madura

தழியல் உலகில் வளைந்து கொடுக்காத கூர்வாள் ஒன்று உளதென்றால் அது நக்கீரனே. தொழில் அறத்தை மீறாமல், பணச் சம்பாத்தியம் மட்டுமே பயண நோக்கம் என்று பதுங்காமல், மசாலாக் கலவைகளால் மயங்கி விழாமல் உலகிற்கு உண்மையை உரக்கச் சொல்வதையே இலக்காகக் கொண்டு ஆளுமையை வெளிப்படுத்துகிறது நக்கீரன்.

வளிபுகா இடத்திற்குள்ளும் நக்கீரன் பேனா வசதியாகப் போய் வந்து கண்டதைக் காட்சிப்படுத்தி விடுகிறது.

நக்கீரன் என்றால் குற்றம் காண்பவர், களைபவர் என்பதாலோ என்னவோ, இதழில் பெரும்பாலும் குற்றச் செய்திகளே கொலுவாய் பளிச்சிடுகின்றன.

Advertisment

நக்கீரன் உலா களைப்பின்றி, அச்சமின்றித் தொடர்கின்றது என்றால் இதற்கு எத்தகைய உழைப்பும், உறுதியும் வேண்டும்? தொடரட்டும் மக்கள் தொண்டு.

2018 செப்.12-14 இதழ்:

""வில்லங்க குட்கா! வில்லனாகும் போலீஸ்!'' அதிகாரத்தின் சூழ்ச்சியும் கைமாறும் காட்சியும் படிக்கும்போதே தலை சுத்துது.

Advertisment

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழுபேரும் தங்கள் வாழ்நாளில் பாதியை சிறையில் கழித்தவர்கள். இவர்களை விடுதலை செய்யும் வேலையை நீதிமன்றமே தமிழக அரசின் கையில் கொடுத்தது. "மோடியுடன் மோதியுள்ளாரா எடப்பாடி!' சபாஷ் முதுகெலும்பின் வலுவை நிரூபிக்கட்டும்.

மாவலி கேள்விகளும் பதில்களும், இலக்கிய நயத்தோடும் ஆன்மிக அலசல்களோடும் பதிவாகின்றன.

மொத்தத்தில் எல்லாப் பக்கங்களிலும் இளமை ததும்புகிறது.

வாசகர் கடிதங்கள்!

"சாதி'க் கிளி!

காதலன் கோகுல்ராஜின் இறப்புக்குப் பிறகு எவ்வளவோ கால மாற்றங்கள். இந்நேரம் காதலி சுவாதி, சாதியில் உள்ள சட்ட திட்டங்களின் கட்டுப்பாட்டுக்கு கிளிப்பிள்ளையாகியிருப்பார் என்பதுதானே நிஜம்.

-எம்.கே.ஆண்டனி, சிவகாசி.

ஜீரோ பேலன்ஸில் மோப்ப சக்தி!

தமிழக உளவுத்துறையின் மோப்ப சக்தி ஜீரோ பேலன்ஸில் இருப்பதாகப் புலம்புகிறார் முதல்வர். ஆட்சி நிலைப்புத் தன்மைக்கு வரும் ஆபத்துகூட உளவாளிகள் மூலம் முன்கூட்டியே தெரியாமல் போய்விடுமோ என்கிற அவரது மைண்ட் வாய்ஸும் கேட்கத்தான் செய்கிறது. டி.ஜி.பி. ரேஸ் செம பாஸ்ட்.

-கரு.ஆறுமுகம், கள்ளக்குறிச்சி.