Advertisment

பார்வை!-சிவ இளங்கோ

parvai

parvai

Advertisment

"மக்கள் சக்தி இயக்கம்' தொடங்கியதிலிருந்து நக்கீரனை இன்னும் அதிகமாக படிக்க ஆரம்பித்தேன். எதையும் துணிச்சலாக எழுதுவது மிகுந்த தன்னம்பிக்கையூட்டுவதாக இருக்கும்.

ஜெ.மரணத்தில் மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தொடங்கி ராம்குமார் சந்தேக மரணம், பெரிய மனிதர்கள் போர்வையில் உலாவும் சின்னத்தனமான மனிதர்களுக்கு அனுப்ப தவறான பாதைக்கு கொண்டுசெல்ல முயற்சித்த நிர்மலாதேவி விவகாரம்வரை நக்கீரனின் புலனாய்வு வியக்கத்தக்கது. மற்ற புலனாய்வு இதழ்கள் சூசகமாக எழுதும் தகவல

parvai

Advertisment

"மக்கள் சக்தி இயக்கம்' தொடங்கியதிலிருந்து நக்கீரனை இன்னும் அதிகமாக படிக்க ஆரம்பித்தேன். எதையும் துணிச்சலாக எழுதுவது மிகுந்த தன்னம்பிக்கையூட்டுவதாக இருக்கும்.

ஜெ.மரணத்தில் மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தொடங்கி ராம்குமார் சந்தேக மரணம், பெரிய மனிதர்கள் போர்வையில் உலாவும் சின்னத்தனமான மனிதர்களுக்கு அனுப்ப தவறான பாதைக்கு கொண்டுசெல்ல முயற்சித்த நிர்மலாதேவி விவகாரம்வரை நக்கீரனின் புலனாய்வு வியக்கத்தக்கது. மற்ற புலனாய்வு இதழ்கள் சூசகமாக எழுதும் தகவல்களைக்கூட நக்கீரன் "ரா' போல் புலனாய்வு செய்து, ராவாக எழுதிவிடுகிறது.

அரசு விளம்பரங்கள் இல்லாமல் இத்தனை ஊழியர்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்தின் ஊழல்களை எழுத்தின் மூலம் தட்டிக்கேட்பது சாதாரண விஷயமல்ல. கலைஞரைப்பற்றி எழுதினால் பெரும்பாலும் "முரசொலி'யில் விளக்கக் கட்டுரை வரும். ஆனால், ஜெயலலிதாவைப் பற்றி எழுதினால் வழக்குதான் வரும். போலீஸும் வரும்... மிரட்டல்களும் வரும். அப்படிப்பட்ட சூழலில்கூட அ.தி.மு.க.வின் ஊழல்களை எழுதி... புலனாய்வு இதழின் கடமையை பணியை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தது; இருக்கிறது நக்கீரன்.

2018, செப்டம்பர் 26-28 இதழ்:

Advertisment

அனைத்து சாதி மக்களும் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்பதை மறந்து ஒரு சாதிசங்கத் தலைவரைவிட மோசமாக கருணாஸ் பேசிய வன்முறைப் பேச்சுக்கு அவரை கைது செய்ததில் தவறில்லை. ஆனால், இதேபோல் பேசிய ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுவரும் சூழலில்... "கைதுக்குப் பின்னால் கூவத்தூர் ரகசிய வீடியோவும் இருக்கிறது' என்ற செய்தி வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது.

நக்கீரனில் நான் மிகஅதிகமாக விரும்பிப் படிப்பது ராங்-கால் பகுதிதான். பல்வேறு அரசியல் மற்றும் அரசு சார்ந்த ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் பகுதி அது. ரஃபேல் விமான ஊழல் குறித்து கிழித்து தொங்கவிட்டிருக்கிறது.

குட்கா விவகாரத்தில் சிக்கப்போகும் அதிகாரிகள் எழுதியிருப்பது சிறப்பு.

ஆவின் நிர்வாகத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.

_________________

வாசகர் கடிதங்கள்!

நாற்காலிகளின் நையாண்டி!

"மழை வருது மழை வருது குடை கொண்டு வா; மாநாட்டில் ஆளின்றி நனைகின்றோமே' இப்படித்தான் தினகரனுக்கு எதிரான அ.தி.மு.க.வின் போட்டிக் கூட்டத்தில் நாற்காலிகள் நையாண்டி இசைத்திருக்கும்.

-எம்.பாண்டியன், சீர்காழி.

நடவடிக்கையே நியாயம்!

ஆட்சியர் வீரராகவ் வீட்டு வேலைக்கு அங்கன்வாடி ஊழியர்களை அனுப்பிய திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி மீது துறை சார்ந்த கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொருளாதாரப் பின்னடைவைச் சாதகமாக்கிக்கொண்டு பெண்ணே, பெண்ணுக்கு வில்லங்கமாக மாறினால் நியாயம் இல்லைதான்.

-வா.அருள்மொழி, கடலூர்.

nkn051018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe