பார்வை - மக்களின் பாய்ண்ட் ஆஃப் வியூ! பண்ணப்பட்டு க. கீர்த்திவாசன்

parvai

parvai

செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சி பார்க்கலாம்; செய்தித்தாள் படிக்கலாம். ஆனால், புலனாய்வுச் செய்திகளை படிக்க நக்கீரனைப் படிக்கவேண்டும். செய்திகளுக்கும் புலனாய்வுச் செய்திகளுக்கும் நடுவில் ஒரு சின்ன கோடு உள்ளது. பெரும்பாலும்… காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பாயிண்ட் ஆஃப் வியூவிலிருந்து வருபவை செய்திகள். பாதிக்கப்பட்ட மக்களின் பாயிண்ட் ஆஃப் வியூவிலிருந்து வெளிவருபவை புலனாய்வுச் செய்திகள்.

இன்று

இன்று நான், தொலைக்காட்சியில் பார்த்த; செய்தித்தாள்களில் படித்த செய்தியை நக்கீரனில் படிக்கும்போதுதான் இவ்வளவு உண்மைப் பின்னணி இருக்கிறதா என்று அதிர்ச்சியூட்டும். ஆக, அரசியல், சமூகம், பொருளாதாரம் என எந்தத் துறையிலிருந்து வெளியாகும் செய்திகளுக்கு பின்னால் இருக்கும் செய்திகளையும் நக்கீரன் புலனாய்வு பத்திரிகையின் மூலமே அறிந்துகொள்ள முடிந்தது; முடிகிறது. மக்களின் உரிமைக்காக மட்டுமல்ல, பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் அதன் உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருப்பதுதான் நக்கீரன்.

2018 நவம்பர் 28-30 இதழ் :

உலகிலேயே ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையாக தமிழக காவல்துறை உள்ளது என்று பாராட்டிய எடப்பாடிக்கு எதிராக, ‘ஸ்காட்லாந்து போலீஸு என்னைக்குயா ஆட்டோவுக்கு, போலீஸ் ஸ்டேஷனுக்கு, குடிசைக்கு எல்லாம் தீ வச்சுச்சு?’ என்று கிண்டலடிக்கும் மீம்ஸில் தமிழக காவல்துறையின் மறுமுகத்தை வெளிப்படுத்துகிறது.

கஜா புயலின்போது ஆளுநர் விசிட் அடித்தது பா.ஜ.கவின் சூழ்ச்சி என்பதையும், எடப்பாடி டெல்லி சென்றது அரசியல் காய் நகர்த்தும் பின்னணி என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

வாசகர் கடிதங்கள்!

"குத்'தின் பிரதிபலிப்பு!

பாராட்டுகள். குத்துச் சண்டையில 6-வது தங்கம். வீராங்கனை மேரிகோம் விட்ட ஒவ்வொரு குத்திலும் இந்தியாவின் பலம், எதிரிகளின் கன்னங்களில் வீக்கமாகப் பிரதிபலித்திருக்கும்தானே.

-ஆர்.சிவலிங்கம்,அவிநாசி.

"காவல்' லட்சியம்!

காவல் பணியை அடைய முடியாத ரமேஷ் போன்றவர்கள், மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து தங்கள் லட்சியத்தை அவர்கள் வடிவில் சாதித்துக் கொள்கிறார்கள். இத்தகைய உயர்ந்த எண்ணம் எத்தனை பேருக்கு வாய்க்கும்.

-கே.சுபா,ஒரத்தநாடு.

சுமைதாங்கி!

பன்முக கதை வித்தகர் கலைஞானம் அவர்கள் ஒவ்வொரு இதழிலும் அந்தக் கால நட்சத்திரங்களை "கேரக்டர்' தொடர் வழியே வெளிச்சமூட்டுகிறார். அருமை. நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை சுவையில் கலந்திருந்த கண்ணீரில் வெளிப்பட்ட உருக்கம், மனதில் சுமைதாங்கி கல்லாக நிற்கிறது.

-க.மணிமேகலை, செஞ்சி.

nkn051218
இதையும் படியுங்கள்
Subscribe