parvai

Advertisment

நான்காவது தூணாக நிமிர்ந்து நிற்கும் பத்திரிகைகளின் ஆணிவேர் எதுவென்றால் அது "நக்கீரன்'தான் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அதிகார கர்வத்தில் ஆட்டம் போடுகிற அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் ஆட்டம்காண வைக்கும் நக்கீரனின் எழுத்து, பேனா மையில் இருந்து அல்ல... "நக்கீரன்' ஆசிரியரின் நெஞ்சுரத்தில் இருந்து வருகிறது.

சமீபத்தில் மூடிக்கிடந்த நிர்மலாதேவி விவகாரத்தை மூடி திறந்து காட்டிய பெருமை நக்கீரனின் புலனாய்வுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். விஞ்ஞான யுகத்தில் இளையதலைமுறையினர் இணையதளத்தையும் வாட்ஸ்-அப் செய்திகளையும் நம்பியிருக்காமல் செய்தியில் வீரத்தையும் விவேகத்தையும் துடிப்பையும் உண்மை மாறாமல் காட்டுற நக்கீரனின் ரசிகராக ஒவ்வொருத்தரும் மாற வேண்டும்.

2018, நவ.7-9 இதழ்:

"தேர்தல் வராது வந்தால் தேறாது! அ.தி.மு.க களேபரம்' அருமை. பா.ஜ.க. திரைமறைவு ரகசிய டீலை போட்டுடைத்து விட்டீர்கள்.

Advertisment

"பல்கலைக்கழக பார்ட்டி' நிர்மலா தேவி விவகாரத்தில் மறைக்கப்படும் உண் மைகளை "நக்கீரன்' மறைக்காமல் சொல்லியிருக்கிறது. மீண்டும் நக்கீரனோடு இணைந்திருக்கும் கலைஞானத்தின் "கேரக்டர்' தொடர் விறு...விறு.

________________

வாசகர் கடிதங்கள்!

கனவு மெய்ப்பட!

"குலசேகரன் பட்டணத்தில் ஏவு தளம் அமைய வேண்டும்' என்கிற கனிமொழி எம்.பி.யின் நெடுநாள் கனவு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றுதான். சமூகத்துக்கான அறிவியல் வளர்ச்சியைப் புறக்கணிப்பது நமது நாட்டின் வளர்ச்சியை நாமே புறங்கையால் தள்ளிவிடுவது போன்றதாகும். எதிர்ப்பாளர்கள் இதை உணர வேண்டும்.

-க.மணிமாறன், மேட்டுப்பாளையம்.

சபலப்படுத்தும் பலவீனம்!

"பணம்' என்கிற பலவீனத்துக்கு சபலப் பட்டு மீண்டும் ஒரு ஸ்டெர்லைட் சூட்டுக் கோல் கலவரத்துக்கு "திறப்பு விழா' கண்டுவிட அம்மக்கள் மூலகாரணியாகிவிடக்கூடாது.

-ஆர்.சி.பன்னீர், பழனி.

அலாதி ஆர்வம்!

Advertisment

இன்று, செல்போனை கையில் வைத்துக்கொண்டு அரசியல் கமெண்டு களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. எனினும் மூன்றுநாள் காத்திருந்து நக்கீரனின் "வலை வீச்சு' நையாண்டிகளை வாசிப்பதில் ஓர் அலாதி ஆர்வம்தான்.

-எம்.குணசேகரன், காஞ்சிபுரம்.