"நக்கீரன்' காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் மனம் பெருமை கொள்கிறது. என் பலம் குறையும்போது நக்கீரனை வாசிக்கிறேன். மனம் வலிமை கொள்கிறது. ஒவ்வொரு இதழையும் படித்து முடித்து அதன் புலனாய்வுப் பதிவுகளைப் பலரிடமும் எடுத்துச் சொல்வதில் எனக்குப் பெருமை.
எந்தவொரு சூழ்நிலையிலும் பின்வாங்காது, சமரசம் செய்துகொள்ளாது, முன்னோக்கித் திடமாகச் செல்கிறது "நக்கீரன்.' புலனாய்வுடன் நின்றுவிடாமல், உளவியல் பார்வையையும் தனது செய்திகளில் மிளிரச் செய்கிறது.
ஊழலுக்கு, முறைகேடுகளுக்கு, காவல்துறையின் அத்துமீறல்களுக்கு சாட்டையடி கொடுப்பதில், நக்கீரனுக்கு இணை வேறுண்டோ? "நக்கீரன்' என் குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது. "நக்கீரன்' வாசகர்களை அதிகப்படுத்துவதில் எனக்கும் பங்குண்டு. என் கடமையும் கூட!
2018, நவ.03-06 இதழ்:
கலைஞானத்தின் எழுத்தாளுமையும் விஷயதானங்களும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவன. "மதுவிலக்கு எஸ்.பி.யின் மன்மத லீலைகள்'! "ஊழல் தடுப்புத் துறையின் ஊழல்', வேலியே பயிரை மேய்ந்ததற்குச் சான்றுகள்.
காமப்பசிக்காக பெண்களை வேட்டையாடும் எமதர்மச் சாமியாரை தோலுரித்துக் காயப் போட்டிருக்கிறீர்கள்.
தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக, மீண்டும் விழித்தெழ வேண்டிய சூழலை முன்னெச்சரிக்கையாக கூறியதற்கு சல்யூட்!
மாவலி பதில்கள் வாயிலாக உண்மை கண்டறியும் சோதனைகளின் உண்மையான ரிசல்ட்டை கண்டடைய முடிகிறது. நக்கீரனின் இதயமான ராங்-கால் ஸ்ட்ராங்காக இயங்கிக்கொண்டிருக்கிறது.
_________________
வாசகர் கடிதங்கள்!
உள்ளே-வெளியே!
லாட்டரி ராஜாங்கம் நடத்திய எஸ்.வி.ஆர்.மனோகர், சகல மரியாதையோடு சிறையிலிருந்து வெளியே வந்தார். பொறுப்பு டி.சி. மயில்வாகனன் சமயம் பார்த்து மீண்டும் அவரை "உள்ளே' அனுப்பி வைத்திருக்கிறார். யார்ட்ட...?
-ப.பூபதிபாண்டியன், நாகர்கோயில்.
லேசா லேசா!
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பேட்டி, பொருளாழம் மிக்கதாகவே இருக்கிறது. முதிர்ச்சியான அவரது பேச்சில் தி.மு.க. மீதான அபிப்பிராயம் லேசாக தலைகாட்டுகிறதோ?
-கோ.ஆறுமுகம், திருப்பத்தூர்.