parvai

ட்டு ஆண்டுகளாக குடும்பத்தோடு அமெரிக்காவில், அயோவா மாநிலத்தில் வசிக்கிறேன். அமெரிக்காவின் புகழ்மிக்க பெரிய பத்திரிகைகளில் பிரதமர் மோடியைப் பற்றிய, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வருவதுண்டு.

ஆனால், தமிழகத்தைப் பற்றி, தமிழகத் தலைவர்கள் பற்றிய செய்திகள் குறிஞ்சிப்பூ போல அபூர்வமாய்தான் வரும். சமீபத்தில், வாஷிங்டன் போஸ்ட்டிலும், நியூயார்க் டைம்ஸிலும் "நக்கீரன்' ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது பற்றிய செய்தி வந்திருந்தது.

என் அமெரிக்க நண்பர்களிடம் இச்செய்தியை படித்துக் காட்டினேன். ""ஓ... அவ்வளவு பெரிய ஆளா அவர். அமெரிக்க பத்திரிகைகளில் வரக்கூடிய அளவுக்கு என்ன செய்தார் அவர்?'' என கேட்டார்கள்.

Advertisment

சொன்னேன். "ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டில் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்று, சந்தனத்திற்காக மரங்களைக் கொன்று, போலீஸாரால் எட்ட முடியாத வனராஜனாகக் கோலோச்சிய சந்தன வீரப்பனைக் கண்டு, அவனது வாழ் வையும் புகைப்படங்களையும் வெளியிட்டு, இந்தியாவின் மிகச்சிறந்த புலனாய்வு இதழின் ஆசான் என பெயர்பெற்றவர்' என விளக்கமாகச் சொன்னேன்.

வாயைப் பிளந்தார்கள் என் அமெரிக்க நண்பர்கள்.

நக்கீரனைத் தொடர்ந்து இணையத்தில் பெருமையுடனும் உரிமையுடனும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

Advertisment

2018, நவ.17-20 இதழ்:

அட்டையில் "சிலையைத் திறந்தால் பதவிக்கு ஆபத்து' -அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் திறக்கப் பட்ட ஷாக் செய்தி. உள்ளே தி.மு.க. தலைமைக் கழகத்தில் திறக்கப்படவிருக்கிற கலைஞர் சிலை பற்றிய செய்தி. ராங்-கால் வழக்கம்போல யூஸ்புல் கால்.

"நெல்' ஜெயராமனுக்காக ஒதுக்கிய இரண்டு பக்கங்கள், இயற்கை வேளாண் மைக்கு நக்கீரன் காட்டும் மரியாதை.

"மந்திரி மாஜி மோதல்! -புதுச்சேரி கலாட்டா!' நக்கீரன், பாண்டிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது.

"வலை வீச்சு' -சிந்தனையைத் தூண்டும் நக்கல் அலைவீச்சு... சூப்பரோ சூப்பர்!

________________

வாசகர் கடிதங்கள்!

முடுக்கி விட!

"கஜம்' என்றால் யானை. தமிழக அரசு முன்னெடுத்த "புயல்' முன்னெச்சரிக்கை ஏற்பாடும் கஜாவின் பலத்துக்குப் பின்வாங் காமல் ஈடு கொடுத்திருக்கிறது. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை முதல்வர் முடுக்கிவிட வேண்டும்.

-க.செந்தில்குமார், திருமயம்.

கிடுக்கிப் பிடி!

நிர்மலாதேவிக்கு மட்டுமல்ல, அவரது வழக்கறிஞருக்கும் பிரஷர் வந்துவிடும்போல -ஏன்னா நக்கீரன் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள் அப்படி.

-சே.ஜீவசோதி, உடுமலைப்பேட்டை.