எனது பள்ளிக் காலங்களில் நான் கிரைம் நாவல்கள் படித்து வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் எனது அண்ணன் சிவாதான் நக்கீரனை கொண்டுவந்து படிக்க கொடுத்தார். அவர் ஒரு தீவிர நக்கீரன் வாசகர். அப்போது "ஆட்டோ சங்கர் வாக்குமூலம்' தொடர்கதை போல வந்து கொண்டிருந்தது.
க்ரைம் நாவல்கள் கற்பனை கலந்தவை. ஆனால் ஒரு ஆட்டோக்காரன் வாழ்க்கைக்கு பின்னால் எத்தனை உண்மை ரகசியங்கள் புதைந்து போயிருக்கின்றன என்பது பெரும் வியப்பு கொண்டதாய் இருந்தது. அதற்குப் பின்னால், நான் க்ர
எனது பள்ளிக் காலங்களில் நான் கிரைம் நாவல்கள் படித்து வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் எனது அண்ணன் சிவாதான் நக்கீரனை கொண்டுவந்து படிக்க கொடுத்தார். அவர் ஒரு தீவிர நக்கீரன் வாசகர். அப்போது "ஆட்டோ சங்கர் வாக்குமூலம்' தொடர்கதை போல வந்து கொண்டிருந்தது.
க்ரைம் நாவல்கள் கற்பனை கலந்தவை. ஆனால் ஒரு ஆட்டோக்காரன் வாழ்க்கைக்கு பின்னால் எத்தனை உண்மை ரகசியங்கள் புதைந்து போயிருக்கின்றன என்பது பெரும் வியப்பு கொண்டதாய் இருந்தது. அதற்குப் பின்னால், நான் க்ரைம் நாவல்களை ஊறுகாயாகவும், நக்கீரனை முழுச்சாப்பாடாகவும் மாற்றிக்கொண்டேன். அதற்கு நக்கீரன்கோபால் அண்ணனின் துணிச்சலே காரணம்.
இப்போதுகூட கவர்னர் போட்ட தேசத்துரோக வழக்கை சிரித்துக் கொண்டே கோபாலண்ணன் எதிர்கொண்ட விதம் எவராலும் செய்ய முடியாதது. அவர் துணிச்சலுக்கு ஒரு ராயல் சல்யூட்.
2019, ஜனவரி 05-08 இதழ்:
"திருவாரூர் ஆப்பிளை கடிக்க 500 கோடி இலக்கு' என்பதை சொல்லிய அட்டைப் படம் அசத்தல்.
சரி... "ரெண்டு இட்லிக்கே 1 கோடி 17 லட்சங்கள் கணக்கிடப்படும்போது ஒரு தொகுதி மக்களை கைப்பற்ற 500 கோடி' குறைவுதான்.
"மத்திய அரசுக்கு எதிராக கவர்னரின் குரல்' கட்டுரையால், எடப்பாடி அரசு ஆச்சரியப்படுகிறதோ, இல்லையோ... என்போன்ற வாசகர்கள் தலைசுற்றி விழுவார்கள்போலும்.
"காணாமல் போகும் கிணறு' -ஒரு லட்ச ரூபாய் பரிசு கவிதையை கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுத்திருப்பது, அந்த இளைஞனின் எதிர்கால வாழ்க்கையை பிரகாசப்படுத்தும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.
சபரிமலையில் பெண்களை பலத்த பாதுகாப்போடு அனுப்பிய கேரள முதல்வரை பி.ஜே..பி. யோடு காங்கிரசும் எதிர்க்கும் கேடு கெட்ட அரசியல் என்கிற சொல்லை நினைவூட்டுகிறது.
8,909 சத்துணவு மையங்களை மூடி, சத்துணவுக்கு மூடுவிழா நடத்தும் எடப்பாடி அரசை மூட... "கூடும் விழா' ஒன்றை குழந்தைகளின் பெற்றோர்கள் செய்து காண்பிப்பார்கள். அது நக்கீரன் மூலம் நிச்சயம் நடக்கும்.
______________
வாசகர் கடிதங்கள்!
தமிழக மானம்?
சீரடி சாய்பாபாவை தரிசிக்கச் சென்ற தமிழக அமைச்சரும் உடன் சென்ற இரண்டெழுத்து நடிகையும் யார் என்று ஓரளவு ஊகித்துவிட்டேன். ம்க்கும்... இவர்களால் வெளிமாநிலத்தில் தமிழக மானம் மல்லாந்து கெடக்கு.
-மு.சந்தியா, தேவகோட்டை.
அப்பப்பா...!
வாரிசுகளுக்கு சீட்டு கேட்டு முட்டிமோதும் அ.தி.மு.க.-தி.மு.க. மா.செ.க்களின் அரசியல் விளையாட்டை புட்டுப் புட்டு வைத்துவிட்டீர்கள். குறிப்பாக அ.தி.மு.க. குமரகுரு தன் மகன் நமச்சிவாயத்துக்கு எம்.பி. சீட் வாங்கிவிடுவதில் காட்டுகிற மும்முரம் அப்பப்பா... இதே மும்முரத்தை மக்கள் பணியிலும் கொஞ்சம் காட்டினால் நல்லது.
-கே.மணிமாறன், அரியலூர்.