அதிகார மட்டத்தில் எந்த உயரத்தில் இருந்தாலும் சலனமே இல்லாமல் அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கின்ற பணியை "நக்கீரன்' சிறப்பாகவே செய்துவருகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும், அவர் மறைந்தபோதும், அவர் வாழ்வின் மறைக்கப்பட்ட பகுதியை கடைமட்ட தொண்டனும் அறிந்துகொள்கிற வகையில் எடுத்து வைத்திடும் பணியை "நக்கீரன்' செய்துள்ளது. தொலைநோக்குப் பார்வையோடு ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம் குறித்து
அதிகார மட்டத்தில் எந்த உயரத்தில் இருந்தாலும் சலனமே இல்லாமல் அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கின்ற பணியை "நக்கீரன்' சிறப்பாகவே செய்துவருகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும், அவர் மறைந்தபோதும், அவர் வாழ்வின் மறைக்கப்பட்ட பகுதியை கடைமட்ட தொண்டனும் அறிந்துகொள்கிற வகையில் எடுத்து வைத்திடும் பணியை "நக்கீரன்' செய்துள்ளது. தொலைநோக்குப் பார்வையோடு ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம் குறித்து விரிவாக முன்பே கணித்துச் சொன்ன நக்கீரனைக் கண்டு கோபம் கொண்டவர்கள் தற்போது வாயடைத்து நிற்கிறார்கள்.
2018, டிச.8-11 இதழ்:
சென்னையில் வேலை கிடைத்து விடுதியில் தங்கும் பெண்கள் எத்தகைய முன்னெச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும் என்பது, காதலித்து ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்கிற கயவர்கள் குறித்து வெளிவந்த கட்டுரையும் உண்மையில் பெண்களுக்கு எச்சரிக்கை மணியாகவே இருந்தது.
மோடி அரசின் மத வெறி தாக்குதல்கள் பற்றியும் அதன் ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கின்ற மோடியின் தந்திரத்தைப் பற்றியும் தோலுரித்துக் காண்பித்திருந்தது ஈர்த்தது. யாருக்குமே புரியாத கமல்ஹாசனின் சினிமா முழுக்கு பற்றியும் தி.மு.க. கூட்டணியில் நிலவும் சர்ச்சை குறித்தும் கழுகுப் பார்வையில் வெளியிட்டிருந்த நக்கீரனுக்குச் சொல்லலாம் ஒரு சபாஷ். கவர்னராக இருந்தாலும் கடைமட்டத் தொண்டனாக இருந்தாலும் நடுநிலைமையோடு உண்மையை எப்போதும் முரசொலித்துக்கொண்டிருக்கிற பணியில் தனித்தன்மை வாய்ந்த ஊடகம் "நக்கீரன்' என்றால் மிகையாகாது. இதழியல் துறையில் சாதிக்க நினைக்கின்ற ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய ஏடாகத் திகழ்கிறது "நக்கீரன்'.
_____________
வாசகர் கடிதங்கள்!
யதார்த்தம்!
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் மதவெறி சாயத்தை மக்களின் பார்வையில் நின்று வெளுத்திருக்கிறார் சுவாமி அக்னிவேஷ். இதில், பட்டேலுக்கு சிலை நிறுவியதற்குப் பதிலாக பாமரர்களின் வறுமைக்கு தீமுட்டி பெரும் பசியைப் போக்க உலை வைத்திருக்கலாம் என்கிற தொனியில் அமைந்த அவரது நேர்காணல் பேச்சு யதார்த்தமானது.
-ஆ.சுடலைமாடன், கரூர்.
ஹை-வோல்டேஜ்!
மோடி பிரதமராக வருவார் என்று பாரதி அன்றே சொன்னான்னு சொல்ற அமைச்சர் பொன்னாரின் சித்தரிப்பு என்னவொரு தீர்க்கதரிசனம். "வலைவீச்சு' எப்போதும்போல, அரசியல் தலைவர்களை ஹை-வோல்டேஜ் கமெண்ட்டுகளால் ஷாக்கடிக்க வைக்கிறது.
-பி.கோபிநாத், சென்னை-33.