பார்வை!-கோடங்குடி ஆர்.சுப்பிரமணியன்

parvai

parvai

க்கீரனுக்கு ஏற்பட்ட சோதனைகள், வேதனைகள், காயங்கள் ஏராளம். அப்போதுங்கூட மக்களுக்காக உழைப்பதற்கு நக்கீரன் சுணங்கியதில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக எங்களோடு பயணிப்பதில் தோழன். தவறுகளை தட்டிக்கேட்பதில் தீப்பொறி. உண்மைகளை உரக்கச் சொல்வதில் ஒலிபெருக்கி. மேடைகளில் பேச முடியாத விஷயங்களைக்கூட எழுத்தில் வார்த்த சிற்பி. பத்திரிகை வரலாற்றில் தனக்கென தனிஇடம் பதித்துள்ளது நக்கீரன்.

2018, செப். 22-25 இத

parvai

க்கீரனுக்கு ஏற்பட்ட சோதனைகள், வேதனைகள், காயங்கள் ஏராளம். அப்போதுங்கூட மக்களுக்காக உழைப்பதற்கு நக்கீரன் சுணங்கியதில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக எங்களோடு பயணிப்பதில் தோழன். தவறுகளை தட்டிக்கேட்பதில் தீப்பொறி. உண்மைகளை உரக்கச் சொல்வதில் ஒலிபெருக்கி. மேடைகளில் பேச முடியாத விஷயங்களைக்கூட எழுத்தில் வார்த்த சிற்பி. பத்திரிகை வரலாற்றில் தனக்கென தனிஇடம் பதித்துள்ளது நக்கீரன்.

2018, செப். 22-25 இதழ்:

"பெட்ரோல் அடக்கவிலை 40, மோடி விலை 100 -வயிறெரியும் மக்கள்!' என்ற செய்தியின் மூலம் மோடி ஆட்சியின் மோசடிகளை மக்கள் குரலாக சொல்லியுள்ளது. மோடி வித்தை இனி மக்களிடம் எடுபடாது.

"பூமராங் ஆகும் ஜெ. மரண விசாரணை' செய்தி மூலம் ஆணையத்தில் விசாரிக்கப்படும்போது பலர் சொல்லும் தகவல்களைக் கேட்டு தலை சுற்றுகிறது. யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என புரியாமல் குழம்பவேண்டியுள்ளது. குழப்பத்தை ஆணையம் தெளிவுபடுத்துமா? என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

"உள்ளாட்சியை ஏப்பம்விடும் அதிகாரிகள்' என்ற செய்தி மூலம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதில் அரசு ஒதுக்கிய நிதிகளை தங்கள் இஷ்டம்போல சூறையாடி வருகின்றார்கள் அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும். யாரும் கேள்வி கேட்கக்கூட முடியாத நிலை. எங்களைப் போன்றவர்கள் நடத்தும் போராட்டங்களைப் பற்றி கண்டுகொள்ளாத சொரணையற்ற அரசும் அதிகாரிகளும் உள்ளனர்... என்ன செய்வது?

தினகரனிடம் போனால் பணம், பதவி கிடைக்கும் என்று பறந்து தாவியவர்கள் அங்கே ஏமாந்துபோய் மீண்டும் எடப்பாடி அணியிடம் ஓடிவந்தால் ஆட்சி முடிவதற்குள் எப்படியாவது சம்பாதிக்கலாம் என்று தாவுகிறார்கள். எல்லாம் தாவும் படலமாகவே உள்ளது.

____________________

வாசகர் கடிதங்கள்!

பதரான பழிச்சொல்!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு தன் மீதான "கிரையோஜெனிக்' பழிச்சொல்லை பதராக்கியிருக்கிறார். வழக்காடுவது குறித்து தந்தையிடம், மகள் வைத்த ஊக்கமான வேண்டுகோள், தலைமுறை கடந்த கௌரவத்தைப் பெற்றுத் தந்துவிட்டது.

-வி.மகேந்திரன், அரியலூர்.

பாசிடிவ் மின்னல்!

"த்ரிஷாவுக்கு திட்டு, சிம்புவுக்கு ரெட்டு? அதிகாரிகளுக்கு கொட்டு, சிவகார்த்திக்கு மெட்டு' என டூரிங் டாக்கீஸின் ஒவ்வொரு செய்தியிலும் தெறிக்கிறது பாசிடிவ்வான மின்னல் வெட்டு.

-எச்.அஸ்கர்அலி, மதுரை.

nkn021018
இதையும் படியுங்கள்
Subscribe