parvai

தெரியாத தகவல்களைத் திரட்டி சமுதாயத்திற்கு அளிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. சற்றேறக்குறைய 20 ஆண்டுகளாக நக்கீரன் இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.

ஆட்டோ சங்கரில் தொடங்கி ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பது வரை சமரசமற்ற போராட்ட நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறது என்றே கூறவேண்டும். தமிழ்ச் சமூகத்தின் இனமானத்திற்காக உழைக் கும் ஏடு என்பது நக்கீரனின் தனிச்சிறப்பு.

காஞ்சிபுரம் சங்கரராமனின் கொலைவழக்கை புலனாய்வு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைதாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, நக்கீரனின் சமரசமற்ற இதழியல் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

Advertisment

குடியரசுத் தலைவரே காலில் விழும் நிலையிலிருந்த ஒரு மடாதிபதி யை தோலுரித்துக் காட்டிய துணிச்சல் ஒன்றே போதும் இதழியல் வரலாற்றில் என்றும் நிலைக்கும் செப்பேடு ஆகும்.

பல்வேறு தடைகளை நீதிமன்றத் தின் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி உடைத்தெறிந்து இந்திய ஊடகத்திற்கே வழிகாட்டியாக நக்கீரன் திகழ்கிறது என்பது தனித்தன்மையாகும்.

2018 டிசம்பர் 1-4 இதழ்:

Advertisment

திருமாவின் தனிப்பேட்டி இதழுக்கு தனிச் சிறப்பு. 5.12.2016இல் அப் பல்லோ வெளி யிட்ட பத்திரிகை செய்தியை பாது காத்து பிரசுரித்து, மருத்துவ அறி ஞர்களின் கருத்துகளைப் பெற்று வெளி யிட்டிருப்பது அருமை.

""முருகனைக் கொல்ல சதி'' செய்திக்குள் ஒரு பாக்ஸ் பேரா சிரியை நிர்மலா தேவியின் பசியை காக்கிகள் கண்டு கொள்ளவில்லை யாமே? காலக் கிரகம்தான். கன்னித்தீவாக நீள்கிறதே இந்தக் கதை.

ராங்-காலில் வந்த புதிய தகவல்கள், அம்மாவா சின்னம்மாவா உள்ளிட்ட பக்கங்கள் இந்த இதழுக்கு சிறப்பு சேர்ப்பவை.

___________________

வாசகர் கடிதங்கள்!

ஒழுங்கின்மையின் கணக்கு!

விருத்தாசல வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் ஒழுங்கீனம், அரசின் நடவடிக்கைகளுக்கு பயப்படப் போவதில்லை. அதேபோல தமிழகத்தின் பிற விற்பனை சந்தைகளைப் பற்றிய மனக்கணக்கு எழாமல் இல்லை.

-ஐ.ஜான்டேவிட், திருச்சி.

களங்கத்தின் உச்சம்!

திருவண்ணாமலை "மெர்ஸி' காப்பக சிறுமிகள் குறித்த "களியாட்ட' சங்கதி, வேதனையின் உச்சம். பெண் பிள்ளைகளை தாய்மை உணர்வுடன் பார்க்க வேண்டிய விடுதி உரிமையாளரின் மனைவி, தன் கணவரின் இச்சைப் புத்திக்கு ரெட் "சிக்னல்' போடாமல் பச்சைக் கொடி காட்டியிருப்பது பெண்மைக்கே களங்கம்.

-எம்.மணி, சேலம்