Advertisment

பார்வை!-ரமா ராமநாதன்

parvai

parvai

ல்லூரிக் காலத்திலேயே நூலகம் போய் முதலில் தேடுவது நக்கீரனைத்தான். எனது நண்பரும் தற்போதைய வாசகர் வட்டத் தலைவருமான பாபுஜான் நூலகத்திற்கு வாரா வாரம் இலவசமாக நக்கீரன் வாங்கி வழங்கி னார். இலக்கியத்தளத்தை நாடி வாசிப்புத் தளத்தில் இயங்க ஆரம்பித்த இளமைக் காலத்தில் புலனாய்வு இதழ்களை வாசிக்கும் ஆர்வத்தை எனக்குள் வடிவமைத்த பெருமை நக்கீரனையே சாரும். தமிழகத்தில் எவ்வள வோ இன்னல்கள், நெருக்கடிகள், அதிகாரப் போரின் அச்சுறுத்தல்கள் எல்லாவற்ற

parvai

ல்லூரிக் காலத்திலேயே நூலகம் போய் முதலில் தேடுவது நக்கீரனைத்தான். எனது நண்பரும் தற்போதைய வாசகர் வட்டத் தலைவருமான பாபுஜான் நூலகத்திற்கு வாரா வாரம் இலவசமாக நக்கீரன் வாங்கி வழங்கி னார். இலக்கியத்தளத்தை நாடி வாசிப்புத் தளத்தில் இயங்க ஆரம்பித்த இளமைக் காலத்தில் புலனாய்வு இதழ்களை வாசிக்கும் ஆர்வத்தை எனக்குள் வடிவமைத்த பெருமை நக்கீரனையே சாரும். தமிழகத்தில் எவ்வள வோ இன்னல்கள், நெருக்கடிகள், அதிகாரப் போரின் அச்சுறுத்தல்கள் எல்லாவற்றையும் கடந்து, தனது நேர்மையான இதழியல் பணியை நக்கீரன் செய்து வருவதை நாடறியும்.

Advertisment

வெற்றிப் பயணத்தால்தான் இன்றும் முந்திச் செல்கிறது. சாதாரண மக்களின் முன் னேற்றத்திற்கு தடையாக இருக்கும் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை தோலுரித்து, உழைப்பாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதமாக நக்கீரனில் கட்டுரைகள் அமைவது மெச்சுவதாக உள்ளது.

Advertisment

2018, மே 14-16 இதழ்:

இந்த ஆண்டு தமிழக அரசின் கல்வித் துறை 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை புதிய தாக மாற்றி அமைக்கப் பட்டிருப்பது பற்றிய "பாஸா? பெயிலா? புதிய பாடப் புத்தக சர்ச்சை' என் னும் கட்டுரை மிகச் சிறப் பாக அலசி ஆராய்கிறது.

மிகமுக்கியமாக, இந்த இதழில் தமி ழக மாணவர் களின் சமீபத் திய ஐ.ஏ.எஸ். தேர்ச்சிபற்றி வந்துள்ள கட்டுரை நிறையவே நமது மாண வர்களின் நிலை பற்றி விவாதித் துள்ளது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் அதிகப் படியான வெற்றி பெற்று சாதனை படைத்த வரலாறு கொஞ்சம் கொஞ்ச மாக மாறி வருகிறது. இதில் ஆளும் வர்க்கத்தின் சதியும் உள்ளதோ என்பது பற்றிய கட்டுரை சிறப்பு வாய்ந்தது.

வழக்கமாக வி.ஐ.பி.களைப்பற்றி வரும் ராங்-கால் பகுதி எப்பவும் நக்கீரனுக்கு ஒரு மகுடம்தான்.

----------------------------------------

வாசகர் கடிதங்கள்!

எங்க ஏரியா!

ஒவ்வொரு மாநிலத்திலும் ஆவேச -சாந்த -புன்னகை உரையாற்றுகிறார் மோடி... ஏதோ "மேக் இன் இண்டியா' விளம்பர தூதுவர்போல. இதுல தமிழ் நாட்டிற்குள் வரலாமா? வேண்டாமா? என அவர் திரைவிலக்கிப் பார்ப்பதன் மர்மம் என்ன? எங்கே தமிழர்கள் கருப் புக்கொடி காட்டிவிடுவார்களோ என்கிற பயமோ? இப்படி வாசகர்களை படம் பார்த்து "கதைசொல்லி'களாக்குகிறது "வலைவீச்சு' புகைப்பட ஏரியா.

-ஒய்.அபுபக்கர், நாகர்கோவில்.

"காலா' விழா!

டூரிங் டாக்கீஸ்... "காலா' பட பாடல் வெளியீட்டு விழா நடந்திருக்கு செம தூளா. குறிப்பாக மாமனார் ரஜினி பற்றிய மருமகன் தனுஷின் பேச்சு -வில் வீச்சு!

-எம்.நாராயணன், சேலம்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe