parvai

"உலகமே அழிந்துவிட்டது. நான் என் வீட்டு அறையினுள் பீதி படிந்த முகத்தோடு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது...' என்கிற மாதிரியான திகில் நிறைந்த கற்பனைக் கதைகளை நான் படித்துக்கொண்டிருந்தபோதுதான் என் அப்பா மூலம் "நக்கீரன்' எனக்கு பரிச்சயமானது.

அந்த "நக்கீரன்' நிறைய திகில் நிறைந்த உண்மைக் கதைகளை எனக்கு சொல்லியது. பின்னாளில் ஒரு மாபெரும் கதைசொல்லியாக "நக்கீரன்' எனக்குள் ஒரு பிம்பமானது . ஆட்டோ சங்கர் முதல் நித்தியானந்தா வரையிலான கதைகள் சூப்பர்.

அடேங்கப்பா... "கவர்னர்…தாத்தா அல்ல' என "நக்கீரன்', நிர்மலாதேவி மூலம் சொல்லியதற்கு… தேசத்துரோக வழக்கில் ஆசிரியர் அண்ணனை கைதுசெய்ய அவசர அவசரமாய் ஒரு பொய்யான கதை சொன்னார்களே... கதையின் போக்கையே மாற்றிவிட்ட கதையது.

Advertisment

உண்மைக் கதைகளின் நாயகனாக ஆசிரியர் அண்ணன் நின்றுகொண்டிருக்கிறார்... இன்னும் எத்தனை கதைகளை அண்ணன் படிக்கத் தருவார்? என்கிற ஆவலில் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன்.

2018, அக்டோபர் 27-30 இதழ்:

"புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' என "மைக்' டைசன் கதை ஆரம்பத்தில் இருந்து விறுவிறு ரக வேகம் இறுதிவரை.

Advertisment

மாவலி பதில்களில் "ஜெயலலிதா செத்துப் போன விவகாரத்தில்தான் உண்மை நிலை தெரியவில்லை... அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வைக்கப்படவுள்ள சிலையிலாவது ஜெ.வின் உண்மை முகம் மீண்டுள்ளதே' என ஒரு குறுங்கதையை சொல்லியிருப்பதில் உண்மை தெறிக்கிறது.

"மீ டூ' விவகாரத்தில் வைரமுத்து, சின்மயியின் உண்மைக் கதை, அமலாபால் -சுசி கணேசனின் இடையிலான உண்மைக் கதை... அது "நக்கீரன்' மட்டுமே சொல்ல முடிந்த கதை

"வேஸ்ட்டான ஜாலி டூர்' கதையில் தினகரன் அணியினர் கொடுத்த புனித நீராடல் கதை புத்தம் புதுசு.

இறுதியாய் "செங்கோட்டையன் முதல்வர்' என்கிற கட்டுரை, எடப்பாடிக்கு கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் கதை.

_______________

வாசகர் கடிதங்கள்!

ஓங்கி எழுக!

ஜெ. ஆட்சிக் காலத்திலிருந்தே கலைஞர் அரசின் பல நல்ல திட்டங்களை முடக்குவதில் பயிற்சிபெற்ற அரசு -அ.தி.மு.க. இத்தகைய அரசின் கேளாச் செவிக்கு எதிராக "கலைஞர் செம்மொழி விருதுகள்' வழங்கும் விழா குறித்து எதிர்க்கட்சிகளும் தமிழ் ஆர்வலர்களும் ஒன்றுதிரண்டு ஓங்கி குரல் எழுப்பி... கட்டுரையாளர் இலக்குவனார் திருவள்ளுவனின் கருத்தை செயல்படுத்த வேண்டும்.

-அ.சோழராஜன், திருவாரூர்.

அன்றாட திருட்டு!

இயற்கைச் செல்வமான மணல் கொள்ளைக்கு அரசும் உயரதிகாரிகளும் உறுதுணையாக செயல்படும்வரை அது வேகத்தடையின்றி இயங்கும் ஓர் அன்றாட திருட்டாகவே இருக்கும்.

-எஸ்.சந்திரன், ஆத்தூர்.