Advertisment

பார்வை!-ஆர்.சுப்புராயலு

parvai

parvai

Advertisment

லையில் தோன்றி, காடு மலைகளைக் கடந்து, தடைகளை நொறுக்கி விரிந்து, தாகம் தணித்து, விவசாயத்திற்கு பாய்ந்து கடலில் கலக்கும் ஜீவநதியெனத் திகழ்கிறது நக்கீரன்.

இந்த முப்பதாண்டுப் பயணத்தில் எத்தனையெத்தனை முட்டுக்கட்டைகள், மிரட்டல்கள், பாதிப்புகள், இழப்புகள் -இவைகளையெல்லாம் உரமாக மாற்றிக்கொண்டு நீதியின் துணையோடு வீரநடை போடும் நக்கீரனுக்கும், நக்கீரன் ஆசிரி

parvai

Advertisment

லையில் தோன்றி, காடு மலைகளைக் கடந்து, தடைகளை நொறுக்கி விரிந்து, தாகம் தணித்து, விவசாயத்திற்கு பாய்ந்து கடலில் கலக்கும் ஜீவநதியெனத் திகழ்கிறது நக்கீரன்.

இந்த முப்பதாண்டுப் பயணத்தில் எத்தனையெத்தனை முட்டுக்கட்டைகள், மிரட்டல்கள், பாதிப்புகள், இழப்புகள் -இவைகளையெல்லாம் உரமாக மாற்றிக்கொண்டு நீதியின் துணையோடு வீரநடை போடும் நக்கீரனுக்கும், நக்கீரன் ஆசிரியருக்கும், நக்கீரன் குடும்பத்திற்கும் ஒரு ராயல் சல்யூட்.

நக்கீரன் வாயிலாக அரசியலைப் புரிந்துகொள்ளும் லட்சோப லட்சம் வாசகர்களில் நானும் ஒருவன்.

2018, மே 05-07 இதழ்:

Advertisment

காங்கிரஸ் கட்சியின் வியூகம், பா.ஜ.க.வின் உள்ளடி, மூன்றாவது அணி பற்றிய தளபதியின் நோக்கம் என ராங்-கால் பகுதி வாசகனுக்கு விறுவிறு ரைட்கால்.

"பாவிகளே! இவன் ஆவிக்குப் பதில் சொல்லுங்கள்' செய்தியினைப் படித்தேன்... மனம் கனத்தது.

"குட்காவை எதிர்த்தால் கொலை முயற்சி வழக்கா?' செய்தியின் மூலம் அ.தி.மு.க. சர்வாதிகார மூர்க்கம் தெரிகிறது.

"நிர்மலாவோடு நிறுத்து! கவர்னரை நோண்டாதே' செய்தி நக்கீரனின் புலனாய்வுப் பயணத்தின் தொடர்ச்சி. உயர்கல்வித் துறையில் முடைநாற்றம் குடலைப் பிடுங்குகிறது. அதைச் சுத்தம் செய்யவேண்டும், அதற்கான தூண்டுதல்தான் இச்செய்தி.

மொத்தத்தில்... பக்கத்துக்குப் பக்கம் வாசகன் மூளைக்கு உணவு. சமூக அக்கறையோடு வழங்கப்படும் விருந்து பாயசமாக கடைசி இரு பக்கங்களில் வலைவீச்சு... சூப்பர்!

வாசகர் கடிதங்கள்!

வசைச் சொற்களால் வாழ்த்து!

தமிழக அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாய் மத்திய அரசின் அடமானத்திற்குள் சென்றுகொண்டே இருக்கின்றன. மக்களின் உயிருக்குத்தான் உத்தரவாதமில்லை என்றால், வேல்முருகன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கான போலீஸ் பாதுகாப்பிலும் குந்தகமா? மைய அரசை சார்ந்து வாழ்கிற எடப்பாடி அரசின் ஒட்டுண்ணித்தனத்தை வசைச் சொற்களால் எத்தனைமுறைதான் வாழ்த்துவது?

-சீ.புகழேந்தி, மணப்பாறை

சொல்லாததும் பொய்யோ?

"பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையும் பொய்யாகும்' என்கிற கோயபல்ஸின் சுயநல மொழியை நிரூபணம் செய்கிறது, ஜெ. மரணம் குறித்த "சொல்வதெல்லாம் பொய்' கட்டுரை.

-ஆர்.அன்பரசன், ஏத்தாப்பூர்.

Parvai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe