parvai

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் எனக்கு நக்கீரன் அறிமுகமானது. அப்போது நக்கீரனில் வந்த புலனாய்வுச் செய்திகள் என்னை ஈர்த்தன. நக்கீரன் ஆசிரியர் எழுதிய ’ "சேலஞ்ச்' ‘ தொடரில் எனக்கு ஒரு மயக்கம் இருந்தது. ஜெயலலிதாவின் கொடூர ஆட்சியில் "நக்கீரன்' செய்தியாளர்கள் அனுபவித்த துன்பங்கள்போல வேறு எந்த பத்திரிகையும் எதிர்கொண்டதில்லை. மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்வதில் ஒரு பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை அந்தத் தொடரில் நான் கண்டேன். ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களின் அராஜகங்களுக்கு முட்டுக்கட்டை கொடுக்காமல், அவர்களின் முகமூடிகளை கிழித்தெறிகிறது நக்கீரன்.

2018, டிசம்பர் 15-18 இதழ்:

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணங்களைச் சொல்லியது இந்த இதழின் அட்டைப்பட செய்தி. மோடிக்கு ஏற்பட்ட தோல்வியால் முதல்வர் எடப்பாடியும் அவரது ஆட்சியாளர்களும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அலசியுள்ளது "ஹேப்பி அண்ணாச்சி' செய்தி. கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கம் கண்டுகொள்ளாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மக்களை மறக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் சமயத்தில் அந்த மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டுமென்பதை உணர்த்தியது சொந்த மண்ணில் ஓ.பி.எஸ். திண்டாடிய செய்தி. அதே ஓ.பி.எஸ்., கட்சித் தலைமையில் தன் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள எடப்பாடியை மிஞ்சி அதிகாரத்தை கையிலெடுக்கும் மிடுக்கை எடுத்துக்காட்டியிருக்கிறது ராங்-காலில் பதிவாகியிருக்கும் "நீயா? நானா?' செய்தி.

Advertisment

விருப்பு வெறுப்பின்றி மக்களுக்கு செய்திகளை கொண்டுசெல்லும் நக்கீரனின் ஜனநாயக கடமை தொடர்ந்து வெல்லட்டும்!

______________

வாசகர் கடிதங்கள்!

Advertisment

நாதியற்றவர்களின் பாராட்டு!

அமெரிக்காகாரன் மக்காச்சோள விதை கொடுத்து எங்களோட வயிற்றுக்கு சூனியம் வைத்துவிட்டான். ஒவ்வொரு சோளமணியும் பட்டைப் புழுவால நோய்வாய்ப்பட்டு கலகலத்துப் போச்சு. "இதைக் கேட்க நாதியில்லையா'னு மானாவாரி நிலத்துல நின்னு கதறினோம். சோள விவசாயிகளின் நட்டப்பட்ட உழைப்பை அரசின் பார்வை படும்படி செய்தி வெளியிட்ட நக்கீரனை வேதனையிலும் மனதாரப் பாராட்டுகிறோம்.

-எம்.ஈஸ்வரி, பெரம்பலூர்.

மொத்தமும் போச்சே!

தி.மு.க. ஆட்சியில மேம்பாலத்துக்காக தே.மு.தி.க. விஜயகாந்த் கல்யாண மண்டபத்துக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போச்சுன்னு பேசிக்கிட்டோம். ஆனா இப்ப மெட்ரோ ரயிலுக்காக மண்டபம் மொத்தமும் அடிபடப் போகுதே.

-வி.அருணா, ஆத்தூர்.