Advertisment

பார்வை!-ஞா.ராஜா சமூக ஆர்வலர்

parvai

parvai

Advertisment

ரு நியாயத்தை அரசு செய்ய மறுக்கும்போது, அந்தப் பொது நியாயத்திற்காகப் போராடும் இளைஞர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறைக்கு அனுப்பியபோது, "அவர்கள் தீவிரவாதிகள் இல்லை போராளிகள்' என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டியது நக்கீரன். அன்றைய கால கட்டத்தில் இருந்து தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது... இன்றுவரைக்கும் தொடர்கிறது. அரசியல், பணபலம், இயக்கங்கள் வைத்து மட்டுமே பத

parvai

Advertisment

ரு நியாயத்தை அரசு செய்ய மறுக்கும்போது, அந்தப் பொது நியாயத்திற்காகப் போராடும் இளைஞர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறைக்கு அனுப்பியபோது, "அவர்கள் தீவிரவாதிகள் இல்லை போராளிகள்' என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டியது நக்கீரன். அன்றைய கால கட்டத்தில் இருந்து தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது... இன்றுவரைக்கும் தொடர்கிறது. அரசியல், பணபலம், இயக்கங்கள் வைத்து மட்டுமே பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களை மட்டுமே நம்பி நடக்கும் பத்திரிகை நக்கீரன். தமிழகத்தில் நடக்கும் அதிரடி தகவல்களையும் விளிம்புநிலையில் இருக்கும் மக்கள், அதிகாரவர்க்கத்திடம் சிக்கி சீரழியும்போது அவர்களின் நிலையையும் வெளி உலகத்திற்கு எடுத்துச்சொல்வதில் நக்கீரனுக்கே முதலிடம்.

2018, மே 02-04 இதழ் :

"நானும் கவர்னரும்! -விவரித்த நிர்மலா!', "மதுரைப் பல்கலையில் மன்மதப் புள்ளிகள்!' என தொடர்ந்து நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர்வரை தொடர்பு என்பதை மற்ற ஊடகங்கள் வெளியிட மறுத்துவரும் நிலையில் நக்கீரன் மட்டுமே, முருகன் மனைவியின் நேரடி பேட்டியை வெளியிட்டிருப்பது சிறப்பு. கடற்கரையோர டெல்டா பகுதிகளில் ராணுவத்தை இறக்கி மக்களை அச்சப்பட வைத்திருப்பது. பற்றிய செய்தி சமூக அக்கறைக்கான ஓர் அலசல். ராங்-கால் பகுதியில் "ஸ்டாலின் போடும் கூட்டணி ரூட்', "கமலின் அபாய சங்கு', "தேர்தலுக்கு ரெடியாகும் சகாயம் ஐ.ஏ.எஸ்.' என ஒவ்வொருவருக்கும் இன்றைக்கு தனக்கான செய்தி என்ன இருக்கிறது என்பதைக் காட்டிப் படிக்க வேண்டிய தகவல்களின் தொகுப்பாக இருக்கிறது நமது நக்கீரன்.

வாசகர் கடிதங்கள்!

மூச்சுத்திணறும் மனிதம்!

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று சொல்லிக்கொண்டு மதங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறோம். இதன் இன்னொரு இடைச்செருகலாகப் பார்க்கிறது "தனி மதம் கேட்கும் வள்ளலார் பக்தர்கள்' சம்பவம். இத்தகைய மதங்களின் நெருக்கடியில் மூச்சுத்திணறும் "மனித ஒற்றுமை' எங்கே, எப்படி கிளை பரப்பும்?

-எம்.ஆர்.சம்மந்தன், குடியாத்தம்

ஆக்ரோஷ விசில்!

Advertisment

"20 ரூபாய் டோக்கன்' தினகரனுக்கு எதிராக ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஓட்டுக்குப் பணம் தராததைக் கண்டித்து ஆக்ரோஷத்துடன் விசிலடித்திருக்கிறார்கள். மாறாக, தொகுதி சீரமைப்புக் குறைகளுக்காக "குக்கர்' தினகரனை முற்றுகையிட்டிருந்தால் ஹோலிதான்.

-ஆ.பி.சரசு, ஒட்டன்சத்திரம்.

Parvai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe