Advertisment

பார்வை! -கவிதா திரைப்பட இயக்குநர்

parvai

parvai

சீறிப்பாயும் சிங்கம்போல மிரட்டலாகவும் தோகை விரித்து ஆடும் மயில் போல அழகாக வும் இருப்பது தான் நமது "நக்கீரன்' பத்தி ரிகை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது "நக்கீரன்' படிக்கத் தொடங் கினேன். பல பத்திரிகைகளை படித்து, சிரித்து ரசித்துவந்த நான் நக்கீரனை படிக்கும்போது, என் கால் மீது கால் போடத் தொடங்கினேன். புரட்சிகரமான எழுத்து நேர்மையான பதிப்புகள் கவனம் சிதறாமல் படித்தேன். நக்கீரனை தொடர்ந்து படிக்க எனது பாடப்புத்தகத்தில் சில புரட்சிக்காரர்களைப் பற்றி படிக்காமல் கட்டுரை எழுதினேன்

parvai

சீறிப்பாயும் சிங்கம்போல மிரட்டலாகவும் தோகை விரித்து ஆடும் மயில் போல அழகாக வும் இருப்பது தான் நமது "நக்கீரன்' பத்தி ரிகை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது "நக்கீரன்' படிக்கத் தொடங் கினேன். பல பத்திரிகைகளை படித்து, சிரித்து ரசித்துவந்த நான் நக்கீரனை படிக்கும்போது, என் கால் மீது கால் போடத் தொடங்கினேன். புரட்சிகரமான எழுத்து நேர்மையான பதிப்புகள் கவனம் சிதறாமல் படித்தேன். நக்கீரனை தொடர்ந்து படிக்க எனது பாடப்புத்தகத்தில் சில புரட்சிக்காரர்களைப் பற்றி படிக்காமல் கட்டுரை எழுதினேன். நூற்றுக்கு நூறு வாங்கினேன்.

Advertisment

கர்நாடக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் வீரப்பன். அவரை நேரில் சந்தித்து அவரது உண்மையான விஷயங் களை கூறிய பிறகுதான் மக்களுக்கே தெரியவந்தது; தெளியவந்தது. 1988-ல் ஏப்ரல் 20-ந் தேதி "நக்கீரன்' தொடங்கப்பட்ட நாளை பத்திரிகை எழுத்தாளர் தினமாக கொண்டாடவேண்டும். திருவள்ளுவர் எழுதிய குறள் நெறி "நக்கீரன்'. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. யார் என்ன சொன்னாலும், உண்மைகளை தெரிந்து செயல்படுவதுதான் நமது "நக்கீரன்'. நாகரிகத்தின் வளர்ச்சிதான் கைபேசியும் இணையதளமும். இளைய தலைமுறையினர் நக்கீரனை படிக்க ஆரம்பித்தாலே தெளிவாகிவிடுவார்கள். படிக்கட்டுகளில் ஏறாமலேயே நம்மை அழைத்துச் செல்லும் எஸ்கலேட்டர்போல் "நக்கீரன்' நம்மை உயரத்துக்குக் கொண்டுசெல்லும்.

Advertisment

2018, அக்.31-நவ.-02 இதழ்:

நினைக்கும்போதே ஈரக்குலையை நடு நடுங்கவைக்கிறது சேலம் மாவட்ட ஆத்தூரில் கொடூர மிருகத்தால் படுகொலை செய்யப்பட்ட -ராஜலட்சுமியின் தலை துண்டாக்கப்பட்ட செய்தி. மிகக்கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட் டால்தான் அப்பாவிச் சிறுமிகள் சீரழிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவது தடுக்கப்படும்.

"மீ டூ' விவகாரத்திலுள்ள பின்னணி அரசியலை நக்கீரன் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டிவருவது பாராட்டுக்குரியது. பெண்களுக்கு இந்நாட்டில் பாதுகாப்பு தேவை. அதேநேரத்தில், பழிவாங்கி பலிவாங்குவதாக "மீ டூ' அமைந்துவிடக்கூடாது.

________________

வாசகர் கடிதங்கள்!

கேரக்டர்களின் சீக்ரெட்!

பன்முகத் திரைக்கதைகளின் ஆளுமையான அய்யா கலைஞானம் அவர்களின் "கேரக்டர்' தொடர், இன்னொரு பரிமாணத்தில் "சினிமா சீக்ரெட்'டுகளை அறுசுவையுடன் பந்தி வைக்க வருவது மகிழ்ச்சி.

-ரவி, திரைப்பட உதவி இயக்குநர்,வடபழனி, சென்னை.

உயிர் வதைக்கு முகூர்த்தம்!

பன்னாட்டு மருந்துகளைக் கடந்து தற்போது "ரேஷன் அரிசி சர்வே' வடிவில் மனித உயிர்களை சோதனை எலிகளாக்க முகூர்த்தம் பார்க்கிறார்களா? இதற்காக அரசோடு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டாலும் கூட மக்களுக்கான திட்டம் என்கிறபோது விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பாவம், அன்றாடங்காய்ச்சிகளை நினைக்கும்போதே தலை "கிர்'னு சுத்துது.

-எஸ்.துரைக்கண்ணு, தர்மபுரி.

nkn091118
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe