Advertisment

பார்வை!-வழக்கறிஞர் சி.இராஜு

parvai

parvai

Advertisment

சிரியர் நக்கீரன்கோபால், பாசிச ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக நடத்திய போராட்டம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள்கூட போராடத் தயங்கிய அந்த காலகட்டத்தில் தனக்கும், தனது பத்திரிகைக்கும் ஆபத்து நேரிடும் என்ற நிலையிலும் ஜெயலலிதாவிடம் சரணடையாத போர்க்குணம் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்கால ஜெயலலிதாவின் ஆட்சியை ம.க.இ.க "இருண்ட காலம்' என்று பரப்புரை இயக்கம் நடத்தியது, நக்கீரன் இதழ் அதே கருத்தை நீதிமன்றம் மூலமும

parvai

Advertisment

சிரியர் நக்கீரன்கோபால், பாசிச ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக நடத்திய போராட்டம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள்கூட போராடத் தயங்கிய அந்த காலகட்டத்தில் தனக்கும், தனது பத்திரிகைக்கும் ஆபத்து நேரிடும் என்ற நிலையிலும் ஜெயலலிதாவிடம் சரணடையாத போர்க்குணம் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்கால ஜெயலலிதாவின் ஆட்சியை ம.க.இ.க "இருண்ட காலம்' என்று பரப்புரை இயக்கம் நடத்தியது, நக்கீரன் இதழ் அதே கருத்தை நீதிமன்றம் மூலமும், பத்திரிகை மூலமும், "சேலஞ்ச்' புத்தகம் மூலமும் வெளிப்படுத்தியது.

புதுக்கூரைப்பேட்டை ஆணவக் கொலை மற்றும் பல லாக்கப் படுகொலைகளின் கொடூரங்களை தயவு தாட்சண்யமின்றி வெளியிட்டு நீதியின் பக்கம் நக்கீரன் நின்றது.

டாஸ்மாக் போராட்டத்தை மக்கள் அதிகாரம் முன்னெடுத்து வழக்கு, அடக்குமுறைகளை சந்தித்த போதெல்லாம் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு "சர்வாதிகாரத்துக்கெதிராக மக்கள் அதிகாரம்' என தலைப்பிட்டது. மக்கள் மொழியில் கட்டுரைகளை எழுதுவதோடு அல்லாமல் கட்டுரைகளின் தலைப்புகள் மக்களின் உணர்வுகளை, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கின்றனர்.

Advertisment

நக்கீரன் ஆசிரியர் கோபாலை ஜெயலலிதா அரசு பொடாவில் கைது செய்தபோது அதை தவறு என கூறியதுடன், எங்களின் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் அரங்கு கூட்டத்தினை அக்காலகட்டத்தில் நடத்தினோம்.

2018, செப். 05-07 இதழ்:

"அம்மா நாங்க என்ன பாவம் செய்தோம்' தலைப்பே இதயத்தை உலுக்குகிறது. அதுபோல் "வலைவீச்சு' குறுந்தகவல்களும், அதற்கான நையாண்டியான விமர்சனங்களும் நெற்றிப்பொட்டில் ஆணியடித்தது போல் உள்ளது. "மாவலி பதில்கள்' கலகலப்பாக கருத்துகளை பதிவு செய்கிறது.

படிக்கச் செல்லும் மாணவிகளை பகடைக்காயாக பயன்படுத்துவதை கதறும் வேளாண் கல்லூரி மாணவி கட்டுரை அம்பலப்படுத்தி, ஆத்திரத்தை வரவழைக்கிறது.

___________________

வாசகர் கடிதங்கள்!

அரிதாரத்தில் யதார்த்தம்!

அப்பா-மகன் பாசம் என்பது எதிர்காலத்துக்கான பொருளாதார பயத்தால் பிளவுபடுகிறது. விளைவு, தந்தை முதியோர் இல்லத்தில் சிறை வைக்கப்படுகிறார். இப்படிப் படம் பயணிப்பதை விமர்சிக்கும் எழுத்துக்கோணமும் அழகு. நெடுநாட்களுக்குப் பிறகு ஒரு யதார்த்த சினிமா. "60 வயது மாநிறம்' -அரிதாரம் கரையும் உறவின் முகம்.

-வ.பாலகிருஷ்ணன், திருப்பத்தூர்.

குறையும் கோல்டன் டைம்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் சேர்மன், வாரிய பதவிகளை அதிகாரத்தோடு கேட்பதிலிருந்தே எடப்பாடி ஆட்சியின் யோக்கியதையைப் புரிந்துகொள்ளலாம். ஆட்சி இருப்புக்கான "கோல்டன் டைம்' குறைந்துகொண்டே வருகிறது.

-ஆர்.கே.லோகநாதன், மணப்பாறை.

nkn140918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe