Advertisment

பார்வை!-முத்து. பன்னீர்செல்வம்

parvai

parvai

கூலியாக அரைப்படி நெல் உயர்த்திக் கேட்டதற்கு 44 உயிர்களை உயிரோடு கொளுத்திய கீழவெண்மணியில் பிறந்தவன் நான். அன்று முதல் இன்று வரை புரட்சிகரமான பாடல்களைப் பாடிவருகிறேன்.

Advertisment

தெரிந்த நாளிலிருந்து நக்கீரன் இதழைப் படித்து வருகிறேன். "நக்கீரன்' எழுத்தும் நடையும் மிக எளிமையான, சாமானிய நபரையும் தங்கு தடையின்றி படிக்க வைத்துவிடும். குறிப்பாக நக்கீரனுக்கு என்று தனி கெத்தே, அட்டைப்படம்தான். அட்டைப் படத்திலேயே அந்த இதழ் தாங்கிவந்துள்ள செய்திகள் என்ன என்பதை யூகித்துவிட முடியும்.

நக்கீ

parvai

கூலியாக அரைப்படி நெல் உயர்த்திக் கேட்டதற்கு 44 உயிர்களை உயிரோடு கொளுத்திய கீழவெண்மணியில் பிறந்தவன் நான். அன்று முதல் இன்று வரை புரட்சிகரமான பாடல்களைப் பாடிவருகிறேன்.

Advertisment

தெரிந்த நாளிலிருந்து நக்கீரன் இதழைப் படித்து வருகிறேன். "நக்கீரன்' எழுத்தும் நடையும் மிக எளிமையான, சாமானிய நபரையும் தங்கு தடையின்றி படிக்க வைத்துவிடும். குறிப்பாக நக்கீரனுக்கு என்று தனி கெத்தே, அட்டைப்படம்தான். அட்டைப் படத்திலேயே அந்த இதழ் தாங்கிவந்துள்ள செய்திகள் என்ன என்பதை யூகித்துவிட முடியும்.

நக்கீரன் ஆசிரியர் மிகப்பெரிய போராளி. "நக்கீரன்' மீது திணிக்கப்படும் கொடூர தாக்குதல்களை சட்டத்தின் உதவியோடு முறியடித்து மற்ற பத்திரிகைகளுக்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.

தனக்கென ஒரு பாணியை எடுத்துக்கொண்டு, அதற்கென ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து, மக்களோடு மக்களாக நின்று களமாடி செய்திகளை வெளியிடுவது நக்கீரன் மட்டுமே என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது.

Advertisment

2018, டிச.29 - 2019, ஜன.01 இதழ்:

"பா.ஜ.க.விற்கு 12 தொகுதி! பணிந்த அ.தி.மு.க.' செய்தி அ.தி.மு.க. வட்டாரத்தையே முணுமுணுக்க வைத்திருக்கிறது. "இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்' குறித்தான செய்தி, "மோடி மற்றும் எடப்பாடி ஆட்சியில், படிக்காதவனுக்கும், விவசாயிக்கும், கூலித் தொழிலாளிகளுக்கும் மட்டுமே துரோகம் விதைக்கவில்லை, படித்தவர்களுக்கும்தான் விதைக்கிறது' என்பதை காட்டியுள்ளது.

"மோடி-சந்திரசேகரராவ் சந்திப்பு' குறித்தான செய்தி மிகஅருமை. அரசியல் புலனாய்வு என்பதற்கான எடுத்துக்காட்டு. "எச்.ஐ.வி. அபாயம்! எத்தனைபேர் உடம்பில் எய்ட்ஸ்' என்கிற தலைப்பிட்ட செய்தி, தமிழக ஆட்சியில், ஆட்சியின் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கலைஞானத்தின் தொடரும், வைரமுத்துவின் கட்டுரையும் அருமை.

"ஆளுக்கு ஒரு கோஷ்டி அல்லாடும் தி.மு.க.' செய்தி தி.மு.க.வில் உள்ள குளறுபடிகளையும் சொல்லத் தயங்கியதில்லை என்பதைக் காட்டுகிறது. மொத்தத்தில் நக்கீரன் செய்திகள் சூப்பர்.

வாசகர் கடிதங்கள்!

உடைபடும் சீல்!

திருவண்ணாமலையில் வீடுகள், மண்டபங்களாகவும் சத்திரங்களாகவும் நிறம் மாறுகிற வினோதக் கூத்து, மோசடிகளில் புதுவிதம். குடிநீர் வசதி, மின்சார இணைப்பு என அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்திருப்பது நகராட்சி நிர்வாகத்துக்கே வெட்கக்கேடு. இப்போது ஒரு திருமண மண்டபத்துக்கு வைக்கப்பட்ட சீல், இன்னும் சில மாதங்களில் அரசு அனுமதியோடு உடைக்கப்படும் என்கிற நம்பிக்கையில் எள்ளளவும் குறைய வாய்ப்பில்லை.

-ஆ.மணிமாறன், குளித்தலை.

தி.மு.க.வில் கமல்!

தி.மு.க.வுக்குள்ள காங்கிரஸ். காங்கிரசுக்குள்ள கமல். அப்ப தி.மு.க.வுக்குள்ள கமல் வந்தாச்சு. ம.நீ.ம.வின் தேர்தல் பொறுப்பாளர்கள் விறுவிறு நியமனம், தலைவர்களோடு சந்திப்பு... ஓ... இதுதான் அந்த ஒத்தக் கருத்து கூட்டணியா?

-எம்.சிவா, மேட்டூர்.

nkn080119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe