1996-2000-ஆம் ஆண்டு தி.மு.க. சார்பில் என் தந்தை திருவேங்கடம் ஒன்றிய குழு தலைவராக இருந்தார். அப்போது வீட்டுக்கு நக்கீரன் வாங்கி வருவார். அப்போது நான் பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு நக்கீரன் அறிமுகமானது. 1996-99-ல் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பயிலும்போது, கல்லூரி மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது முதல் நக்கீரனை நானே வாங்கத் தொடங்கினேன். அப்போது ஆட்டோ சங்கர், வீரப்பன் விவகாரம் பி
1996-2000-ஆம் ஆண்டு தி.மு.க. சார்பில் என் தந்தை திருவேங்கடம் ஒன்றிய குழு தலைவராக இருந்தார். அப்போது வீட்டுக்கு நக்கீரன் வாங்கி வருவார். அப்போது நான் பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு நக்கீரன் அறிமுகமானது. 1996-99-ல் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பயிலும்போது, கல்லூரி மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது முதல் நக்கீரனை நானே வாங்கத் தொடங்கினேன். அப்போது ஆட்டோ சங்கர், வீரப்பன் விவகாரம் பிரபலம். நக்கீரன் படிக்கும்போது அதிலுள்ள புலனாய்வுச் செய்திகளை பார்த்து தைரியமான பத்திரிகை என வியந்திருக்கிறேன்; வியக்கிறேன். நக்கீரன் ஆசிரியரை ஒருமுறையாவது நேரில் பார்த்துப் பேச வேண்டும் என அப்போதிலிருந்தே ஆசை. சில வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் நண்பரின் குடும்ப நிகழ்வுக்கு வந்திருந்தபோதுதான் அவரைப் பார்த்தேன். தயங்கியபடியே அருகில் சென்று பேசினேன். எவ்வளவு பெரிய மனிதர், எந்தவித பந்தா, பகட்டுமில்லாமல் வெகுசாதாரணமாக நண்பர்போல் உரையாடியது அவர் மீதான மரியாதையை பலமடங்கு அதிகப்படுத்தியது.
2018, செப்.29-அக்.2 இதழ்:
"திருமுருகன் காந்தி உயிருக்கு குறி' என்கிற தலைப்பில் உள்ள அந்தச் செய்தியில் முகிலன், அரசாங்கம் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவர் குற்றச்சாட்டுகளை சொன்ன அடுத்த சிலநாளில் சிறைஉணவை உண்டதில் பிரச்சனையாகி மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் அட்மிட்டான செய்தி கேட்டு நெஞ்சம் பதறுகிறது. தி.மு.க.வை திட்டுறதுக்கு எந்தக் காரணமும் கிடையாதுங்கறதால எப்போதோ நடந்த ஈழப் பிரச்சனையை எடுத்துக்கிட்டு ஊரெல்லாம் போராட்டம் செய்திருக்கு, ஆளும்கட்சியா இருக்கற அ.தி.மு.க. ஆட்சி நடத்த திறமையில்லாதவங்க வீட்டுக்கு போயிடணும்.
நேர்மையா விசாரிக்கும் அமைப்பு என சி.பி.ஐ.யை மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அமைப்பிலேயே அதிகாரத்தைக் கைப்பற்ற அதிகாரிகள் துடிக்கிறார்கள் என்கிற செய்தி, அந்த அமைப்பின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாவலி பதில்களில் ஆன்மிக அரசியல் குறித்த கேள்வி-பதில்கள் பல வரலாறுகளை உள்ளடக்கியதாக இருக்கு.
வாசகர் கடிதங்கள்!
கொலை நுணுக்கங்கள்!
வடநாட்டுப் பெண்ணை துண்டு துண்டாக... அய்யோ வாசிக்கும்போதே கண்கள் பிதுங்குகின்றன. பிணவாடை ஊர்வலம் வரக்கூடாது என்பதற்காக உடலை தீயில் வாட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற கொலை நுணுக்கங்கள் சமூகவிரோதக் கும்பல்களுக்கு சாதகமாகவே அமையலாம்.
-சி.அய்யப்பன், சென்னை-37
ராஜ உண்மைகள்!
ஜெ.வின் போயஸ் கார்டன் பணிப்பெண்களிடம் விசாரணை நடத்தினால் பல ராஜ உண்மைகள் வெளிப்படலாம்.
-தே.சுகுணா, புதுக்கோட்டை