குடன் சுட்டிக் காட்டக்கூடிய இதழ்.
2019, ஜன.26-29 இதழ்:
"கொடநாட்டில் நடந்தது என்ன?' என்ற செய்தியைப் படிக்கும்பொழுது பொதுமக்களுக்கு வெளியே தெரியாத செய்திகள் எல்லாம் இந்த கட்டுரையில் இருந்ததைக் கண்டு உண்மையில் வியந்தோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய "மலைக்கோட்டை முழக்கம்...! டெல்லி செங்கோட்டை நடுக்கம்...!' என்ற தலைப்பில் வந்த கட்டுரையைப் படித்தபொழுது அனைவரும் வளரவேண்டும் என்ற நக்கீரனின் எண்ணம் தெளிவாகப் புரிந்தது.
அதேபோல பழ.கருப்பையா எழுதும் "அடுத்த கட்டம்' கட்டுரைகள் மிக அருமை.
இளைஞர்கள் மத்தியில் அதிக ஃபேன்ஸ் என்று சொல்லக்கூடிய தன்னுடைய தொண்டர்களை வைத்திருக்கக்கூடிய நடிகர் அஜித் பற்றிய வரலாற்றுக் கட்டுரை மிகச்சிறப்பு.
ஆக மொத்தத்தில் இந்த இதழ் அருமையான இதழ்.
வாசகர் கடிதங்கள்!
"நச்!'
"சி.சி.டி.வி. தரத்தால் தப்பிக்கும் குற்றவாளிகள்' செய்திக் கட்டுரையின் முடிவில் "இந்தக் கேமராக்களின் மூலம் குற்றங்களைக் கண்காணிப்பது இருக்கட்டும், இந்தக் கேமராக்களின் தரத்தை கண்காணிக்கப்போவது யார்?' என்று நக்கீரன் கேட்டிருக்கும்கேள்வி "நச்'சென்றிருந்தது.
-ஜி.தேவநாதன், கும்பகோணம்.
கண்களின் மலைப்பு!
"இது, விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிற தி.மு.க.வின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்' என திருமாவளவன் சொன்னது சரிதான். திருச்சியில் நடந்த "தேசம் காப்போம்' ஜி-கார்னர் கூட்டம் கண்களை மலைக்க வைத்துவிட்டது.
-ஆர்.சுதாகரன், குளித்தலை.