parvai

யாராவது நடுநிலையா செய்தி கொடுக்கமாட்டாங்களா, உண்மையை யாரும் சொல்லமாட்டாங்களா அப்படினு மனசு ஏங்கிட்டு இருந்த எனது பால்ய காலத்துலதான் அறிமுகம் ஆனது "நக்கீரன்'. "நக்கீரன்'கிற பெயர்லயே என்னமோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. ஒவ்வொரு இதழ் வெளிவரும்போதும் இப்போ யாரைப் பற்றி செய்திவரும், என்ன சொல்லப்போறாங்க, இன்டெர்வெலுக்கு அப்புறம் என்ன ஆகும்னு காத்துக்கொண்டிருப்பது போல, ஒரு ஆர்வம் இருக்கும் -"நக்கீரன்' செய்தியாளர்களின் புலனாய்வு பற்றித் தெரிஞ்சுக்க.

ஆசிரியர் நக்கீரன்கோபாலை கைது செஞ்சப்போ என்னமோ நம்ம வீட்டுல ஒருத்தரை கைது செஞ்சு கூட்டிட்டு போனமாதிரி ஒரு ஃபீலிங் ஆச்சு. ஈவினிங் வந்ததுக்குப் பிறகு ஹீரோ என்ட்ரி ஸ்டார்ட் ஆயிடுச்சுனு இருந்தேன்.

Advertisment

ஹீரோ என்ட்ரி ஆனதுக்கு அப்புறம் மஞ்சள் பத்திரிகை என்று விமர்சனம் செய்தவர்களை மஞ்சள் அட்டை படத்தை போட்டு அவுங்களைப் பற்றி புலனாய்வுச் செய்தியைத் தந்து "நக்கீரன்டா'னு காமிச்ச தருணம் மெய்சிலிர்த்து போய்விட்டது.

2018, நவ.10-13 இதழ்:

அழகு, இனிமை மற்றும் கனிவான பேச்சை மட்டும் நம்பி ஒருத்தர் நல்லவர் என்று சொல்ல முடியாது. பசுமரத்து ஆணிபோல் மனதில் பதிய வைத்துள்ளது "என்ன விலை அழகே' என்னும் செய்தி.

Advertisment

"சாமியாரிடம் ஆலோசனை கேட்ட ரஜினி! தி.மு.க.வுடன் கைகோர்க்கும் கமல்?', "சர்கார் யள் சர்க்கார்! அ.தி.மு.க. ஆவேசம்! விஜய் ரியாக்ஷன்'! ஆகிய செய்திகள் நிகழ்கால அரசியலின் ரகசியங்களை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளன.

"கேரக்டர்' கலைஞானம் சாரின் கனவுக் கன்னியின் காதலன் தொடர், எங்களைப் போன்ற இன்றைய தலைமுறையினர்களுக்கான பொக்கிஷம். மேலும் ராஜலட்சுமி கொலை வழக்குக்கு நீதி கிடைக்காதா, மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவராதா என்று... சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது என்ற வேதனையுடன் இருந்த சமயத்தில்... அடிபட்ட காயத்திற்கு மருந்துபோல் வந்தது நக்கீரனில், "ராஜலட்சுமியின் கொலை' பற்றிய செய்தி.

_____________

வாசகர் கடிதங்கள்!

தெளிவான திட்டம்!

இடதுசாரித் தலைவர்களை ஓரணியில் கொண்டுவர அறிவாலயம் அழைத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வரும் தேர்தல்களில் கூட்டணி வியூகங்களை மிகத்தெளிவாகத் திட்டமிட வேண்டும்.

-எஸ்.குபேந்திரன், அறந்தாங்கி.

புறக்கணிப்பு!

பதவித் தகுதிக்கு காத்திருப்பவர்களைப் புறக்கணித்துவிட்ட சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளில் கமிஷன் புத்தி தெறிக்கிறது. சில வேளைகளில், நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

-கே.சிவநேசன், திருக்கோவிலூர்.